இதற்கு முன்னரான பதிவில் பயனுள்ள நான்கு இணையத்தளங்கள் தொடர்பாக உங்களுக்கு கூறியிருந்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த கட்டுரை எழுதப்படுகின்றது. இன்றைய இணையத்தளங்களில் உங்கள் கல்விக்கு தேவையான சில விடயங்களும் உள்ளன. வாசித்துப் பாருங்கள்.
FIREFOX MONITOR
உங்களுடைய மின்னஞ்சல் எப்படியாவது கசிந்துள்ளதா என்பதை இந்த இணையத்தளத்தின் மூலம் நீங்கள் கண்டறியலாம். உங்களுடைய பிரவுசரில் monitor.firefox.com டைப் செய்தால் Firefox இன் பகுதி ஒன்று வரும். அதில் உங்கள் ஈமெயிலை ENTER EMAIL ADDRESS என்று இருக்கும் இடத்தில் INPUT செய்து CHECK FOR BREACHES பட்டனை கிளிக் செய்யுங்கள். அதற்கு பின்னர் உங்கள் ஈமெயில் இதற்கு முன்னர் வேறு எங்கெல்லாம் கசிந்துள்ளதென பார்க்கலாம்.
WEB LINK : https://monitor.firefox.com/
FREE STOCK PHOTOS AND VIDEOS
pexels.com என்ற இந்த வெப்சைட்டின் மூலம், நீங்கள் தயாரிக்கும் பிரசன்டேஷன் அல்லது வீடியோக்களுக்கு தேவையான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கலாம். பொதுவாக நாம் இவற்றிற்கு தேவையான படங்கள் மற்றும் காணொளிகளை கூகுள் யூடியூப்பில் இருந்தே எடுக்கின்றோம். சில நேரங்களில் அதற்கான copyright பிரச்சினைகள் வரும். இனி அந்த கவலை வேண்டாம். இந்த வெப்சைட்டில் இருந்து உங்களுக்கு தேவையானவற்றை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இங்குள்ள படங்கள் மற்றும் காணொளிகள் HD தரத்திலேயே உள்ளன.
WEB LINK : https://www.pexels.com/
NEW DESIGN CV / BIO DATA MAKER
வேலைக்குச் செல்ல வேண்டுமானால் முதலில் சுயவிபரக் கோவையை தயாரிக்க வேண்டும். இதுவும் காலத்திற்கு காலம் மாறிக்கொண்டே செல்லும். அதற்கு ஏற்ற வகையில் நாமும் சுயவிபரக் கோவையை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் யார் என்பதை உங்கள் சுயவிபரக் கோவை காட்டிவிடும். இனி அந்த கவலை வேண்டாம். இந்த வெப்சைட்டிற்குச் சென்று உங்களுக்கு தேவையான டிசைனில் சுயவிபரக் கோவையை தயாரித்துக்கொள்ளுங்கள். இதில் உங்களுக்கு தேவையான FONT DESIGN , SIZE போன்றவற்றை மாற்றிக்கொள்ளலாம்.
WEB LINK : https://www.resumemaker.online/
LIVE FLIGHT INFORMATION
flightradar24.com எனும் இந்த இணையதளம், விமானங்கள் பயனிப்பதை நேரலையாக காட்டும். உதாரணத்திற்கு கொழும்பிலிருந்து சென்னை செல்லும் ஒரு விமானம் பற்றிய முழுமையான தகவல்கள் அதாவது அது செல்லும் வழி, செல்லவிருக்கும் தூர அளவு, நேரம் என எல்லாவற்றையும் காட்டக்கூடிய ஒரு வெப்சைட்தான் இது. இதிலேயே 3D வியூ – ஆக பார்க்கவும் முடியும். அதற்கு அதனை சப்ஸ்கிரிப்சன் செய்ய வேண்டும்.
WEB LINK : https://www.flightradar24.com/