பைக் ஓட்டுபவர்கள் எவ்வாறான பிரச்சினைகளை சந்திக்கின்றனர் தெரியுமா?

 

இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் அதிகமானோர் இலகுவாக அங்கும் இங்கும் சென்றுவர உபயோகிக்கும் ஒரு வாகனம் இந்த மோட்டார் பைக். மேலும் அதிகமானோர் தனது முதல் வாகனமாகவும் இந்த பைக்கையே பயன்படுத்தியிருப்பார்கள். அதுமட்டுமின்றி ட்ராபிக் ஜாம்களில் இருந்து தப்பித்து இலகுவாக வீடு போய் சேர மிகவும் உதவக்கூடியது. எவ்வளவு வாகன நெரிசலாக இருந்தாலும் சந்து பொந்துகளில் புகுந்து ஓடிவிடுவார்கள். என்னவாயினும் தினமும் இந்த பைக் ரைடர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்படுகின்றது. அவற்றை இன்று பார்ப்போம்.

 

வெயிலும் மழையும்

பைக் ரைடர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினைதான் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் கொட்டும் மழை. இந்த இரண்டின் போதும் பைக் ஓட்டுவதே வேண்டாம் என்று இருக்கும். சுடும் வெயிலில் இருந்து பாதுகாக்க ஜாக்கெட் போட்டு சென்றால் உடம்பில் வியர்வை கொட்டும். அப்போது அலுப்புத்தன்மை அதிகரிக்கும். அதேபோல் மழை காலத்தில் வீட்டில் மறதியாக ஜாக்கட்டை வைத்து விட்டு வந்தால் மழையில் சிக்கி ஒதுங்க இடம் இல்லாவிட்டால் நனைந்து கொண்டே வீட்டுக்குச் செல்ல வேண்டும். அதே போல மழை நேரங்களில் வீதியில் செல்வதும் அபாயகரமானது. எந்த இடத்தில் வலுக்கும் என்று யாருக்கும் தெரியாது.

 

பொலிஸ்

மோட்டார் பைக் ஓட்டுபவர்கள் என்றால் பொலிஸூக்கு மிகவும் பிடித்த ஒரு கூட்டம் என்று கூறினாலும் பரவாயில்லை. ஏனென்றால் அடிக்கடி பொலிஸிடம் சிக்கி தண்டப்பணம் அல்லது லஞ்சம் கொடுத்து தப்பிக்கும் கூட்டம்தானே. அப்படி இல்லாவிட்டால் பொலிஸிடம் அகப்பட்டால் பேசி தப்பித்து வர ஒரு நண்பரை வைத்துக்கொள்ளவும் வேண்டும்.

 

பயணத்தின்போது ஏற்படும் கோளாறுகள்

பெற்றோல் இல்லாமல் பாதி வழியில் நின்று விட்டால் பிரச்சினையாக மாறிவிடும். பெற்றோல் ரிசெர்விலும் இல்லாவிட்டால் அது அடுத்த தலையிடியாக இருக்கும். அதுவும் பங்குனி மாத வெயிலில் இப்படி நடந்தால் எப்படி இருக்கும். அதே போல் டயர் பற்றியும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் டயரும் எந்த நேரமும் கைகொடுப்பதில்லை. சில வேலை டயர் PATCH ஆகி விட்டால் என்ன செய்வது? காரில் இருப்பது போல EXTRA SPARE WHEEL இருக்காது. இதுவும் ஒரு துரதிஷ்டவசமான விடயம்தான்.

 

பாதுகாப்பு குறைவு

வீதியில் செல்லும் வாகனங்களில் ஆபத்தானதும் பாதுகாப்பு குறைந்ததுமான வாகனம்தான் பைக். அதற்கு முதல் காரணம் இரண்டு சக்கரம் என்பதும் பாதுகாப்புக்கான கவசம் இல்லாததும் ஆகும். இதற்காக பைக் ஓட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை. மற்ற வாகனங்களை செலுத்துவோர் பைக் ஓட்டுபவர்களையும் பற்றி சிந்திக்க வேண்டும் என்கிறோம். உதாரணமாக பைக்கிற்கும் வேறு வாகனம் ஒன்றுக்கும் இடையில் விபத்து ஏற்பட்டால் அதிக சேதமும் காயமும் சிலவேளை உயிரிழப்பும் இந்த பைக் ஓட்டுநர்களுக்கே ஏற்படும். பைக் ஓட்டுபவர்களும் தமது நலனில் தத்தமது குடும்பதாரும் இருக்கின்றார்கள் என்று சற்று சிந்திக்க வேண்டும்.

 

இடப்பற்றாக்குறை

வாகன நெரிசலில் இருந்து தப்பிக்கலாம். இல்லையென்றால் வேறு வாகனங்களை வாங்க முடியாததால் பைக் வாங்கலாம். ஆனால் எல்லா வாகனங்களிலும் செய்யக்கூடிய விடயங்களை இதில் செய்ய முடியாது. உதாரணமாக நான்கு, ஐந்து பேரை இதில் ஏற்றிச் செல்ல முடியாது. அவ்வாறு ஏற்றிச் சென்றால் பொலிஸாரிடம் சிக்கிவிடாமல் செல்ல வேண்டும். ஆனால் அப்படி ஏற்றிச் செல்லாதீர்கள். அது உங்கள் பாதுகாப்பிற்கு உகந்ததல்ல என்பதே நாங்கள் கூறும் அறிவுரை.

 

பரிசாக வந்த இடுப்பு வலி

தினமும் பைக்கில் வேலைக்குச் செல்வோருக்கு இடுப்பு வலி ஏற்பட சந்தர்ப்பம் உண்டு. ஆனால் இது பிற்காலத்தில் வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும். அதனால் வலிக்கும் போது தொடர்ந்து வண்டியை செலுத்துவதை விட்டு சற்று நேரம் நிறுத்திவிட்டுச் செல்வது நன்று. இல்லையென்றால் பிற்காலத்தில் இடுப்பு வலி காரணமாகவே வேளையில் சோம்பேறித்தனம் மற்றும் வெறுப்புகூட வரலாம். சில வேளைகளில் பைக் சீட்டின் தரக்குறைவினாலும் இப்படி நிகழலாம். அதனால் பைக்கின் சீட் நன்றாக இருக்கின்றதா என்று பார்த்து சரிசெய்து கொள்ளுங்கள்.