விமானம் பற்றி பலரும் அறியாத உண்மைகள்

 

வெள்ளை நிறத்தின் ரகசியம்

விமான சேவையில் ஈடுபட்டிருக்கும் விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கான காரணம் தெரியுமா?  இந்த நிறம் விரைவில் மாற்றமடையாது. மேலும் கதிர்வீச்சை கட்டுப்படுத்தும். ஏனைய நிறங்களை இதற்கு பயன்படுத்தினால் புற ஊதாக் கதிர்வீச்சினால் இலகுவாக மங்கி விடும். மேலும் ஏனைய நிறங்கள் வெப்பத்தை மிக விரைவிலேயே உள்வாங்கிவிடும். விமானமொன்றிற்கு நிறப்பூச்சு பூச கிட்டத்தட்ட இலங்கை ரூபாய் மதிப்பின்படி ஒரு கோடியில் இருந்து ஐந்து கோடி வரை செலவாகும். நிறங்கள் மேலதிகமாக பயன்படுத்தும்போது மேலும் செலவு அதிகரிக்கும்.

 

OXYGEN MASK

நாம் விமானத்தில் போகும்போது ஏதாவது பிரச்சினை வந்தால், அல்லது தரையிறங்கும்போது (LANDING) பிரச்சினை ஏற்பட்டால் எமக்கு இந்த OXYGEN MASK கிடைக்கும். எமக்கு வழங்கப்படும் OXYGEN MASK எவ்வளவு நேரம் இயங்குமென தெரியுமா? அந்த OXYGEN மாஸ்கில் இருந்து சுமார் 12 நிமிடம்வரை OXYGEN வரும். 12 நிமிடத்திற்கு பிறகு OXYGEN அளவு குறைந்துவிடும். அதற்குள் விமானம் தரையிறங்கினால் தப்பிக்கலாம்.

 

FIRST AIR HOSTESS

1903 இல் முதல் தடவையாக ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடித்ததில் இருந்து 1930 வரை ஒரு பெண்மணிகூட FLIGHT இல் ஏறவில்லை. 1930 இல் முதல் தடவையாக ELLEN CHURCH எனும் பெண்ணை UNITED AIRLINES என்ற கம்பெனி ஏர்ஹோஸ்டஸ் ஆக நியமித்தது. இதன் பிறகு பெண்கள் பயமின்றி FLIGHT இல் பயணம் செய்ய ஆரம்பித்தார்கள்.

 

விபத்து

இந்த உலகத்தில் நடக்கும் அநேகமான விமான விபத்துக்கள் விமானம் தரையிறங்கும்போதுதான் நடக்கின்றது. விமானம் ஓடுபாதையில் இருந்து பயணிக்க அதாவது மேலெழும்பும்போதும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக விமானம் பறக்க ஆரம்பிக்கும்போது 13 சதவீதமான விபத்தும் தரையிறங்கும்போது 48 சதவீதமான விபத்தும் ஏற்படுகின்றது.

 

சம்பளம்

விமானம் தாமதமாக வந்தால்  எமக்கு நேரம் மாத்திரமே செலவாகும். சிலவேளைகளில் அந்த கோபத்தை FLIGHT ATTENDANCEஇடம் பயணிகள் காட்டிவிடுவார்கள். ஆனால், விமானம் தாமதமாக வந்தாலோ சென்றாலோ FLIGHT ATTENDANCEஇன் சம்பளத்தில்தான் நஷ்டம் ஏற்படும். FLIGHT ல ENTER ஆகும் நேரத்தில் இருந்து மணித்தியால கணக்கிற்குதான் அவர்களுக்கு சம்பளம் கிடைக்கும்.

 

காது கவனம்

விமானம் பறக்கும்போதும் தரையிறங்கும்போதும் தூங்க வேண்டாம் என கூறுவார்கள். காரணம் இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் காற்றழுத்தம் மாறி இருக்கும். இந்த நேரத்தில் நீங்க வாயை மூடி தூங்கிக் கொண்டிருக்கும் போது வெளியில் இருக்கும் உயர் அழுத்தம் காது வழியாக வருவதற்கு முயற்சிக்கும். இந்த நேரம் காதில் எமக்கு கேட்கும் சக்தியை வழங்கும் மென்சவ்வு கிழிந்துவிட வாய்ப்புள்ளது.