சினிமாத்துறையில் உள்ள பலர் கல்வியிலும் சிறந்து விளங்குகின்றனர். ஏன் நம் நாட்டிலும் பல நடிகர்கள் கல்வித்துறையில் நன்கு சித்தி பெற்றவராக இருக்கிறார்கள். அவ்வாறான சிலரை பற்றி இன்று பார்ப்போம்.
NATALIE PORTMAN
இவர் அதிகமாக படித்திருப்பதனாலோ என்னவோ இவர் தேர்ந்தெடுக்கும் படங்களும் பெரும் அதிகமான வசூல் ஈட்டக்கூடிய படங்களாகவே இருக்கின்றது. படித்தவர்களுக்கு புத்தி அதிகம் என்பது இதனால் தானோ! இவர் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் கற்றவர். இவர் 6 மொழிகளை சரளமாக பேசுவார்.
ROWAN ATKINSON
இவரை MR BEAN என்று சொன்னால்தான் பலருக்குத் தெரியும். ஆனால் இவரது உண்மையான பெயர் ரோவன் அட்கின்சன். பார்ப்பவரை பத்து நிமிடத்திற்குள் சிரிப்பை வரவழைத்து விடும் இவர் ஒரு எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் என்றால் ஆச்சரியம்தான். DHORHAM CHORISTERS COLLEGE இல் ஆரம்ப கல்வியை முடித்து விட்டு NEWCASTLE UNIVERSITY இல் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரையும் முடித்துள்ளார். மேலும் பல வருடங்களாக வாயால் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் எம்மை MR BEAN மூலம் என்டர்டைன் செய்த இந்த அட்கின்சன் OXFORD பல்கலைக்கழகத்தில் கற்றவர்.
LISA KUDROW
பிரபல அமெரிக்க நடிகையான இவர் ஹோலிவுட்டில் புகழ்பெற்ற FRIENDS திரைப்படத்தின் மூலம் திரையுலகில் பிரபலமானார். ஆனால் திரையுலகில் உலகளவில் பிரபலமாகிவிட்டாலும் மருத்துவத்துறையில் பிரபலமாகியுள்ளார். இவர் தனது இளம்வயதுக்குள் உயிரியலில் அறிவியல் பட்டம் பெற்றுள்ளார். இவர் தனது தந்தையை பின்பற்ற விரும்பினார். அதன்படி தலைவலி குறித்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார்.
MADHAVAN
அயல்நாட்டு சினிமா பிரபலமான மாதவன் பல இளம்பெண்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர். இவரை மேகி என்றும் அழைப்பதுண்டு. இவர் B.Sc பட்டம் பெற்றுள்ளார். இலத்திரனியல் துறையில் தனது 22 வயதில் கல்லூரி மூலம் இந்தியா சார்பாக கனடாவிற்கு சென்றுள்ளார்.மேலும் பிரித்தானிய இராணுவத்தின் றோயல் படைப்பிரிவில் பயிற்சி பெற்றுள்ளார்.
JAMES FRANCO
ஸ்பைடர்மேன் திரைப்படத்தில் பீட்டர் பார்க்கருடன் இருந்த ஹேரி ஒஸ்போர்ன் தான் இவர். அன்றிலிருந்து இன்றுவரை ஹொலிவூட்டில் பெயர் பதித்த ஒரு நடிகர் தான் இவர். இரண்டு ஆண்டுகளில் தனது முதல் பட்டப்படிப்பை முடித்த பிறகு, ஒவ்வொரு பாடத்திற்கும் நான்கு பல்கலைக்கழக கல்லூரிகளுக்குச் சென்று, பின்னர் யேலில் பட்டம் பெற்றுள்ளார்.