கிரிக்கெட் விளையாட்டில் தவறுகள் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் அதற்கான தடைகளும் விதிக்கப்படும். அப்படி தடை செய்யப்படும் அளவுக்கு சிலரது பேட்களும் இருந்துள்ளன. அப்படி பிரபல கிரிக்கெட் வீரர்கள் போட்டிகளின்போது விளையாடி, கிரிக்கெட் சபையால் தடை செய்யப்பட்ட சில பேட்களை பற்றி இன்று பார்ப்போம்.
தோமஸ் வைட்டின் BIG BOARD பேட்
1771 இல் இங்கிலாந்தின் வெஸ்லிக்கும் ஹெம்பல்டன் அணிக்கும் இடையிலான போட்டி நடைபெற்ற நாளில், இந்த பேட்டை தோமஸ் வைட் எனும் கிரிக்கெட் வீரர் மைதானத்துக்கு எடுத்து வந்தார். இந்த பேட்டை பார்த்தவுடன் போலிங் அணிக்கு சற்று தடுமாற்றம் மற்றும் எரிச்சல் ஏற்பட்டது. அதாவது இதை மட்டை-பேட் விக்கட்டை விட பெரிதாகவும் இருந்தது. இதன் பின்னரே கிரிக்கெட் மட்டை-பேட் 4 1/4 ” INCH உடையதாக மட்டுமே இருக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
டெனிஸ் லில்லீயின் ALUMINIUM பேட்
1979 இல் அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டியில் டெனிஸ் லில்லீ தந்து அலுமினியம் பேட்டையும் எடுத்துக் கொண்டு வந்துள்ளார். அந்த மட்டையினால்(BAT) அடிவாங்கிய பந்து சற்று வளைந்ததால் சந்தேகம் கொண்டு பார்க்கும் பொது அந்த மட்டை COMBAT எனும் அலுமினிய பேட் என்பது தெரிந்தது. இந்த பேட்டினை டெனிஸ் லில்லீயின் நண்பரே தயாரித்தார். அதனால் அந்த பேட்டிற்கு ஒரு மார்கெட்டிங் செய்வதற்காகவும் கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.
ரிக்கி பொன்டிங்கின் CARBON GRAFITTE பேட்
இந்த பேட் அவுஸ்திரேலிய வீரர் ரிக்கி பொன்டிங்கின் ராசியான பேட் என்றும் சொல்வார்கள். கூகாபுரா கம்பெனி செய்த இந்த பேட் பார்க்கும் போதே கவர்ந்து இழுக்கக்கூடிய டிசைனில் ஸ்டிக்கரை கொண்டிருக்கும். பாகிஸ்தானுடனான போட்டியில் ரிக்கி பொன்டிங் இந்த பேட்டை பயன்படுத்தி இருமுறை செஞ்சரி அடித்துள்ளார். ஆனால் இந்த பேட்டின் மீது சந்தேகித்த MCC சங்கம், ICC க்கு இந்த பேட்டில் உள்ள பின்பகுதி கார்பன் கிராபைட் கலந்துள்ளதென தெரிவித்தது. இதனை தொடர்ந்து 2006 இல் இந்த பேட்டினை கிரிக்கெட் போட்டியில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
ஹேடனின் மொங்கூஸ் பேட்
IPL இல் பிரபலமாகி T20 யிலும் விளையாடப்பட்ட இந்த மொங்கூஸ் பேட் மற்ற பேட்களை போல தடை செய்யப்படவில்லை. இந்த பேட்டின் சிறப்பம்சம் இதன் பிடி நீளமாகவும் பந்து படும் இடம் குட்டையாகவும் இருக்கும். இதன் மூலம் வேகமான பந்துகளுக்கும் FOUR, SIX களை எடுக்கலாம் என்று பிரபலமானது. இதனை பாவித்து MATHEW HEYDEN 2010 IPL இல் 43 பந்துக்களுக்கு 98 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். ஆனால் தற்பொழுது பாவனையில் இல்லாமல் போயுள்ளளது. இந்த பேட்டின் மூலம் பௌன்சர் பந்துகளை அடிக்க முடியாமல் போவதால் இந்த பேட் பாவனையில் இருந்து விலகியது.
கிறிஸ் கெய்லின் GOLDEN பேட்
2015 BIG BASH T20 போட்டியின் போது கிறிஸ் கெயில் அறிமுகம் செய்த ஒரு பேட் தான் இது. கிரிக்கட் வரலாற்றில் முற்றிலும் வர்ணம் பூசப்பட்ட பேட்டும் இதுதான். பிரபல பேட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பார்டன் நிறுவனம் இதனை தயாரித்தது. இதன் மூலம் பெரிய ஒரு வித்தியாசத்தில் ஓட்டங்களை பெறாவிட்டாலும், இதன் நிறத்தினால் பலரது கவனத்தையும் ஈர்த்தது. இது வெறும் பெயிண்டட் பேட் என்பதால் ஒரு பிரச்சனையையும் சந்திக்காவிட்டாலும் பிறகு இதன் நிறத்தினால் பந்துக்களிலும் இந்த நிறம் படிவதாக தெரிவிக்கப்பட்டதால் இந்த பேட் தடைசெய்யப்பட்டது.
அன்றிவ் ரஸெலின் BLACK பேட்
கிறிஸ் கெய்லின் இந்த நிகழ்வை தொடர்ந்து அடுத்த BIG BASH தொடரின் போது சிட்னி தண்டர் அணிக்கு விளையாடிய அன்றிவ் ரஸெல் மூலம் அறிமுகமான ஸ்பார்டன் நிறுவனத்தின் இன்னொரு தயாரிப்பான இது கறுப்பு நிறத்தில் இருந்தது. இந்த தொடரில் ரஸெல் பெரிதாக ஓட்டங்களை பெறாவிட்டாலும் அவரது பேட்டில் உள்ள கறுப்பு நிறம் பந்தில் பட்டிருப்பதை கண்டு இந்த பேட்டும் ICC யினால் தடை செய்யப்பட்டது.
கிரே நிகோல்ஸ் பேட் நிறுவனத்தின் CARBON பேட்
இந்த பேட்டிலும் காபன் பயன்படுத்தியுள்ளார்கள். ஆனால் அடிக்கும் பகுதியில் இல்லாமல் பிடி பகுதியில் பயன்படுத்தியுள்ளார்கள். இந்த பேட்டினை செய்தவர்கள் GRAY-NICOLLS நிறுவனத்தினர். என்னவென்றாலும் காபன் பயன்படுத்தி செய்யும் எந்த உபகாரணத்தையும் ICC க்கு பிடிப்பதில்லை. அதன்படி 2008 லேயே இதனை தடை செய்துள்ளார்கள்.