மக்கள் தெரிவுசெய்யும் விதவிதமான உணவகங்கள்

 

ஒவ்வொரு மனிதனினதும் இரசனையும் ருசியும் வேறுவேறாக இருக்கும். அதில் ருசி சம்பந்தமாக இன்று பேசப்போகின்றோம். ஒவ்வொருவருக்கும் ஓவ்வொரு விதமான சுவைகள், எண்ணங்கள் இருக்கும். எந்த நேரத்தில் சாப்பிடும் சாப்பாட்டிலும் வித்தியாசத்தை எதிர்பார்க்கிறான். ஆதிகாலத்தில் இலைகுலைகளை சாப்பிட்டு வந்த மனிதன், தற்போது பெரிய பெரிய பிட்ஸா, பர்கர் என விதவிதமாக பெயர்  வைத்து எதை எதையோ சாப்பிடுகிறான். அதன் விளைவாக பின்னர் சாப்பிடும் இடத்திலும் வித்தியாசத்தை நாடினான். இவை தொடர்பாக இன்றைய கட்டுரையில் பார்ப்போம்.

 

சுவையான உணவு

சுவையான சாப்பாட்டை சாப்பிடத்தான் மனிதர்கள் பெரும்பாலும் விரும்புவார்கள். அதன்படி சிலர் காரசாரமான உணவை சாப்பிட விரும்புவார்கள். சிலர் காரம் குறைந்த உணவு சமைக்கும் கடைகளை விரும்புவார்கள். சிலர் சைனீஸ் சாப்பாட்டை, இந்தியன் சாப்பாட்டை விரும்புவார்கள். இப்படி விதவிதமான சுவையில் சாப்பிட உணவகங்களை தெரிவு செய்வார்கள்.

 

சுத்தமான உணவு

சுவையான உணவுக்காக சந்திரனுக்கும் செல்லும் ஒரு கூட்டமும் இருக்கும். அதேவேளையில், சந்திரனிலும் சுத்தமான இடம் தேடும் கூட்டமும் இருக்கத்தான் செய்கின்றது. சாப்பாடு தயாரிக்கும் இடம் இவர்களின் பார்வைக்கு தெரியாவிட்டால் அந்த மாதிரியான இடங்களில் உண்ணுவதும் இல்லை. அதாவது உண்ணும் உணவில் ருசியை விட இவர்களுக்கு ஆரோக்கியம் பற்றியே அதிக கவனம் இருக்கும். இவர்கள் பெரும்பாலும் ஒரே கடையிலேயே சாப்பாட்டை வாங்குவார்கள். இதை குறைசொல்ல முடியாது. ஏனென்றால் அதிகமான சாப்பாட்டுக் கடைகளில் சுத்தம் என்பது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

 

BRANDED சாப்பாடு (SELFIE எடுக்க)

இந்த பழக்கம் வளர்ந்து வரும் நமது இளைஞர் சமுதாயத்தில் உள்ள ஒரு பண்பாகவே மாறி வருகின்றது. அதாவது BRANDED கடைகளை தேடிச் சென்று சாப்பிடுவார்கள். KFC, BURGER  KING, PIZZA HUT, Mc Donalds போன்ற இடங்களுக்குச் சென்று சாப்பிட விரும்புவார்கள். இவர்கள் இங்கு செல்வது சுவைக்காகவோ அல்லது சுத்தத்திற்காகவோ அல்ல. சாப்பாட்டுடன் SELFIE எடுத்து SOCIAL MEDIA களில் போடவும்தான்.

 

வித்தியாசமான சாப்பாடு

சாப்பாட்டில் வித்தியாசத்தை எதிர்பார்த்தே இவர்கள் இருப்பார்கள். எவருக்கும் எந்த நாளும் ஒரே சாப்பாட்டை ஒரே இடத்தில் இருந்து சாப்பிட விரும்புவதில்லை. வித்தியாசமான சாப்பாடு வித்தியாசமான சுவை வித்தியாசமான இடம் போன்றவற்றை எதிர்பார்ப்பார்கள். சிலர் இதற்காகவே நாட்டில் எந்த மூலையில் ஒரு சாப்பாடு புதிதாக கிடைக்கும் என்றாலும் அதற்காக மூட்டையை கட்டிக் கொண்டு சென்றுவிடுவார்கள்.

 

பணத்தை சேமிக்க சாப்பிடுபவர்கள்

உணவிற்கு இலட்சக்கணக்கில் செலவு செய்து சாப்பிடும் மனிதர்கள் இருக்கும் இந்த உலகில் அடிப்படை தேவைக்குக்கூட அளந்து அளந்து செலவு செய்யும் சிலரும் இருக்கின்றனர். உணவிற்காக அதிகமாக செலவு செய்யாதவர்களே இவர்கள். அதற்கு பதிலாக சிறிய பட்ஜட்டில் செலவு செய்து விட்டு சந்தோஷமாக இருப்பவர்கள். பொதுவாக இந்த பண்பு காசு இல்லாத நேரத்தில் வந்தால் பரவாயில்லை. கையில் வைத்திருக்கும் பணத்தில் சேமிக்க முடிந்தால் இந்த நபர்கள் எப்போதும் ஒரே கடையிலும்கூட சாப்பிடுவார்கள்.

 

எந்த இடத்திலும், எந்த உணவையும் எவ்வாறான சுவையிலும் சாப்பிடுவேன்

பசி வந்தால் எந்த கடையிலும் சாப்பிடுவோர் இருக்கிறார்கள். கடைகளைத் தேர்ந்தெடுக்க நேரத்தை வீணடிக்கவும் மாட்டார்கள். சைவ கடையாயினும் சரி, சிறிய கடையாயினும் சரி, பெரிய ஸ்டார் ஹோட்டலாக இருந்தாலும் சரி. இவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இப்படிப்பட்ட இளைஞர்கள் அதிகமானோர் சமுதாயத்திலே இருப்பார்கள். அதே வேளையில் இவர்கள் கிடைக்கும் இடத்தில் சாப்பிட்டு உயிர் வாழவும் பழகிக்கொள்வார்கள்.