SAMSUNG S20 வாங்குவது சிறந்ததா?

SAMSUNG தனது மேம்படுத்தப்பட்ட புதிய கையடக்கத் தொலைபேசியை புதிதாக வெளியிடும் போது ஏதாவது புதிய FEAUTURES ஐயும் சேர்த்தே வெளியிடும். உதாரணமாக உலகின் முதல் HEART RATE MONITOR வைத்த போனையும் SAMSUNG தனது S5 போன் மூலமாக 2014 இல் அறிமுகம் செய்தது. DUAL PIXEL தொழிநுட்பத்தையும் முதன் முதலில் தனது GALAXY S7 ஸ்மார்ட்போன் மூலமாக அறிமுகம் செய்தது. GALAXY S8 மற்றும் S8 + இல் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட INFINITY DISPLAY முறை இன்றும் பல மொபைல் BRAND கம்பெனிகளால் வெவ்வேறு பெயரில் அறிமுகம் செய்கின்றனர். இது போன்ற பல FEATURE களையும் அறிமுகம் செய்த SAMSUNG இனால் புதிதாக வெளியிடப்பட்ட SAMSUNG GALAXY S20 SERIES பற்றி இன்று பார்ப்போம்..

 

பெரிய பேட்டரி

SAMSUNG இன் S20 ULTRA வில் 5000mAh பேட்டரி உள்ளது. ஸ்மார்ட்போன் எவ்வளவு நேரம் பேட்டரி தாக்குப்பிடிக்கும் என்பதை பேட்டரியின் கொள்ளளவு தீர்மானிப்பதில்லை. அதன் SOFTWARE மற்றும் SCREEN SIZE போன்ற பிற காரணிகளும் அதை தீர்மானிக்கின்றன. ஆனால் 5000Mah இல் நீங்கள் S20 ULTRA வின் பேட்டரி ஆயுள் குறித்து நம்பிக்கையாக இருக்க முடியும். ஏனென்றால் இந்த S20 SUPER AMOLED DISPLAY யை தான் கொண்டுள்ளது. சில FLAGSHIP போன்கள் மட்டும் 5000 MAH பேட்டரியை கொண்டுள்ளன.

 

DSLR இல்லாத கவலையை நீக்க

ஸ்மார்ட்போன்களை DSLR கேமராவின் தரத்தோடு ஒப்பிட முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. அதிகமான பயணங்கள், படங்கள் எடுக்கும் பலருக்கும் எந்த நேரமும் DSLR கேமராவை பிடித்துக்கொண்டிருக்க கை வலிக்கும் என்றால், அதை வீட்டிலேயே விட்டுவிடுவதைப் பற்றி யோசித்தால் நல்லது. நாம் செல்லும் எல்லா இடங்களிலும் எப்போதும் நம்முடன் எடுத்துச் செல்லும் வகையில் ஒரு DSLR கேமராவை ஒஸ்மார்ட்போன் கேமரா மாற்றம் செய்தால் சிறப்பாகவே இருக்கும். ஆம், இதன் கேமராவின் பயன் அப்படியானதே.

 

கேமராவில் 100 X ZOOM

S20 இன் அனைத்து அம்சங்களும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் குறிப்பாக கேமரா FEATURES இல் மிகவும் சூப்பரான விடயங்களை எடுத்து வந்துள்ளார்கள். இந்த போனில் உள்ள குறிப்பாக, “SINGLE TAKE” MODE இனது பல (PHOTOS, GIFs, WIDE ANGLE போன்றவை) மூலம் பல்வேறு வீடியோக்களையும் படங்களையும் எடுத்து வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்த விரும்புவதை தெரிவுசெய்ய முடிகிறது. அதாவது S20 மூன்று கேமராக்களுடனும், S20 PLUS நான்கு கேமராக்களுடனும் 64 MP கேமரா லென்ஸை கொண்டுள்ளது. S20 ULTRA 5 கேமராக்களுடன் 108 MP க்களை கொண்டுள்ளது. மேலதிகமான ஒரு கேமரா மூலம் 100 X SPACE ZOOM செய்து படங்களை எடுத்துக் கொள்ள முடியும்.

 

SAMSUNG QUICK SHARE

SAMSUNG நிறுவனம் இந்த தடவை IPHONE இன் AIRDROP இற்கு போட்டியாக SAMSUNG QUICK SHARE எனும் ஒரு FEATURE ஐ கொண்டுவந்துள்ளது. சாராம்சத்தில், GALAXY S20 பயனர்கள் அருகிலேயே இருக்கும்போது ஒருவருக்கொருவர் விரைவாக CONTENT களை பகிர இது அனுமதிக்கும். ஐபோன் VERSION களின் முன்னேற்றம், ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அளவு முடியுமாய் உள்ளது. ஆனால் இப்போதைக்கு S20 பயனர்கள் மட்டுமே ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள முடியுமாய் உள்ளது.

 

BIG SCREEN WITHOUT SEXY COLOURS!

GALAXY S20 ULTRA மிகவும் பெரிய SCREEN ஐ கொண்டது. அதன் SIZE 6.9 INCHES SCREEN மற்றும் சுமார் அரை பவுண்ஸ் எடையைக் கொண்டுள்ளது. சரியாக சொன்னால் நீங்கள் பெரிய போன்களை விரும்பாதவர் என்றால் இது உங்களுக்கானதல்ல. அடுத்து இந்த S20 ULTRA வில் இரண்டு நிறங்கள் மட்டுமே இருக்கின்றன. சுமார் இரண்டரை இலட்சம் கொடுத்து இந்த போனை வாங்குவதென்றால் அதனுள் இருக்கும் கேமரா மற்றும் மற்றைய ஸ்பெசிபிகேஷன்களே காரணம். பார்ப்பதற்கு SEXY யாக இருப்பதற்காக மாத்திரம் அல்ல என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.