இலகுவான டேட்டிங் டிப்ஸ்

 

காதலியை வெளியில் அழைத்துச் செல்ல போகின்றீர்களா? சந்தோஷமான விசயம் என்றாலும் உங்களது பணப்பையை காலிசெய்துவிடும் விசயமும்கூட. அங்கு சென்று செலவு பற்றி கவலைப்பட முடியாது. உதாரணமாக GALLEFACE இல் இறால் வடை மிகவும் பிரசித்தமானது. ஆனால் விலையும் சற்று அதிகம்தான்.  விலையை பார்த்தால் சந்தோசத்தை பெற முடியுமா? கவலை வேண்டாம். உங்கள் பணப்பையையும் பாதுகாத்துக்கொண்டு சந்தோசமாக இருக்க சில வழிகளை இன்று கொண்டுவந்துள்ளோம்.

 

ஜோடி சமையல்

அநேகமாக இவ்வாறான விடயங்களை திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். நேரம் செலவாகும் விடயம் என்றாலும் இரண்டு காதல் உள்ளங்கள் சேர்ந்து சமைத்து சாப்பிடும் போது கிடைக்கும் அந்த சந்தோசம் வேறு எதிலும் கிடைக்காது.

 

நீல வானம் நீயும் நானும்

எந்த செலவும் இல்லாமல் உங்கள் காதலியுடன் சேர்ந்து இனிமையாக நேரத்தை செலவழிக்கக்கூடிய ஒரே இடம் இயற்கை அழகு. குறிப்பாக இரவு நேரத்தில் வானத்தில் நட்சத்திரங்களை பார்த்துக்கொண்டு இருப்பது மிகவும் அழகாக இருக்கும். குறைந்தது ஒரு மணி நேரமாவது மனம் விட்டு பேச சந்தர்ப்பம் கிடைக்கும். பயன்படுத்திக்கொள்ளுங்கள் நண்பர்களே.

 

வெளியே போலாமா?

வெளியே போக வேண்டும் என்றதும் பெரிய பட்ஜட் போட்டு வெளியே போகவேண்டும் என நினைத்துவிடாதீர்கள். நீங்கள் வாழும் பிரதேசத்திலேயே நல்ல அமைதியான இடமாக பார்த்து சென்று வாருங்கள். உளவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்கள் வெளியே இருப்பதைவிட வீட்டில் இருக்கும்போதே நிறைய செலவு வைப்பார்கள்களாம். அதனால் நேரம் கிடைக்கும்போது எப்படியாவது வெளியே பைக்கில் ஒரு ரவுண்டாவது அழைத்துச்செல்லுங்கள்.

 

ஒரு போட்டோ ப்ளீஸ்!

புகைப்படங்களே எமது சந்தோசத்தின் அடையாளங்கள். சிலர் அதிக புகைப்படம் எடுப்பவர்களை பார்த்து சிரிப்பார்கள். ஆனால் எம் நினைவாக புகைப்படங்கள்தான் இருக்கின்றன. அவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். அதுவும் மனதுக்கு பிடித்தவருடன் எடுக்கும் புகைப்படங்களில் கிடைக்கும் சந்தோசத்தை அளக்க கருவியில்லை.