MI BAND 4 இல் இருந்து நாம் பெறக்கூடிய நுணுக்கங்கள் பற்றி இன்று பார்க்கவுள்ளோம். அந்த APPLICATION LINK கீழே தரப்பட்டுள்ளது. அதனை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.
MI BAND SELFIE
நீங்கள் பயன்படுத்தும் MI BAND 4 ஐ ஒரு REMOTE SHUTTER ஆக இந்த ஆப் மூலம் பாவிக்கலாம். அதாவது நீங்கள் ஒரு இடத்தில் போய் நின்று உங்கள் போனை ஒரு TRIPOD இல் வைத்துவிட்டு தூரமாக சென்று GROUP போட்டோ எடுக்க வேண்டுமானால், இந்த அப்பிளிகேஷனை டவுன்லோட் செய்து OPEN செய்யுங்கள். அந்த APPஇல் இருக்கும் MAC ADDRESS உம் MI BAND 4 இல் இருக்கும் BLUETOOTH ADDRESS உம் ஒன்றாக இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அதற்குப் பிறகு உங்கள் மொபைல் கேமராவை OPEN செய்து MI BAND 4 SCREEN ஐ அப்படியே SWIPE செய்தால் உங்கள் கேமராவில் போட்டோ OPERATE செய்யலாம்.
https://play.google.com/store/apps/details?id=com.miband2.mibandselfie
PHOTO WALLPAPER
MI BAND 4 இல் உங்கள் போட்டோவையே WALLPAPER ஆக வைத்தால் அழகாக இருக்கும்தானே. இந்த FEATURE ஐ நீங்கள் அனுபவிக்க உங்கள் MI FIT APPஇல் PROFILE > MI SMART BAND 4 > BAND DISPLAY SETTINGS > CUSTOM > WATCH FACES > CHANGE BACKGROUND > TAKE FROM GALLERY சென்று உங்கள் போட்டோவை CUSTOMIZE ஆக வைத்துக்கொள்ளுங்கள்.
SMART LOCK
எவ்வளவுதான் SMART BAND ஆக இருந்தாலும் உங்கள் கையில் இருந்து கழற்றிவைக்கும் போது அது பாதுகாப்பாக இருக்காது. இந்த அசௌகரியம் உங்களுக்கு வரக்கூடாதென்றால் MI FIT APP இல் PROFILE > MI SMART BAND 4 > LAB > BAND LOCK > ON > 4 DIGIT PASSCODE கொடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எப்போதெல்லாம் கழற்றி வைக்கின்றீர்களோ அப்போதெல்லாம் AUTO LOCK ஆகிவிடும்.
TOUCH SCREEN THEN OFF
அநேகமானோருக்கு இதுபற்றி தெரிய வாய்ப்பில்லை. SMART BAND இல் நேரத்தை பார்த்துவிட்டு அது AUTO OFF ஆகும்வரை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் நேரத்தை பார்த்துவிட்டு OFF செய்ய வேண்டுமானால் ஒரு விரலை எடுத்து SCREEN மேல் வையுங்கள். முழுவதுமாக மறைய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பாதி மறைந்தாலும் போதும்.