மைலோ பானத்தை விரும்பாதவர்கள் குறைவென்று சொல்லலாம். மைலோ மா மூலம் சூடான மற்றும் குளிரான பானங்களை தயாரிப்பதையே நாம் எல்லோரும் அறிவோம். அதை சில உணவாகவும் தயாரிக்கலாம். இவற்றை தயாரித்து உண்ணுங்கள். அத்தோடு நிறுத்திவிடாமல் எமது ஃபேஸ்புக் பக்கத்திற்குச் சென்று உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.
மைலோ புடிங்
தேவையான பொருட்கள்
- மைலோ மா – 5 தேக்கரண்டி
- மில்க்மேட் – ஒரு சிறிய டின்
- வெதுவெதுப்பான நீர் – 200 மி.லீ
- கரைத்த ஜெலட்டின் – 3 தேக்கரண்டி
- மில்க்மேட், நீர் மற்றும் மைலோ ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும்.
- கரைத்த ஜெலட்டினை நன்கு சேர்த்து கலந்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
- பின்னர் புடிங்கின் தன்மைக்கு வந்த பிறகு மறுபுறம் திருப்பி மேலே மைலோ தூள் தூவிக்கொள்ளவும்.
மைலோ குக்கீஸ்
தேவையான பொருட்கள்
- கோதுமை மா – 1 கப்
- ஐசிங் சீனி – 1/2 கப்
- தூய பால் (fresh milk) – 2 மேசைக்கரண்டி
- பட்டர் – 1/2 கப்
- பால் – 1/4 கோப்பை
- மைலோ – 4 மேசைக்கரண்டி
- சொக்லேட் பவுடர் – 1 மேசைக்கரண்டி
- சொக்லேட் சிப்ஸ் – 1/2 கப்
- பேக்கிங் பவுடர் – 1/2 தேக்கரண்டி
- அப்பசோடா – 1/4 தேக்கரண்டி
- உப்பு – சிறிதளவு
- வெணிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்
- கோதுமை மா, ஐசிங் சீனி, பட்டர், பேக்கிங் பவுடர், அப்பசோடா, மைலோ, சொக்லேட் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
- பாலை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.
- இப்போது விரும்பிய அளவு கையால் செய்து, அவற்றை குக்கீஸ் வடிவமாக செய்து சொக்லேட் சிப்ஸ் மேல் வைத்து 180 ° C க்கு 15 நிமிடங்கள் பேக் செய்து எடுக்க வேண்டும்.
மைலோ ப்ரவ்னீ
தேவையான பொருட்கள்
- மைலோ – 5 மேசைக்கரண்டி
- சீனி – 3/4 கப்
- பட்டர் – 100 கிராம்
- முட்டை – 3
- கோதுமை மா – 1 கப்
- வெணிலா அசன்ஸ் – 1 டீஸ்பூன்
- டார்க் சொக்லேட் – 200 கிராம்
- வயிட் சொக்லேட் சிப்ஸ்
- முதலில், பட்டருடன் சொக்லேட்டை கலந்து வேக வையுங்கள்.
- ஒரு தனி கோப்பையில் முட்டை மற்றும் சீனியை ஒன்றாக சேர்த்து அடிக்கவும்.
- அதை வேகவைத்து ஆறிய சொக்லேட்டுடன் சேர்த்து பீட் செய்யுங்கள்.
- இப்போது ஒவனில் கோதுமை மா சேர்த்து வெணிலா எசன்ஸூடன் கலக்கவும். ஒரு பட்டர் தேய்த்த தட்டில் வைத்து 180 ° C க்கு 30 நிமிடங்கள் பேக் செய்ய வேண்டும்.
- பின்னர் மேலே சொக்லேட்டை உருகவைத்து ஊற்றி, சில சொக்லேட் சிப்ஸ் அல்லது மைலோ மாவை தூவவும்.
மைலோ கேக்
தேவையான பொருட்கள்
- கோதுமை மா – 1 கப்
- மைலோ – 1 கப்
- சீனி – 1 கப்
- பேக்கிங் பவுடர் – 1 1/2 தேக்கரண்டி
- உப்பு – 1/4 தேக்கரண்டி
- முட்டை – 3
- உறுக்கிய பட்டர் – 1/3 கப்
- இவற்றையெல்லாம் சேர்த்து ஒரு பீட்டரால் அடித்து கிரீம் போல செய்து கொள்ளுங்கள்..
- என்னை கடதாசி எடுத்து பேக்கிங் தட்டில் வைத்து 180 ° C க்கு 20 நிமிடங்கள் பேக் செய்ய வேண்டும். (20 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு குச்சியினால் குத்தி பார்த்து, மீண்டும் 5-10 நிமிடங்கள் பேக் செய்ய வேண்டும்)
- பின்னர் எடுத்து அதன் மேல் சிறிது சொக்லேட் உருக்கி ஊற்றி பரிமாறவும்.
மைலோ மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்
- பிரெஷ் மில்க் – 1/2 கப்
- ஐஸ் கியூப் – 4-5
- வெணிலா ஐஸ்கிரீம் ஸ்கூப் – 2
- மில்க்மேட் – 2 மேசைக்கரண்டி
- சொக்லேட் சிரப் – 1 மேசைக்கரண்டி
- 1/4 கப் சூடான நீரில், 2 தேக்கரண்டி மைலோ கலந்தது
- அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலக்கவும்.
- ஒரு க்ளாசில் போட்டு, அதன் மேல் ஒரு சொக்லேட் ஐஸ்கிரீம் ஸ்கூப்பை வைத்து, அதில் சில சொக்லேட் சிரப்பை ஊற்றி பரிமாறவும்.