பெண் என்றாலே அழகுதான். “ஒவ்வொரு பெண்ணும் ஓரழகு அதன் ஒன்றுக்குள்ளே நூறழகு..” என்று பாடலே உள்ளது. அழகு என்பது இயற்கையாகவே பெண்களுக்கு கிடைத்த வரம். இப்படியான அழகினால் பெண்கள் சமூகத்தில் பல சவால்களுக்கு முகங்கொடுத்தாலும் அந்த சவால்களை ஏற்று அவற்றை தடுத்து வாழ்வில் சாதித்த பல பெண்களும் இருக்கின்றனர். அப்படிப்பட்ட பெண்கள் பல துறைகளிலும் இன்று பணியாற்றுகின்றனர். அதன் படி விளையாட்டுத் துறையில் மிளிரும் அழகான வீராங்கனைகளை பற்றியே தொகுப்பே இது.
சானியா மிர்சா
இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவிற்கு இரசிகர்கள் ஏராளம். இவர் ஆறு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டமும், ஆசிய விளையாட்டு மற்றும் கொமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவிற்கு பல பதக்கங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளார். இவர் 2010 இல் பாகிஸ்தான் கிரிக்கட் வீரரான சுஹைப் மாலிக்கை திருமணம் செய்து இப்பொழுது ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. குழந்தை பிறந்த பின்னும் அழகில் சற்றும் குறையாமல் இருக்கும் சானியா புடவையுடன் தோன்றும் புகைப்படங்களைப் பார்த்தால் இவர் உண்மையில் டென்னிஸ் வீராங்கனையா என்று எண்ணத்தோன்றும்.
எலீஸ் பெரீ
இவர் ஒரு அவுஸ்திரேலிய கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட வீராங்கனை ஆவார். பார்த்தால் நெஞ்சை கொள்ளை கொள்ளக்கூடிய அழகினை கொண்ட இந்த பெண் வீராங்கனை தற்பொழுது முழுநேரமாக கிரிக்கெட்டை விளையாடி வருகிறார். அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகள் பொதுவாக 20 வயது பூர்த்தியாகும் முன்னே அணியில் சேர்ந்து விடுகிறார்கள்.
ஸ்டெபினி ரைஸ்
அவுஸ்திரேலியாவின் இன்னொரு அழகான பெண் வீராங்கணையே ஸ்டெபினி ரைஸ். இவர் ஒரு நீச்சல் விளையாட்டு வீராங்கனை. இந்த அழகான வீராங்கனை பல தேசிய மற்றும் ஒலிம்பிக் போட்டிகளிலும் கலந்து கொண்டு அவுஸ்திரேலியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
எலிசன் ஸ்டோகி
அமெரிக்காவின் காலிஃபோர்னியாவை சேர்ந்த எலிசன் ஸ்டோகி கம்பூன்றி உயரம் தாண்டுதல் மற்றும் தடகள வீராங்கனையாவார். இவர் கவர்ச்சியான மற்றும் கட்டுக்கோப்பான உடலமைப்பைக் கொண்டவர். இவர் ஒலிம்பிக்கில் வெற்றிபெறாவிட்டாலும் தனது அழகின் மூலம் NIKE மற்றும் GoPRO கம்பெனிகளின் விளையாட்டு மொடலிங்க-ஆக செயற்படுகிறார்.
மரியா ஷரபோவா
கிராண்ட்ஸ்லாம் போலவே ஒலிம்பிக்கிலும் பதக்கங்களை பெற்ற மரியா ஷரபோவா உலகிலுள்ள பலரும் நன்கு அறிந்த டென்னிஸ் வீராங்கனை ஆவார். இவர் ஒரு ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை என்பதாலோ என்னவோ இவ்வளவு அழகுடைய இவருக்கு பல பிரபல கம்பெனிகளிடம் இருந்து மொடலிங் அழைப்பு வருகின்றது. அதன்படி தற்போது பல விளையாட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களது பிராண்ட் அம்பாசிடர்-ஆகவும் இருந்து வருகிறார்.
சாரா டைலர்
இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை சாரா டைலர் மக்களால் பெரிதும் விரும்பக்கூடிய அழகான ஒரு பெண் வீராங்கனை. இவரது அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பது இவரது கண்களே. இவரது அழகை போலவே விளையாட்டு திறமையும் அமோகமாக இருக்கும்.