இளைஞர்கள் மேலதிக வகுப்பிற்கு படிப்பதற்கு மட்டுமே செல்கின்றனர் என்றால் நம்பாதீர்கள். ஆமாம், படிப்புடன் பல சுவாரஸ்யங்களையும் நிகழ்த்தவே அவர்கள் செல்கின்றனர். அவற்றில் சில விடயங்களை இன்று பார்ப்போம்.
நண்பேண்டா!
இப்பொழுதெல்லாம் இளைஞர்கள் மேலதிக வகுப்பிற்குச் செல்ல அவர்களது நண்பர்களும் காரணம். இளைஞர்கள் எப்போதும் ஒரு நட்பு வட்டாரத்துடன் சுற்றிக்கொண்டிருப்பார்கள். அதே பழக்க தோஷத்தில் மேலதிக வகுப்புகளிலும் நண்பர்களுடன் சேர்ந்துவிடுவார்கள்.
இவ என் ஆளு!
மேலதிக வகுப்புகளில் குறிப்பாக பெண்பிள்ளைகள் டிசைன் டிசைனாக உடுத்திக்கொண்டு வருவார்கள். அவர்களை கவர்வதற்கு என்றே ஒரு இளைஞர் கூட்டம் மேலதிக வகுப்புகளில் வட்டமிடும்.
ஹோம் வர்க் வேணாம் சார்!
வகுப்பில் கொடுக்கும் பாடங்களுக்கே சலித்துக்கொள்ளும் இளைஞர்கள், வீட்டு வேலை கொடுத்தால் மூக்கால் அழுவார்கள். வீட்டில் சென்று படிக்கவோ அல்லது எழுதிக்கொண்டு வரவோ ஏதும் தரக் கூடாதென்பதே இவர்களின் எதிர்பார்ப்பாக அமையும்.
ஷேம் ஷேம் பப்பி ஷேம்!
தெரியாத கேள்விகளை கேட்டு பெண்பிள்ளைகளுக்கு முன்னால் அவமானப்படுத்தப்பட்டு விடுவோமோ என்ற பயம் இளைஞர்களுக்கு இருக்கும்.
பாஸ் ஆகிடுவேன்
இங்கேயாவது பாஸ் ஆகிவிடுவோமா என்று யோசிப்பார்கள். பாடசாலையில்தான் மக்குனு பெயர் வாங்கிட்டோம். இங்கேயாவது நல்ல பெயர் வாங்கிவிடுவோம் என்ற நினைப்பு இருக்கும்.