மிகவும் பயனுள்ள இணையத்தளங்கள்

 

உலகில் நடக்கும் விடயங்களை இன்று உள்ளங்கையில் கொண்டுவருகின்ற பணியை இணையம் செய்கின்றது. தகவல் களஞ்சியமாக மட்டுமன்றி பல சேவைகளும் இன்று இணையத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. உலகத்தில் இன்று அவ்வாறு பல வித்தியாசமான தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் இணையத்தளங்கள் பற்றி இன்று பார்ப்போம்.

 

YOUR PASSWORD IS NOT SAFE !!!

எமக்கு மாத்திரம் சொந்தமான அல்லது இரகசியமான விடயங்களுக்கு கடவுச்சொற்களை (PASSWORD) பயன்படுத்துவோம். அப்படிப்பட்ட பாஸ்வேர்டுகளையும் சில ஹேக்கர்ஸ் ஹேக் செய்துவிடுவார்கள். அவ்வாறு எமது பாஸ்வேர்டை எவ்வளவு நேரத்தில் ஹேக் செய்வார்கள் என்பதை தெளிவுபடுத்த உருவாக்கப்பட்ட ஒரு WEBSITE தான் இது. எவ்வாறெனினும், உங்கள் பாஸ்வேர்ட் குறுகிய அல்லது இலகுவானதாக இருந்தால் ஹேக் செய்வது சுலபம். ஆகவே கடினமான, நீண்ட பாஸ்வேர்டுகளை பயன்படுத்துங்கள்.

WEBSITE LINK : https://howsecureismypassword.net/

 

FREE PHOTOSHOP வெப்சைட்

PHOTOSHOP தெரிந்தவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள வெப்சைட் ஆகும். PHOTOSHOP இல் செய்யக்கூடிய அனைத்துவிதமான EDITING வேலைகளையும் இதில் செய்யலாம். இந்த வெப்சைட் APPLICATION வடிவத்தில் வந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனாலும் இப்படி இருப்பதும் நல்லதுதான். காரணம் PHOTOSHOP போல FEATURES இருக்கும் APPஇற்கு அதிகம் STORAGE தேவைப்படும்.

WEBSITE LINK : https://www.photopea.com/

 

VIRUS TOTAL

இதில் அதிகமான ANTIVIRUS WEBSITES இருக்கின்றது. இதன்மூலம், நாம் பயன்படுத்தும் வெப்சைட் எவ்வளவு பாதுகாப்பானது என்பதை பார்த்துக்கொள்ளலாம். ஏற்கனவே எம்மிடமுள்ள FILE களில் வைரஸ் இருக்கின்றதா என்பதையும் பார்க்க முடியும். எமது FILES களை இதில்  போட்டுப் பார்க்கும் போது அதிகமான ANTIVIRUS இல் CLEAN என்று காட்டினால் உங்கள் FILE இல் வைரஸ் ஏதும் இல்லை என்று அர்த்தம். VIRUS TOTAL என்பது ஸ்பெயினின் பாதுகாப்பு நிறுவனமான ஹிஸ்பசெக் சிஸ்டெமாஸ் உருவாக்கிய WEBSITE ஆகும். இது ஜூன் 2004 இல் தொடங்கப்பட்டது. பின்னர் இது 2012 அளவில் GOOGLE INC நிறுவனத்தால் வாங்கப்பட்டது. இந்த WEBSITE மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது.

WEBSITE LINK : https://www.virustotal.com/gui/home/upload

 

CHITTI ரோபோ

இந்த WEBSITE உண்மையிலேயே மிகவும் பயனுள்ளது.  எதிர்காலத்தில் இந்த உலகம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் சொல்ல முடியாது. இப்போது நீங்கள் செய்துகொண்டு இருக்கும் வேலைகளை எதிர்காலத்தில் ரோபோக்கள் செய்யுமா? அப்படி செய்ய சந்தர்ப்பம் உண்டா, எவ்வளவு சம்பளம் கொடுக்கவேண்டும் என்பதை பார்த்துக்கொள்ள முடியும். இது பார்ப்பதற்கு நகைச்சுவையான WEBSITE போல இருந்தாலும் உண்மையில் அப்படியானதல்ல. ஏனென்றால் இதில் 60 % இற்கு மேல் காட்டினால், உங்கள் வேலையை எதிர்காலத்தில் ரோபோக்களை வைத்து செய்தால் உங்கள் நிலை அவ்வளவுதான். அதனால் இந்த வெப்சைட்டை கொஞ்சம் சீரியஸாக நினைத்துக்கொள்ளுங்கள்.

WEBSITE LINK : https://willrobotstakemyjob.com/