இப்பொழுதெல்லாம் சில நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் LIVING ரிலேஷன்ஷிப் வாழ்க்கை முறையும் வாழ்ந்து வருகின்றனர். அதாவது திருமணம் முடிக்காமல் சேர்ந்து வாழ்தல். இது எமது நாட்டில் சாத்தியப்படாத ஒன்றாக உள்ளது. எமது சமுதாயம் அதனை ஏற்றுக்கொள்ளாது.
திருமணத்திற்கு பின்னரே வாழ்க்கை முழுமையடைவதாக பலர் கூறுகின்றனர். இந்த கட்டுரையை வாசிக்கும் பலர் ஏற்கனவே திருமணம் செய்தவராக இருக்கவும் கூடும். அதைபோல திருமணம் செய்யாதவர்களும் இதனை வாசிப்பீர்கள். திருமணம் செய்யாதவராயின் திருமணத்தை பற்றிய ஒரு யோசனை கட்டாயம் கிடைக்கும். திருமணம் செய்தவர்களாக இருப்பின், அதனால் நீங்கள் பெற்றுக்கொண்ட, பெறப்போகும் விடயங்களை பற்றி தெரிந்துகொள்வீர்கள். இதனை வாசியுங்கள்.
புதிய வாழ்க்கை ஆரம்பமாகும்
இவ்வளவு காலமாக திருமணம் முடிக்காமல் வாழ்ந்த ஒருவர், திருமணம் முடித்தபின் சகல விடயங்களையும் பெற்றுவிட்டார் என கூற முடியாது. சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும். திருமணம் செய்த பின்னர் அந்த குடும்பத்திற்கு பொறுப்புகள் அதிகரிக்கின்றன. சமுதாயத்தில் ஒரு தனி மனிதனை விட திருமணம் செய்தவருக்கு முன்னுரிமையும் அதிகம். உதாரணமாக ஏதாவது ஒரு சாதாரண அப்ளிகேஷன் FORM அல்லது VACANCY FORM இலும் கூட திருமணம் செய்தவரா இல்லையா என்ற கேள்வி இருக்கத்தான் செய்யும். ஏனென்றால் திருமணம் செய்தவருக்கு பொறுப்புணர்வு அதிகம் இருக்கும் என்ற கோட்பாட்டில் சமூகம் புரிந்து வைத்துள்ளது. இதன் மூலம் சமுதாயத்தில் இருக்கக்கூடிய பல முன்னுரிமை நன்மைகளை பெற்றுக்கொள்ளலாம்.
பொருளாதார ரீதியாக பலமாகுதல்
சிங்கிளாக இருக்கும் காலமெல்லாம் செய்த வேலை தொழில்களில் பெரிய ஈடுபாடு, கவனம் இருக்காது. அதற்கு பொதுவான காரணம் செலவு அதிகமாக இருக்காது. ஆனால் திருமணத்தின் பின்னர் சம்பளத்தையே முடிக்கும் அளவுக்கு செலவு இருக்கும். அதனால்தான் சம்பளம், வேலை வாய்ப்புகள், பிரமோஷன் போன்றவற்றை கருத்திற்கொண்டு தொழில் வாழ்க்கையை சீரமைத்துக்கொள்ள பழகிக் கொள்வார்கள். இதன்மூலம் ஒரு நல்ல திட்டமிடும் பழக்கத்தையும் வளர்த்துக் கொள்ளலாம்.
பிடிக்காவிட்டாலும் மாறித்தான் ஆக வேண்டும்
சிங்கிளாக இருக்கும்போது இருந்ததைவிட திருமணத்தின் பின்னர் அதிகமான மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் அவை பயனுள்ளவை. எவ்வளவுதான் கோபமானவராக இருந்தாலும் சகித்து வாழக்கூடிய ஒருவராக மாறமுடியும். ஒரு நல்ல பொறுமைசாலியாகவும் வாழும் பண்பை தரக்கூடியது.
உடலுறவுடன் கூடிய வாழ்க்கை
உலகின் பல முன்னணி நாடுகளில்கூட திருமணம் செய்யாதவரை விட திருமணம் செய்தவர்தான் அதிகமான உடலுறவு சந்தோஷத்தை பெறுகிறார் என பல ஆய்வுகள் அறிவிக்கின்றன. ஒருவருக்கு என்னதான் பாலியல் இன்பம் பெற வேறு வழிகள் இருந்தாலும், திருமணத்திற்குப் பிறகுதான் பாலியல் உடலுறவு வாழ்க்கையின் பல பலன்களை அனுபவிக்க முடியும். தேவையென்றால் பணத்தை கொடுத்து பெறக்கூடிய இன்பமாக இதனை பலர் கற்பனை செய்துள்ளனர். உண்மையில் இந்த உடலுறவு இன்பத்தை சட்டத்தின்படி சுதந்திரமாக உங்களுக்கு விரும்பிய நேரம் பெறுவதற்கு திருமணம் வழிவகுக்கின்றது.
அன்பான உடலுறவின் பரிசு
திருணம் செய்யாமலும் குழந்தையை வளர்க்க முடியும். ஆனால் அதற்கு பின்னர் சமூகத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நேரமும் உள்ளது. அதனால் திருமணத்தின் பின்னர் குழந்தையை வளர்ப்பது மிகவும் சுவாரஷ்யமாகவும் இருக்கும். அதேபோல மிகவும் மன நிம்மதியையும் தரக்கூடியது. கணவன் மனைவிக்கு இடையிலான உண்மையான அன்பான புரிதலின் பின்னர் உருவாகக்கூடிய அற்புதமான பரிசுதான் குழந்தை. அந்த குழந்தையை வளர்த்தெடுக்கும் போது பெறக்கூடிய சந்தோஷத்தை தனி மனிதனால் அனுபவிக்க முடியாது.
பங்கிட்டு வாழ்தல்
சில விஷயங்கள் திருமணத்தின் பின்னர் தானாகவே நடக்கும். சிலர் வீடுகள், கார்கள், சொத்துக்கள் போன்ற மதிப்புமிக்க விஷயங்களை பங்கிட்டுக்கொள்கிறார்கள். புதிதாக எதுவும் கிடைக்காவிட்டாலும் இருவரினதும் பங்களிப்பில் வீடு கார் போன்றவற்றை வாங்குவதற்கு குடும்பத்திற்கு வசதி இருக்கும். அதேபோல வாழ்க்கையை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டுசெல்ல திருமணத்தின் பின்னர் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இது எந்த நேரமும் சாத்தியப்படாது. புத்திசாலியான கணவன் மனைவிக்கு வாழ்க்கையை பங்கிட்டு வாழ கற்றுத்தர தேவையில்லை.