எதையோ கண்டுபிடிக்கப் போய் வேறு எதனையோ கண்டுபிடித்த புத்திசாலிகளின் 6 கண்டுபிடிப்புகள்

 

இந்த கட்டுரையும் ஒரு எதிர்பாராத நேரத்தில் தோன்றிய ஒன்று என்றால் நீங்கள் நம்பிதான் ஆகவேண்டும். ஆமாம், என்னுடைய மொபைலில் PUBG விளையாடிகொண்டு இருக்கும்போது BULLET தேடி ஓடும் போது FRYING PAN ஒன்றை எடுத்துக் கொண்டேன். அப்படி நான் தேடிப்போன போது தேடியதை விட்டு வேறு ஒன்றே கிடைத்தது. அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் தோன்றிய இந்த கட்டுரையை நீங்களும் வாசியுங்கள்.

 

NON STICK COOKWARE

NON STICK COATING மேற்பரப்பு என்பது மற்ற பொருட்களுடன் ஒட்டிக்கொள்ளும் திறனைக் குறைக்க வடிவமைக்கப்பட்டதாகும். NON STICK COATING பாத்திரத்தில் ஒட்டாமல் உணவை பழுப்பு நிறமாக சமைக்கின்றது. TEFLON (PTFE) பூச்சு பயன்படுத்தி நவீன NON STICK PANS தயாரிக்கப்படுகிறது. 1938 ஆம் ஆண்டில் DuPont நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, ​​PTFE ஆனது ரோய் பிளங்கெட்டால் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது. அத்தகைய காலகட்டத்தில் AC க்களில் குளிரூட்ட புதிய க்ளோரோ ஃபிளோரோ காபன் ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் இருந்தபோது அங்கிருந்த  TEFLON பூச்சு 1958 இல் சமையல் உபகரணமான PAN களில் பூசப்பட்டது.

 

MICROWAVE OVEN (மைக்ரோவேவ் அடுப்பு)

மைக்ரோவேவ் அடுப்பு இப்போது பெரும்பாலான வீடுகளில் காணப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில், பெர்சி ஸ்பென்சர் RAYTHEON CORPORATION னுக்காக ஆராய்ச்சி செய்யும் போது MAGNETRON  எனப்படும் புதிய வெற்றிடக் குழாயைப் பரிசோதித்தார். அப்போது அவரது சட்டைப் பையில் இருந்த இனிப்பு மிட்டாய் உருகத் தொடங்கியபோது அவர் அதனை பரிசோதித்தார். எனவே அவர் POPCORN னுடன் மற்றொரு பரிசோதனையை முயற்சித்தார். இது POP ஆக தொடங்கியபோது, ​​ஸ்பென்சர் உடனடியாக இந்த புரட்சிகர செயற்பாட்டின் திறனைக் கண்டார். 1947 ஆம் ஆண்டில், RAYTHEON முதல் மைக்ரோவேவ் அடுப்பை தயாரித்தது. 350 கிலோகிராம் எடையுடன் 5 1/2 அடி உயரமும் கொண்ட அதன் விலை 5000 அமெரிக்க டொலர்களாகும். 1950 களின் முற்பகுதியில் முதன்முதலில் வீட்டு உபயோகத்திற்காக கிடைத்தபோது, ​​அதன் அளவு மற்றும் விலை நுகர்வோருக்கு செல்வாக்கற்றதாக அமைந்தது. ஆனால் 1967 ஆம் ஆண்டில், மிகவும் பிரபலமான 100 வோல்ட் திறனுடன் 495 டொலர் மதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

SACCHARIN (சக்கரின்)

பேராசிரியர் ஈரா ரம்சனின் ஆய்வகத்தில் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த ஆராய்ச்சியாளர் கொன்ஸ்டன்டைன் ஃபால்பெர்க் என்பவரால் 1879 ஆம் ஆண்டில் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை இனிப்பான சக்கரின், மதிய உணவுக்கு முன் கைகளை கழுவ மறந்துவிட்ட பிறகு ஃபால்பெர்க்கின் கண்டுபிடிப்பாக வந்தது. அவர் தனது கைகளில் ஒரு இரசாயனத்தை கொட்டிவிட்டதை மறந்து அவர் சாப்பிட்ட உணவில் வழக்கத்திற்கு மாறாக இனிப்பு சுவைக்கச் செய்தார்.

