வித்தியாசமான ஒன்லைன் சேவைகள்

 

எது இல்லாவிட்டாலும் இப்போது அனைவரது கையிலும் மொபைல் உள்ளது. இப்போது எமக்கு தேவையான பொருட்களை ஒன்லைன் சேவையின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இன்று நாம் சில வித்தியாசமான ஒன்லைன் சேவைகள் தொடர்பாக உங்களுக்கு கூறவுள்ளோம்.

 

CURSE SERVICE

நீங்கள் எப்போதாவது யாரையும் சபித்துள்ளீர்களா? குறிப்பாக “நீ நாசமா போயிடுவ, உன் கைகால் விளங்காம போய்விடும், உன் வீடு இடிந்து விழும்” இப்படி போன்ற சாபங்களை விட்டுள்ளீர்களா? அப்படி செய்திருந்தால் உங்களுக்கு இந்த தகவல் பயனளிக்கும். ஆமாம், CURSE SERVICE என்ற சேவையில் 13 டொலர் முதல் 130 டொலர் வரை சபித்தல் சேவைகள் உள்ளன. உங்களுக்கு எப்படி தேவையென கூறுங்கள். அவர்கள் அதை தயார்செய்து தந்துவிடுவார்கள்.

 

BREAKUP SERVICE

பலர் தமது காதலை மற்றுமொருவருக்கு சொல்ல தைரியம் இல்லாமல் இருப்பர். காதல் தோல்வியைக்கூட சொல்லத் தயங்குவார்கள். அவ்வாறானவர்களுக்கு இந்த சேவை உதவும். உங்கள் காதலனிடமோ அல்லது காதலியிடமோ உங்களது காதல் BREAKUP ஐ சொல்ல பயமாக இருந்தால் அல்லது அவர்கள் கஷ்டப்படுவார்கள் என நீங்கள் நினைத்தால், உங்களுக்காக இவர்கள் அதை செய்வார்கள். அதாவது TEXT MESSAGE அல்லது CALL அல்லது DOOR STEP இல் போய் சொல்வார்கள். இந்த சேவைக்கு 10 டொலரில் இருந்து 80 டொலர் வரை செலவாகும்.

 

HEAD ADVERTISING SERVICE

உங்கள் நிறுவன தயாரிப்பு அல்லது சேவையை விற்பனை செய்ய நினைத்தால் டிவியில் விளம்பரம் தேவையில்லை. யாராவது ஒருவரின் தலையை வாடகைக்கு எடுக்க வேண்டியதுதான். என்ன ஆச்சரியமாக உள்ளதா? யார் தலையை வாடகைக்கு தரப்போறார்கள் என நீங்கள் நினைப்பது எங்களுக்கு கேட்கின்றது. இதற்கும் ஒரு சேவை உள்ளது. 2005ஆம் ஆண்டே இந்த சேவை வந்துவிட்டது. SNORE STOP என்ற நிறுவனம் ANDREW FISCHER என்பவரை 37375 டொலர் கொடுத்து அவரது நெற்றியை வாடகைக்கு எடுத்துவிட்டார்கள்.

 

FRIENDS FOR RENT

இதை வாசிக்கும்போது, உங்கள் யாருக்காவது நண்பர்கள் இல்லாவிட்டால் கீழுள்ள பெட்டியில் பதிவிடுங்கள். ஆமாம், நீங்கள் தனிமையாக இருக்கும் அல்லது தனிமையை உணர்ந்தால் இந்த சேவையின் மூலம் நண்பர் ஒருவரை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். ஒரு இரவு சினிமா பார்க்க, ரெஸ்டோரண்டுக்கு சாப்பிடப் போக, சுற்றுலா செல்ல என இந்த வாடகை நண்பரை பயன்படுத்திக்கொள்ளலாம்.

 

FREE SPRAY

உங்கள் நண்பர்கள் யாராவது அருகில் வந்தால் நாற்றம் தாங்கமுடியவில்லையா? அவர்களுடைய பெயரை கீழே பதிவிடுங்கள். அவர்களுக்கு ஒரு வாசனை திரவிய போத்தல் அனுப்ப நினைத்தால், அதற்காக ஒரு இணையத்தளம் உள்ளது. அதில் அவர்களுடைய வீட்டு முகவரியை கொடுத்துவிடுங்கள். உங்களது தகவல் தேவையில்லை. யார் அனுப்பினார்கள் என தெரியாமலேயே அனுப்பிவிடலாம்.