ஆயுளை குறைக்குமா அயடீன் கலந்த உப்பு?

 

உப்பிட்டவரை உள்ளளவும் நினை, உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று சிறுவயதில் உப்பை வைத்து பல பழமொழிகளை அறிந்திருப்போம்.  எந்த ஒரு உணவும் உப்பிள்ளாவிட்டால் ருசிக்காது. இவ்வதறு நாம் தினமும் பயன்படுத்தும் உப்பு சிறந்த உப்புதான் என்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவீர்கள்?

இலங்கையில் வாழும் நாம் கடலோர பகுதியின் மூலமாக பெறப்படும் உப்பையே உபயோகிக்கிறோம். கடலோரத்துல இருக்குற களப்பு பகுதியில் பாத்தி கட்டி சூரிய ஒளி மூலமாக திண்ம பொருளாக மாற்றுவதன் மூலம் இந்த கடலுப்பு உருவாகின்றது. இப்படி பெறப்படும்போது அது கட்டி உப்பாக இருக்கின்றது. இந்த உப்பில் 84 வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆனால் நாம் தினம் தினம் பயன்படுத்தும் அயடீன் கலந்த உப்பில் இந்த 84  வகையான ஊட்டச்சத்துக்களும் இல்லை.

அயடீன் குறைப்பாட்டால் தைராய்டு போன்ற குறைபாடுகள் வந்ததால் அயடீன் கலந்த உப்பை உபயோகிக்க ஆரம்பித்த நாம் இன்று அதற்கு வேறு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் இன்னும் அதையே பயன்படுத்துறோம். மேலும் இந்த தூள் உப்பு எப்படி உருவாக்கப்படுகின்றது என்று பார்த்தால், கடலுப்பிலுள்ள 84 சத்துக்களில் 83 சத்துக்களையும் அகற்றிவிட்டு மீதமுள்ள சோடியம் குளோரைட்டை மாத்திரம் வைத்து தயாரிக்கப்பட்டதே இந்த உப்பு தூள்.

இது பிளாஸ்டிக் மற்றும் PVC தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகின்றது. இதில் செயற்கை அயடீனை கலந்து நமக்கு உணவிற்காக அனுப்புகின்றனர். மேலும் கடலுப்பு விரைவாக சமிபாடடையச் செய்யும். கட்டி உப்பு காற்றில் கரையாது. ஆனால் இந்த தூள் உப்பு விரைவில் கரையக்கூடியது மற்றும் சமிபாடு அடையவும் நேரம் செல்லும். செயற்கை உப்பிலிருக்கும் அயடீன் கரையக்கூடாது என்பதற்காக அதற்கு பல செயற்கையான வேதிப்பொருட்களை சேர்க்கிறார்கள். செயற்கை அயடீன் உப்பு முறையாக வேலை செய்ய வேண்டுமென்றால் சிலேனியம் எனும் ஒரு தாதுப்பொருள் வேண்டும். அது கடலுப்பில்தான் இருக்கிறது, செயற்கை அயடீன் உப்பில் இல்லை.

இந்த செயற்கை அயடீன் கலந்த உப்பை நாம் சாப்பிடுவதால் ஜீரண கோளாறு, ஹைப்போ தைரோடிஸிம், சிறுநீரக கோளாறு, அதிகமாக வியர்வை சுரத்தல், எடை குறைதல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றது. தைராய்டு எனும் நோயை தவிர்க்க நாம் அயடீன் உள்ள உணவை உண்ணவேண்டுமே தவிர, செயற்கை அயடீன் கலந்த உப்பை உண்ணவேண்டிய அவசியம் இல்லை.

இயற்கையாகவே அயடீன் கலந்த உணவுகளாக உள்ள உருளைக்கிழங்கு, வாழைப்பழம், போஞ்சி, பால், மீன் போன்றவையே நமக்கு ஒருநாளைக்கு தேவையான 15 மைக்ரோகிராம் அயடீனை தருகிறது. இதற்கு மேலாக நாம் ஏன் மேலதிகமாக உண்ணும் உணவில் அயடீன் கலந்த உப்பை தினமும் சேர்க்க வேண்டும். அதனால் முடிந்தவரை கல்லுப்பை உணவிற்கு எடுத்துக்கொள்ளுங்கள்.