எதிர்பாராத விபத்தில் இறந்த ஏழு பிரபலங்கள்

 

மரணம் எந்த நேரத்தில் எந்த உருவத்தில் வரும் என்பது யாருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், சிறந்த தேக ஆரோக்கியத்துடன் இருந்தவர்கள் திடீரென இறப்பது சற்று ஜீரணிக்க முடியாத விடயம். அதுதான் வாழ்க்கை. அவ்வாறு வாழ்ந்து எதிர்பாராத சந்தர்ப்பத்தில் இவ்வுலகை விட்டு பிரிந்து சென்ற 7 பிரபலங்கள் தொடர்பாக இன்று பார்க்கவுள்ளோம்.

 

போல் வால்கர்

நாம் அனைவரும் நன்கு அறிந்த FAST AND FURIOUS FRENCHISE எனும் திரைப்படத்தில் BRIAN O’CONNER கதாப்பாத்திரத்தில் நடித்தவரே PAUL WALKER. உதவி வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றிற்குச் சென்று காரில் தனது நண்பருடன் திரும்பி வரும் வழியில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். அங்கிருந்த கமெராக்களில் உதவியின் படி பார்த்தபோது அந்த வாகனத்தை போல் வால்கரின் நண்பரே ஓட்டியுள்ளார். வேகமாக வந்த வாகனம் கம்பத்தில் மோதி எரிந்துள்ளது. அதில் சிக்கிய இருவரும் அடையாளம் காண முடியாதவாறு உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இறக்கும்போது வால்கரின் வயது 40.

 

திவ்யா பார்தி

90 களில் பிரபல பொலிவுட் நடிகையாக இருந்தவரே திவ்யா பார்தி. இவர் தனது வீட்டின் பால்கனியில் இருந்து கீழே விழுந்து இறந்தார். அன்றைய தினம் இவர் அதிகமாகக மது அருந்தியிருந்ததாகவும் அதுவே இந்த விபத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகின்றது. விழுந்ததில் தலையில் பட்ட பலமான அடி அவரது தலைக்குள் இரத்த கசிவுகளையும் ஏற்படுத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறக்கும் போது அவருக்கு வெறும் 19 வயதாகும்.

 

ஸ்டீவ் ஆர்வின்

இவரை CROCODILE HUNTER என்றாலே அதிகமானோருக்கு தெரியும். ஸ்டீவ் ஆர்வின் பலவிதமான ஆபத்தான உயிரினங்களுடன் டிவி ஷோக்களை செய்துள்ளார். அப்படி ஒரு டிவி ஷோவின் போதுதான் இவரது மரணமும் நிகழ்ந்துள்ளது. ஒரு STINGRAY யினது BARB அதாவது திருக்கையின் வால் அவரது நெஞ்சில் குத்தியதில் அவர் உயிரிழந்தார். இறக்கும் போது அவருக்கு 44 வயது.

 

பிலிப் ஹியூஸ்

பவுன்சர் பந்துதான் இவரது மரணத்திற்கு காரணமாக அமைந்தது. ஃபிலிப் ஹியூஸ் அவுஸ்திரேலியாவில் நடந்த மாநில கிரிக்கெட் போட்டியின் போது வீசப்பட்ட பவுன்சர் பந்து தாக்கியதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இது உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் இரசிகர்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இறக்கும்போது இவருக்கு வயது வெறும் 25 மட்டுமே.

 

லிண்டா லவ்லஸ்

பிரபல பாலியல் திரைப்பட நடிகையாக இருந்த லிண்டா லவ்லஸ் வாகன விபத்தில் உயிரிழந்தார். பாலியல் படங்களில் நடிப்பதை தவிர்த்து பின்னர், பாலியல் படங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒருவராக லிண்டா வாழ்ந்து சிறுகால இடைவெளிக்குள்ளேயே வாகன விபத்தொன்றில் இறந்து விட்டார். இறக்கும்போது இவரது வயது 53 ஆகும்.

 

ஜேம்ஸ் டீன்

ஜேம்ஸ் டீன் அந்த காலத்தில் பிரபல நடிகராகவும் கார் மீதான அதீத பிரியம் கொண்டவராகவும் இருந்தார். எனினும், அவர் விரும்பிய காரே அவருக்கு யமனானது. ஆம் கார் விபத்திலேயே அவர் உயிரிழந்தார். இறந்த பின்னர் இவரது காரினை சரிசெய்ய வரும் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஆபத்து ஏற்பட்ட வண்ணமே இருந்தது.

 

கோப் பிரியண்ட்

சில நாட்களுக்கு முன்னர் உலகில் பலரது கவனத்தை ஈர்த்தவர்தான் கோப் பிரியண்ட். இவர் தனது மகள் மற்றும் 9 நபர்களுடன் ஹெலிகொப்டரில் செல்லும் போது அதில் ஏற்பட்ட ஒரு என்ஜின் கோளாறினால் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இறக்கும்போது அவருக்கு 41 வயது.