யாராவது உங்களை கட்டிப்பிடித்துள்ளார்களா? – இந்த கட்டுரையை வாசியுங்கள்

 

ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பது அவரிடம் மற்றவருக்கு கவலையை அல்லது சந்தோஷத்தை வெளிப்படுத்தவே ஆகும். அப்படி கட்டிப்பிடிப்பது காதலை வெளிப்படுத்த மட்டுமல்ல, அதில் பல்வேறு விடயங்கள் உள்ளன. பல சந்தர்ப்பங்களில் பலர் நம்மை கட்டிப்பிடித்திருப்பார்கள். இனிமேல் அது தொடர்பாக உங்களுக்கு அறிந்துகொள்ள முடியும்.

எமது புதிய கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து ரசிக்க மேலே உள்ள லிங்க் இன் மூலம் வாட்ப் குரூப்-ல் இணைந்து கொள்ளவும். மேலும் எம்மை தொடர்ந்து ஆதரிக்க கீழ்காணும் பேஸ்புக் (FACEBOOK) லிங்க் ஐ க்ளிக் செய்து பேஸ்புக் – இல் தொடர்பு கொள்ளவும்.

 

BEAR HUG

உதாரணமாக ஒருவருக்கொருவர் COMFORTABLE ஆக உணரும்போது கட்டிப்பிடித்தால் இவ்வாறுதான் இருக்கும். அதேபோல ஆறுதலான ஒரு உணர்வையும் தரும். மேலும் மனதிற்கு இதமான உணர்வையும் உண்டாக்கக்கூடியது. ஒருவருக்கொருவர் அன்பு கொண்டவர்களே இவ்வாறு கட்டிப்பிடித்துக்கொள்வார்கள். உதாரணமாக மனதிலுள்ள கஷ்டத்திற்கு அல்லது சந்தோஷத்திற்கு பெற்றோரை அணுகுவது போன்ற ஒரு உணர்வை தருவதும் இதுவே. இது பெரும்பாலும் நெருங்கிய நண்பர்கள், பெற்றோர், நெருங்கிய உறவுகள் (சகோதர சகோதரிகள்), காதலர்கள் மத்தியில் பிரபலமானது.

 

POLITE HUG

ஒரே மாதிரியான மற்றும் உத்தியோகபூர்வ தொடர்புகளைக் கொண்ட நபர்களிடையே பரிமாறிக் கொள்ளக்கூடிய ஒருவகையான கண்ணியமான கட்டிப்பிடிப்பு இதுவாகும். ஒரு பக்கத்திற்கு சற்று சாய்ந்து உடம்பின் மேல்பகுதி மட்டும் ஒருவருக்கொருவர் படுமாறு கட்டிப்பிடித்து, கீழ் பகுதி சற்று தள்ளி இருக்கும். இந்த முறையில் உங்கள் காதலன் அல்லது காதலி கட்டிப்பிடித்தால் உங்கள் இருவருக்கும் இடையிலான நெருக்கம் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டுமென்றே அர்த்தம்.

 

ONE WAY HUG

நீங்கள் ஒருவரை கட்டிப்பிடிக்கும்போது அவரின் இரு கைகளையும் கட்டியணைத்தால் அவர் சற்று கையை உயர்த்தக்கூட முயற்சிக்காமல் இருக்கும் கட்டிப்பிடிப்பே இது. இதற்கு ONE WAY HUG என்பார்கள். உங்களுக்கு மற்றவரின் மீது அன்பு அல்லது ஈர்ப்பு இருந்தாலும் மற்றவருக்கு ஒரு உணர்வோ அல்லது ஈர்ப்போ அல்லது சிலவேளை கோபம்கூட இருக்கலாம். ஆனால் அதனை வெளிக்காட்ட முடியாதவாறு அல்லது நீங்கள் அவரைவிட பெரியவராக இருக்கவும் கூடும்.

 

INTIMATE HUG

இந்த வகையான கட்டிப்பிடிப்பை அனைவரும் விரும்புவதுண்டு. அதாவது இந்த மாதிரியான கட்டிப்பிடிப்பு காதலர்கள், தம்பதியினரிடத்தில் இருக்கும். இது உடம்பு மட்டுமின்றி மனம், உணர்வு போன்ற பல விடயங்களோடு தொடர்புபட்ட உண்மையான உணர்வுடன் சம்பந்தப்பட்டது. மேலும் இந்த சந்தர்ப்பத்தில் இருவரின் பார்வைகளும் ஒருவரை ஒருவர் நோக்கியே இருக்கும். இதன் மூலமே இந்த HUGGING மற்றவையை விட சிறந்ததாக இருக்கின்றது. இந்த மாதிரியான கட்டிப்பிடிப்பு யாரிடமிருந்தாவது கிடைத்தால் அவர் உங்களிடமிருந்து ஸ்பெஷலாக எதையோ எதிர்பார்க்கிறார் என்று அர்த்தம்.

 

BUDDY HUG

இந்த மாதிரியான கட்டிப்பிடிப்பு  பொதுவாக முகத்திற்கு நேராக இருக்காது பக்கவாட்டுப் பகுதியில் இணைந்துகொள்ளும். இது பொதுவாக நட்பை பிரதிபலித்து காணப்படும். நெருங்கிய நண்பர்கள் இருவருக்கு அல்லது பலர் ஒன்றுகூடி இருக்கும் நேரத்தில் இது மாதிரியான HUGGING இருக்கும்.  காதலர்கள் இதுபோல கட்டிப்பிடித்தால் காதலைவிட அவர்கள் நண்பர்களாக இருக்கின்றார்கள் என்றே அர்த்தம்.

 

BACK HUG

இது நாம் மேலே பார்த்த INTIMATE HUG இன் இன்னொரு வகை என்றும் கூறலாம். இந்த மாதிரியான கட்டிப்பிடிப்பு திரைப்படங்களில் அதிகமாக பார்த்திருப்பதால் இது ரொமான்ஸ் HUG என்று மட்டும் நினைத்துவிட வேண்டாம். இது ஒருவருக்கொருவர் எந்த கஷ்டமான சந்தர்ப்பத்திலும் அருகில் இருப்பேன் என்ற உணர்வை வெளிப்படுத்தக்கூடிய ஒன்றாகும். இது மாதிரியான கட்டிப்பிடிப்பு உங்களுக்கு கிடைத்திருந்தால், இந்த கட்டுரையை எழுதிய என்னைவிட உங்கள் ஆறுதலுக்காக ஒருவர் இருக்கின்றார் என்று அர்த்தம்.

 

NAUGHTY HUG

உண்மையில் பெயரிற்கேற்றவாறே இது NAUGHTY HUG தான். இது இரு காதலர்களுக்கு இடையிலான அன்பின் வெளிப்பாடு என்றும் கூறலாம். ஆணின் கைகள் பெண்ணின் இடுப்புப்பகுதியில் அல்லது அதற்கு கீழே வைத்து இறுக்கமாக தன் பக்கம் இழுத்துக்கொண்டால் இந்த HUG தான் என்று விளங்கிக்கொள்ளலாம். இந்த HUGGING உங்கள் காதலனிடம் இல்லாமல் வேறு எவரிடம் இருந்தாவது கிடைத்தால் சற்று கவனமாக இருக்கவேண்டும்.