1880 ஆம் ஆண்டில், இரு விஞ்ஞானிகளும் கூட்டாக இந்த கண்டுபிடிப்பை வெளியிட்டனர். ஆனால் 1884 ஆம் ஆண்டில், ஃபால்பெர்க் ஒரு காப்புரிமையைப் பெற்று, ரம்சன் இல்லாமல் சக்கரின் பெருமளவில் உற்பத்தி செய்யத் தொடங்கினார். முதலாம் உலகப் போரின்போது சர்க்கரை மதிப்பிடப்படும் வரை சக்கரின் பயன்பாடு பரவலாகவில்லை. மேலும் 1960 கள் மற்றும் 1970 களில் ஸ்வீட் அன்ட் லோ மற்றும் டயட் குளிர்பானங்களை தயாரிப்பதன் மூலம் அதன் புகழ் அதிகரித்தது.

 

SLINKY SPRINGS (பவுன்சி ஸ்ப்ரிங்)

1943 ஆம் ஆண்டில், கடற்படை பொறியியலாளர் ரிச்சர்ட் ஜேம்ஸ் கப்பல்களில் உணர்திறன் கருவிகளை ஆதரிக்கும் மற்றும் உறுதிப்படுத்தும் SPRING ஒன்றை உருவாக்க முயன்றார். SPRING களில் ஒன்று தற்செயலாக அலுமாரியில் இருந்து விழுந்தபோது, ​​அது தொடர்ந்து நகர்ந்தது. ஜேம்ஸ் அதை ஒரு விளையாட்டுப் பொருளாக யோசித்தார். 1945 இன் பிற்பகுதியில் SLINKY அறிமுகமானபோது, ​​ஜேம்ஸ் 400 ஸ்ப்ரிங்-களை 90 நிமிடங்களில் விற்றார். இன்று, உலகளவில் 250 மில்லியனுக்கும் அதிகமான SLINKY கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

 

FIREWORKS (பட்டாசுகள்)

பட்டாசுகள் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தோன்றின. அவை CHARCOAL, SULFER மற்றும் SALTPETER ஆகியவற்றை ஒன்றாகக் கலந்த ஒரு சமையல்காரரால் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாக வரலாற்று கதைகள் கூறுகின்றன. பண்டைய காலத்தில் சமையலறைகளில் பொதுவாகக் காணப்படும் அனைத்து பொருட்களும் கலந்து, ஒரு மூங்கில் குழாயில் சுருக்கப்பட்டபோது, ​​அது வெடித்தது. அதாவது, அந்த சமையல்காரர் ஒருநாள் தனது சமையல் அறையில் சமைத்துக்கொண்டு இருக்கும்போது இந்த மூன்று பதார்த்தங்களையும் கலந்தபோது வெடித்துச் சிதறியது. இது அந்த சமையல்காரனின் கடைசி நாளாகவும் அமைந்துவிட்டது.

 

SAFETY PIN

பலருக்கும் அவசர நேரத்தில் பயனளிக்கும் இந்த சட்டை ஊசி எனப்படும் SAFETY PIN ஒருவரின் கைகளினால் நடந்த வித்தையின் மூலம் நடந்ததென கூறலாம். 1749 இல் வால்டர் ஹாண்ட் எனும் அமெரிக்க மெக்கானிக், தனக்கு கிடைத்த 15 டொலர்களை எவ்வாறு திருப்பி செலுத்துவது என்று யோசித்து கொண்டிருந்தவாறே ஒரு கம்பி ஒன்றை வளைத்துக் கொண்டிருந்தார்.  சிறிது நேரத்தில் ஒரு பின்னாக உருவானதை தொடர்ந்து, அதன் இறுதி முனையில் ஸ்ப்ரிங் போலவும் செய்தார். பயனுள்ள ஒரு பொருளை உருவாக்கிய இவர் அதனை சந்தைப்படுத்த தெரியாமல் அதன் காப்புரிமையை தனக்கு 15 டொலர் கடன் தந்தவருக்கு கொடுத்துவிட்டார். கண்டுபிடித்தாலும் சந்தைப்படுத்த தெரியாமல் போன இவரின் இந்த கண்டுபிடிப்பை வைத்து பலரும் சம்பாதித்தனர்.