நாம் வாழும் இவ்வுலகில் பலவகையான மரங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் இரகசியங்களையும் அதற்கான சிறப்பான தனித்துவமான வரலாற்றையும் கொண்டுள்ளன. இன்று நாம் உங்களுக்கு பல்லாயிரக்கணக்கான வருடங்கள் பழைமையான மரங்களை பற்றி சொல்லித் தர உள்ளோம். உலகில் இதைவிட அதிகமான மரங்கள் பழைமையாக இருக்கக்கூடும். இதுவரை மனிதன் கண்டுபிடித்த பழைமையான மரங்களையே இங்கு குறிப்பிட்டுள்ளோம். உங்களுக்கு இதைவிட பழைமையான மரங்களை பற்றி தெரிந்தால் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Llangernyw Yew
இங்கிலாந்தில் வேல்ஸ் நகரத்தில் உள்ள இந்த மரம் சுமார் நான்காயிரம் வருடங்கள் பழைமையான மரமாகும். இந்த மரத்தின் நடுப்பகுதி சிதைவடைந்துள்ளதால் இதன் வயதை சரியாக கணிக்க முடியாமல் உள்ளது. வேல்ஸ் நகரத்தின் கட்டுக் கதைகளின் அடிப்படையில் இந்த மரம் அங்குள்ள ஒரு தேவாலயத்திற்கு உரித்தான நிலத்தில் உள்ள மரமாகவும் கூறப்படுகின்றது. இங்கிலாந்தில் எலிசபெத் ராணியின் பொன்விழா இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டு நடைபெற்றபோது இந்த மரமும் விழாக்கோலம் கண்டது.
Methuselah
4789 ஆண்டுகள் பழைமையான மரம் என 2012 வரை இந்த மரம் கருதப்பட்டது. கலிபோர்னியாவின் எண்யோ எனுமிடத்தில் வெள்ளி மலையில்தான் இது அமைந்துள்ளது. இப்படிக் கூறினாலும் இந்த மரம் பற்றிய சரியான தகவல்களை விஞ்ஞானபூர்வமாக இதுவரை வெளியிடவில்லை. இந்த மரத்தின் வயதை ஒப்பிடுகையில் எகிப்து நாட்டின் பிரமிட்டுகள் கட்டப்பட்ட காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து இது இருக்கலாமென கருதப்படுகிறது. 2003இல் இந்த மரத்தை பற்றி மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ள ஜெரார்ட் மில் ஆர்ச் என்பவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
Prometheus
1964 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த மரம் சுமார் 4850 தொடக்கம் 4900 வருடம் பழமையான மரம் என நம்பப்படுகிறது. இந்த பைன் மரம் அமெரிக்காவின் நவேதாவின் வீலர் பூங்காவில் உள்ள பழைமையான மரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த மரம் தற்போது உயிருடன் இல்லை. 1964-ஆம் ஆண்டில் பேய் பற்றி ஆராய்ச்சி செய்ய ரெனால்ட் ஆர் அனுமதிக்கப்பட்டார். இவர் இந்த மரத்தை முழுமையாக வெட்டியே அதன் வயதை அறிய முயற்சி செய்தார். இந்த இடம் ஆதிகாலம் தொட்டு இருப்பதால் இந்த மரம் 4900 வருடங்களையும் தாண்டி பழைமையானதாக இருக்கக்கூடும் என விஞ்ஞான ரீதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் வெட்டி எடுக்கப்பட்ட மற்றொரு பாகம் இன்னும் அந்த பூங்காவில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
Unnamed Great Basin Bristlecone Pine
ஒரு மரமாக கொண்டால் வயது முதிர்ந்த மரமாக இந்த மரத்தைச் சொல்லலாம். இந்த மரம் சுமார் 5072 வருடங்கள் பழைமையானது. இந்த மரத்தை பற்றி ஆராய்ச்சி செய்த ஒரு ஆராய்ச்சியாளர் 2010 ஆம் ஆண்டு திடீரென உயிரிழந்தார். அவருக்குப் பின்னர் இந்த மரத்தைப் பற்றி யாரும் கணக்கெடுப்பு எடுக்காததை தொடர்ந்து இது இன்னும் உலகின் மிகவும் பழமையான மரமாகவே கருதப்படுகிறது.
Old Tjikko
ஸ்வீடன் நாட்டின் நோவே ஸ்பைஸ் எனும் பெயரில் பிரபலமான இந்த மரம் அந்நாட்டின் ஒரு மலையுச்சியில் உள்ளது. சுமார் 9550 வருடங்களுக்கும் அதிகமாக வாழும் மரமாக கருதப்படுகிறது. இந்த மரம் தற்போதும் நல்ல நிலையில் உள்ளது.
Jurupa Oak
ஜூரூபா ஒக் இல்லாவிட்டால் பார்மர் ஓக் எனப்படும் இந்த மரம் சுமார் 13000 வருடங்கள் பழைமையானது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஜூரூபா மலையில்தான் இது அமைந்துள்ளது. தற்போதும் உயிர் வாழும் இந்த மரத்தைச் சுற்றிலும் புதர் மாதிரியான தோற்றம் காணப்படுகின்றது.
Pando
சுமார் 80 ஆயிரம் வருடங்கள் பழைமையான இந்த மரம் அமெரிக்காவின் ஃபிஷ் லேக் தேசிய வனத்தில் அமைந்துள்ளது. இந்த பெண்டு மரம் உலகில் வாழும் மிகவும் அரிதான ஆயுள் அதிகமான பழைமையான மரமாகும். உலகின் முதல் மரமாக கருதப்படும் இந்த மரம் இப்போது மனித நடவடிக்கைகள் மற்றும் கால்நடைகளின் விருத்தி காரணமாக அழியும் கட்டத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது. மேலும் மனிதனின் செயற்பாடுகள் காரணமாக இதன் பரவலும் தடைபட்டு வருகின்றது.