ஆண்கள் அதிகமான நேரங்களில் தமக்கு தேவையானவற்றின் மீதே அதிக கவனம் செலுத்துவார்கள். ஆனால் பெண்கள் சிறு சிறு விடயங்களின் மீதும் அதிகம் கவனம் செலுத்துவார்கள். பெண்கள் பெரிதாக நினைக்கும் விடயங்கள் பலவற்றை பற்றி ஆண்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும் நிலையும் காணப்படும். அவ்வாறான விடயங்கள் பற்றி இன்று பார்ப்போம்.
பெப்ரவரி 30இல் தானே முதன்முதலில் சந்தித்தோம்?
பெண்களுக்கு இயற்கையாகவே அதிகமான ஞாபக சக்தியை படைத்ததாலோ என்னவோ, ஆண்களின் வாழ்க்கை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்த சக்தியால் அவர்கள் தமது வாழ்வில் சில தினங்களைக்கூட அதிகம் நினைவில் வைத்திருப்பார்கள். உதாரணமாக ஆண்களிடம் அவர்களின் திருமண தினத்தை கேட்டால் 70 வீதமானோர் ஞாபகம் வைத்திருப்பதில்லை. ஆனால் இதே பெண்களிடம் கேட்டால் 90 வீதத்திற்கும் அதிகமானோர் சரியாக திருமண தினத்துடன் அன்று அணிந்திருந்த ஆடையின் நிறத்தைக்கூட கூறுவார்கள்.
அன்பே அழகே…
பொதுவாக பெண்களுக்கு நேரத்தைவிட அவர்களின் அழகில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். அதாவது எங்கேயாவது பயணம் செல்லும் போது படுக்கையில் இருந்து எழுந்து, பல் துலக்கி, மவுத் வாஷ் உம் போட்டு, குளிக்கும் போது ஷாம்பு போட்டு, கண்டிஷனர் போட்டு, சோப் போட்டு என விதம்விதமாக குளிப்பார்கள். பின்பு ஆடை அணியும் போது அதற்கேற்ற நைல் போலிஷ், ஷூஸ், லிப்ஸ்டிக், ஹாண்ட் பேக், ஹேர்பின், பேங்க்லஸ் எல்லாவற்றையும் தேடி எடுக்கும்போதே பலமணி நேரம் ஆகும். ஆனால் ஆண்களோ 7 மணிக்கு எழும்பினால் 7.10 க்கே அலுவலகம் செல்லும் திறமை படைத்தவர்கள். அதாவது தன் அழகைப் பற்றி அதிகம் கவனிப்பதில்லை.
ஆடை தெரிவு
பொதுவாக ஆடையை தெரிவுசெய்யும் போது பெண்கள் தன் நண்பர்களிடம் காணாத ஆடைகளையே அதிகம் தெரிவுசெய்ய எண்ணுவார்கள். அதாவது யாரும் போடாத ஆடையைத்தான் வாங்க வேண்டும் என எண்னுவார்கள். ஆனால் ஆண்களோ தான் அணிந்திருக்கும் ஆடையை போல பிற ஆணிடம் கண்டால் இருவரும் சென்று கதைத்து நண்பர்களாகவும் தயங்க மாட்டார்கள்.
ஷோர்ட் டைம் மெமரி லோஸ்!
வீட்டில் அதிகமான சண்டைகள்கூட இதனாலே ஏற்படுகின்றன. சில சமயங்களில் ஆணுக்கு தான் நேற்றிரவு என்ன சாப்பிட்டேன் என்றுகூட உணர்வின்றி மறந்திருப்பார்கள். ஆனால் பெண்ணோ தனது அம்மாவிடம் சாப்பாடு சாப்பிட்ட நாள் தொடக்கம் சகலவற்றையும் நினைவில் வைத்திருப்பார்கள். இதனால் பழைய பிரச்சினைகளில் இருந்து ஆரம்பிக்கும் சண்டை பல சந்தர்ப்பங்களில் பெரிதாகிவிடும். ஏனென்றால் நேற்றிரவு சாப்பிட்டதே இங்கு நினைவில்லையே?
புறம் பேசுதல் (GOSSIPS)
புறம்பேசுவதில் பெண்களைத்தான் அதிகமாக உதாரணம் காண்பிப்பார்கள். உதாரணமாக ஒரு பெண் தனது நெருங்கிய நண்பியின் உடை அழகாக இருந்தால் இந்த டிரஸை எங்கே எடுத்தாய், எப்பொழுது எடுத்தாய், எவ்வளவுக்கு எடுத்தாய், இதை போட்டுக்கொண்டு எங்கே போனாய், யாரோடு போனாய் என்று பல கேள்விகளை கேட்டு விபரங்களையும் தெரிந்து கொள்வார்கள். இதே இரு நெருங்கிய ஆண் நண்பர்கள் சந்திக்கும்போது இவ்வாறான விடயங்கள் குறைவாக காணப்படும். ஆனால், இன்றைய சமுதாயத்தில் பெண்கள் சகல துறைகளிலும் சாதித்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் பெண்களை விட பல விடயங்களில் ஆண்கள் புறம்பேச தொடங்கியுள்ளார்கள் என்பது பலரின் குற்றச்சாட்டு.