மனிதர்களுக்கு ஆபத்தான உணவுகள்

 

நாம் உண்ணும் அனைத்து உணவுகளும் ஆரோக்கியத்தை தருபவை அல்ல. அவற்றால் பல சந்தர்ப்பங்களில் தீங்கு ஏற்படுகின்றதை பல செய்திகளில் பார்க்கின்றோம். சீனாவில் ஆரம்பமாகி உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸை பாருங்கள். சில உயிரினங்களை சாப்பிட்டதால் இந்த வைரஸ் பரவியதாக தெரிவிக்கப்படுகிறது. ஆகையால் உண்ணும் உணவில் எப்போதும் அவதானம் தேவை. உண்ணும் உணவு ஆபத்தானதென தெரிந்தும் சிலர் அதனை உண்கின்றமை வேடிக்கையானது. அவ்வாறான உணவுகள் தொடர்பாக இன்று பார்ப்போம்.

 

ஆக்டோபஸ்

ஆக்டோபஸை பல நாடுகளில் விரும்பி உண்டாலும் சீனா, கொரியா போன்ற நாடுகளில் பச்சையாகவே உண்கின்றனர். இவ்வாறு பச்சையாக உண்ணும்போது, அதன் காலிலுள்ள டென்டோக்கஸ் எனும் பொருள் உள்ளே செல்லும்போது ஒட்டிக்கொள்ளும். இதனால மூச்சுவிட சிரமம் ஏற்பட்டு உயிரை விடவும் சந்தர்ப்பம் உண்டு.

 

புகு பிஷ்

ஜப்பானில் இந்த மீன் இனத்தை அதிகமாக விற்பனை செய்கின்றனர்.  இதில் ஒருவகையான விஷமுண்டு. ஆகையால் சரியான முறையில் இந்த மீனை சமைத்து உண்பது அவசியம். அதாவது வெட்டும்போதே சரியான முறையில் வெட்டி விஷத்தை அகற்ற வேண்டும்.  அவ்வாறு சரியான முறையில் விஷம் அகற்றப்படாமல் இந்த மீனை வெட்டிச் சாப்பிட்டு, வருடமொன்றிற்கு சுமார் 50 பேர் இறப்பதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பெசிக்ஹ் பிஷ்

எகிப்து நாட்டில் மாத்திரமே இந்த மீனை விற்கின்றனர். இந்த மீனும் ஒருவகையான விஷத்தன்மை கொண்டதால் இதை பிடித்து 5 நாட்கள் முறையாக காயவைத்து சாப்பிட வேண்டும். ஆரம்பத்தில் அவ்வாறு சரியான முறையில் காயவைக்காததால் பாரிய விபரீதம் ஏற்பட்டுள்ளது. அதாவது 1991 இல் ஒரு கடையில் இந்த மீனை வாங்கி சாப்பிட்ட 18 பேர் அன்றே இறந்துவிட்டனர்.

 

பிளட் கிளம்ஸ்

இந்த உணவை பொதுவாக பல நாடுகளில் விரும்பி உண்கின்றனர். கண்டதையும் உண்ண ஆசைப்படும் சீனர்கள் இதனை பச்சையாக உண்பார்கள். இதை பச்சையா சாப்பிட்டால் பல நோய்கள் வர சந்தர்ப்பமுண்டு என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதனை விற்கவும் உண்ணவும் சீனா தடைவிதித்துள்ளபோதும், சில ஹோட்டல்களில் இதனை சமைத்துப்போடுகிறார்கள். இதனை சாப்பிடுவது உங்கள் சொந்த விரும்பம் என்ற வாசகத்துடன் இதனை விற்கின்றார்கள்.

 

ஆபத்தான பால்

என்னடா ஆபத்தான உணவுப்பட்டியலில் நாங்கள் தினமும் குடிக்கும் பாலையும் சேர்த்துவிட்டார்கள் என குமுறுவது எமக்கு கேட்கின்றது. உண்மை அதுதான். ஆமாம், பச்சையாக பாலை குடித்தால் ஆபத்து. முன்பு ஆடு, மாடுகளிடம் கறந்த பாலை குடிக்கத்தருவார்கள். அதில் ஆபத்தில்லை. இப்போது பக்கெட் பாலை இரசித்து ருசித்து அருந்துகிறோம். நாம் அருந்தும் பால்மாவில் சுத்தமான பால் மட்டும்தான் உண்டு என உங்களால் கூற முடியுமா? இல்லைதானே? ஆகவே அவதானமாக இருங்கள்.