CLASSIC OMLET
தேவையான பொருட்கள்
- முட்டை – 3
- மிளகு தூள் – சிறிதளவு
- உப்பு – சிறிதளவு
- கீரை இலைகள் – சிறிதளவு
- துருவிய (CHEDDAR) செடார் சீஸ் – சிறிதளவு
- துண்டுகளாக்கப்பட்ட தக்காளி – சில துண்டுகள்
முட்டைகளை உடைத்து அதில் உப்பு, மிளகுத்தூள், சேர்த்து கலக்கவும். ஒரு பாத்திரத்தில் சிறிது வெண்ணெய் போட்டு முட்டை கலவையை போடுங்கள். அது சூடாகும் போது, தக்காளி, கீரை மற்றும் சீஸ் ஆகியவற்றை ஒம்லெட் உடன் சேர்க்கவும். இறுதியாக ஒரு மூலையிலிருந்து மெதுவாக பாதியாக மடித்து எடுங்கள்.
CLOUD EGG
தேவையான பொருட்கள்
- முட்டை – 3
- உப்பு – சிறிதளவு
- மிளகு தூள் – சிறிதளவு
முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை பிரிக்கவும். வெள்ளை கருவை நன்கு பீட் செய்து எடுத்துக் கொள்ளவும். இப்போது இந்த கலவையை எண்ணெய் தேய்த்த தட்டில் தெளிக்கவும். மேலே மிளகு மற்றும் உப்பு தெளிக்கவும். இதனை 175 செல்சியஸ் இல் 5 நிமிடம் BAKE செய்து கொள்ளவும். அதன் பிறகு வெளியே எடுத்து மஞ்சள் கருவை அதன் மீது போடவும். மீண்டும் 3 நிமிடங்கள் BAKE செய்ய வேண்டும்.
EGG NOODLES
தேவையான பொருட்கள்
- முட்டை – 3
- உப்பு – சிறிதளவு
- மிளகு தூள் – சிறிதளவு
- நறுக்கிய கீரை இலைகள் – சிறிதளவு
- துருவிய சீஸ் – சிறிதளவு
- துருவிய கரட் – சில துண்டுகள்
- வெட்டப்பட்ட வெங்காயம் – பாதி
- நொறுக்கப்பட்ட பூண்டு – சிறிதளவு
- பட்டர் – சிறிதளவு
உப்பு மற்றும் மிளகு சேர்த்து முட்டைகளை அடிக்கவும். ஒரு பாத்திரத்தில் சிறிது பட்டர் சேர்த்து அதில் முட்டையை ஒம்லெட் போட்டு அதனை மெல்லிய கீறுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். பேனில் சிறிது பட்டர் சேர்த்து அதில் வெள்ளைப்பூண்டு, வெங்காயம், கரட், கீரை மற்றும் உப்பு சேர்த்து பிரட்டிக் கொள்ளவும். இதனுள் சீஸ் சேர்த்து பின்னர் அதனுடன் வெட்டிய முட்டைகளை சேர்த்து சாப்பிடவும்.
SUPER FLUFFY OMLET
தேவையான பொருட்கள்
- முட்டையின் மஞ்சள் கரு – 3
- முட்டை வெள்ளைக் கரு – 5
- உப்பு – சிறிதளவு
- மிளகு தூள் – சிறிதளவு
- தேவைப்பட்டால் CHEDDAR செடார் சீஸ்
முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் மஞ்சளை தனித்தனியாக அடிக்கவும். இப்போது இரண்டையும் ஒன்றாக கலந்து உப்பு மற்றும் மிளகு சேர்க்கவும். இப்பொழுது பாத்திரம் ஒன்றில் பட்டர் சற்று சேர்த்து அதில் இந்த கலவையையும் துருவிய சீஸையும் சேர்த்து பொரித்தெடுக்கவும்.