நிச்சயிக்கப்பட்டு நடைபெறும் திருமணங்களில் உடன்பாடற்றவர்கள் இருக்கின்றீர்களா? இருந்தால் இந்த கட்டுரையை கட்டாயம் வாசியுங்கள்.
பிரச்சினைகளே இருக்காது
நிச்சயிக்கப்படும் திருமணம் உண்மையில் இலகுவானது. ஏனென்றால் நீங்கள் ஒரு பெண்ணை காதலிக்கும்போது அந்த பெண்ணை சம்மதிக்க வைப்பது ஒரு பிரச்சினை. பின்னர் அதனை உங்கள் வீட்டில் சொல்வதிலும் பிரச்சினை. அவர்களது வீட்டிலும் பிரச்சினை. இப்படி பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த பின்னரே பெரும்பாலான காதல் திருமணங்கள் நடைபெறுகின்றன. ஆனால் இந்த பிரச்சினை எதுவும் வீட்டில் ஏற்பாடு செய்யப்படும் திருமணத்தில் இருக்காது. ஏனென்றால் வீட்டிலேயே பெண் பார்த்து தருவார்கள். இதன்மூலம் சுலபமாக திருமணம் நடைபெறும்.
காதல் தோல்வி இருக்காது
காதல் என்பது எந்த நேரமும் எல்லோருக்கும் கைகூடுவதில்லை. சிலரது மரணத்திற்கும் காதல் காரணமாக இருக்கும். அதாவது காதல் தோல்விகளையும் சந்திக்க நேரிடலாம் என்றே கூற வருகிறோம். லவ் பெய்லியரின் பின்னர் சோக பாடல்கள், ஒரு பியர் டின், கண்களில் கண்ணீர் என்றுதான் இருக்கவேண்டுமென நினைப்பார்கள். இல்லையென்றால் ஏதாவது கெட்ட பழக்கங்களை கொண்டு ஆறுதல் பெற எண்ணுவார்கள். ஆனால் இந்த அவலநிலை பெரும்பாலானவர்களுக்கு இல்லை. ஏனென்றால் இவர்கள் வீட்டில் பார்க்கும் பெண்களை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் இப்படியும் சந்தோஷமாக இருக்க முடியுமென்று வாழ்ந்து காட்டுவார்கள்.
கூச்ச சுபாவமும் குறைந்துவிடும்
இதுதான் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் உள்ள விடயம். பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட பின்னர், நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்ள, அறிந்துகொள்ள முயற்சியுங்கள் என்று கூறுவார்கள். அதாவது உள்ளம் பறிபோனவரிடம் சென்று கதைப்பதைவிட யார் என்றே தெரியாதவரிடம் உள்ளத்தை பறிகொடுக்க தயாராகும்போது ஒருவிதமான கூச்ச சுபாவமும் ஏற்படும். இந்த இடத்தில் வரும் கூச்ச சுபாவம் பின்னர் சற்று ஒதுங்கி வாழ்வில் சில தைரியமான முடிவுகளை எடுக்க நிச்சயிக்கப்பட்ட திருமணம் உதவும்.
யாரின் அனுமதியையும் எதிர்பார்க்கத் தேவையில்லை
நீங்கள் காதலர்களாக இருந்தால் உங்கள் வீட்டுக்கும் உங்கள் காதலியின் வீட்டுக்கும் தெரியாமல்தான் பல இடங்களுக்கு சென்று வருவீர்கள். ஏதாவது ஒரு தவறின் மூலம் வீட்டிற்கு தெரிந்துவிட்டால் அன்றுமுதல் அடிக்கடி பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும். ஆனால் இதே நீங்கள் வீட்டில் பார்த்து பேசி வைத்த ஒருவருடன் வெளியே சென்றால் அவர்களே வெளியே வந்து வழியனுப்பவும் செய்வார்கள். அதாவது எங்கு செல்லவேண்டுமென்றாலும் யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை.
திருமண செலவு குறைந்து விடும்
உங்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டால் அல்லது விரும்பாவிட்டால் உங்கள் காதல் திருமணத்திற்கான செலவுகளை நீங்களே முழுமையாக பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். இதே வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்களுக்கு காதல் திருமணங்களைவிட ஒரு குறிப்பிடத்தக்க நன்மை உண்டு. திருமணத்திற்குப் பிறகு உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் ஒருவித நிதி உதவிக்கு உத்தரவாதம் அளிக்கிறார்கள். முதலாவதாக, திருமணச் செலவுகள் பெற்றோர்களால் (பெரும்பாலும் மணமகளின் பெற்றோரால்) ஏற்கப்படுகின்றது. மேலும் செலவுகளை பகிர்ந்துகொள்ள உறவினர்களும் உதவுவார்கள்.