வீட்டிலிருந்தவாறு பொருட்கள் வாங்க இலகுவான APPS

 

ஸ்மார்ட்போன் என்பது இன்று உலக நடப்புகளையே உள்ளங்கையில் கொண்டுவந்து தருகின்றது என்றால் அது மிகையாகாது. அதுமட்டுமா, இன்று வீட்டில் இருந்தவாறே உணவு உள்ளிட்ட பல பொருட்களை வரவழைத்துக்கொள்ளலாம். மேற்கத்தேய நாடுகளில் மாத்திரமன்றி இன்று இலங்கையிலும் இக்கலாசாரம் மேலோங்கிவிட்டது. இலங்கையில் அவ்வாறு பிரபலமாகியுள்ள அப்ளிகேஷன்கள் தொடர்பாக இன்று பார்க்கவுள்ளோம். இந்த அப்ளிகேஷன்களை உங்கள் ஸ்மார்ட்போனில் டவுன்லோட் செய்து பின்னர் அதில் கூறியவாறு செயற்படுத்துங்கள்.

 

DARAZ.LK

DARAZ என்பது ஒன்லைன் ஈ-மார்க்கெட் ஆகும். இது இலங்கையில் மாத்திரமன்றி வேறு நாடுகளிலும் காணப்படுகின்றது. இலங்கையில் இந்த அப்ளிகேஷன் ஆரம்பத்தில் KAYMU.LK என்ற பெயரில் வந்தது. தற்போது DARAZ.LK என்ற பெயரில் காணப்படுகின்றது. இதன்5லம் தலைமுடிக்கு தேவையான ஊசி முதல் டிவி , சலவை இயந்திரம் என்று நிறையவே சகல பொருட்களும் உள்ளன. வீட்டு வாசலிலேயே கொண்டுவந்து கொடுத்துவிட்டுச் செல்வார்கள்.

 

UBER EATS

மனித வாழ்க்கைக்கு உணவு மிகவும் முக்கியம். பல சந்தர்ப்பங்களில் கடைகளுக்குச் சென்று எமக்கு சாப்பிட நேரம் கிடைக்காது. சில இடங்களில் கடைகளும் கிடையாது. கடையை தேடி செலவழிக்கும் நேரத்திற்கு இந்த அப்ளிகேஷன் மூலம் உடனடியாக ஓடர் செய்து உணவை பெற்றுக்கொள்ளலாம். நமக்கு விரும்பிய சாப்பாட்டை, தேவையான விலையில் பெற்றுக்கொள்ளலாம். சில வேளைகளில் சலுகைகளும் வழங்கப்படும். அப்போது குறைந்த விலையில் உணவை பெற்றுக்கொள்ளலாம்.

 

PICK ME FOOD

UBER EATS போலவே PickMe foodஉம் இன்று பிரபலமடைந்துவிட்டது. ஆரம்பத்தில் முச்சக்கரவண்டி, கார், பைக் சவாரிகளை மாத்திரம் வழங்கிய பிக்மி இன்று உணவையும் வழங்குகின்றது. பிக்மி அப்ளிகேஷனை டவுன்லோட் செய்திருந்தால் அதிலேயே சவாரியா அல்லது உணவா என்று தெரிவுசெய்து, எமக்கேற்ற விலையில் தெரிவுசெய்துகொள்ளலாம். என்னதான் இருந்தாலும் வீட்டிலேயே சமைத்து சாப்பிடவே நாங்கள் பரிந்துரைக்கின்றோம். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மாத்திரம் இவ்வாறான அப்ளிகேஷன்களை பயன்படுத்துங்கள்.

 

IKMAN.LK

இந்த அப்ளிகேஷன் பற்றி இன்று இலங்கையில் பெரும்பாலானோருக்கு தெரியும். புதிய பொருட்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் மாத்திரமன்றி, பயன்படுத்திய பொருட்களையும் விற்கலாம். அதேபோன்று கொள்வனவும் செய்யலாம். ஆனால் பொருட்களை வாங்கும்போது நன்கு தேடிப்பார்த்து வாங்குங்கள்.

 

MIRRORMIRROR.LK

இந்த அப்ளிகேஷன் தொடர்பாக பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதுவும் பொருட்களை வாங்க பயன்படுத்தும் ஒரு அப்ளிகேஷன் ஆகும். இதில் சுமார் 7000 வகையான பொருட்கள் உள்ளன. அவற்றில் குறிப்பாக பெண்களுக்கு தேவையான ஆபரணங்கள், அழகுசாதனங்கள் என்பன பெயர்பெற்றவை.