இலங்கையிலுள்ள 7 அழகான பேருந்து பாதைகள்

 

தூர பஸ் பயணம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது மியூசிக்கல் ஷோ, ஜன்னலோர சீட், ஜெட் வேகத்தில் செல்லும் பஸ். அதுமட்டுமல்ல, பஸ் விபத்துக்களும் கூடவே வந்துவிடும். ஆனால் பேருந்துகளைப் பற்றி பேசினால், நாம் விரும்பும் விஷயங்களும் அதிகம் உள்ளன. நம் நாட்டின் அழகு இன்னும் எங்களுக்கு சரியாக தெரியாது. அப்படிப்பட்ட அந்த அழகை நீங்களும் காணலாம். அதற்கு இரவு பகல் பாராது விடிய விடிய ஓடிக்கொண்டிருக்கும் கொழும்பின் புறநகர் பகுதி பஸ்களில் ஏறினால் போதும். ஒரு சிலர் நாம் கூற விருக்கும் இந்த பஸ்களில் சென்றிருக்கலாம். இல்லையென்றால் இந்த கட்டுரையை வாசித்துவிட்டு, விரும்பிய வழிப் பாதையை தெரிவுசெய்து சென்று இயற்கையை ரசியுங்கள்.

 

No 21 பதுளை – கண்டி பாதை

பாதையில் குறைந்தளவு மனிதர்களை மாத்திரமே பார்க்க முடிவதனாலோ என்னவோ தெரியவில்லை இது அழகான பஸ் பாதையாக இருக்கின்றது.  பதுளையில் இந்த பஸ் பாதை வெறும் பச்சை நிறமாக இருக்கும். தென்னக்கும்புர பகுதியை அடையும்போது மீண்டும் சாலையின் இருபுறமும் கொங்கிறீட் மயமாக மாறும். இந்த பாதை பரணி ரஜ மாவத்தை என்று அழைக்கப்படுகிறது. இது விக்டோரியா – ரந்தெனிகள- ரன்தம்பே சரணாலயம் வழியாக நீர்த்தேக்கங்கள் மற்றும் அணைகளுக்குள் உள்ள ஒரு பயண வீதியாகும். சாலையில் சில சமயங்களில் யானையையும் காணலாம். ஆனால் அவை ஒருபோதும் வழியில் வரும் வாகனங்களுக்கு இடையூறு விளைவிப்பதில்லை.

 

No 99 பதுளை- கொழும்பு  வீதி

பசுமையான காட்சிகள், மலைகள், தேயிலைத் தோட்டங்கள், அழகான மென்மையான காற்று மற்றும் குளிர்ச்சியுடன் கூடிய காலநிலை என்பனவுடன் கொழும்பு செல்லும் பாதை குளிர்ச்சியாக காணப்படும். பதுளை – பண்டாரவளை – ஹப்புத்தளை – ஹல்தும்முல்ல – பம்பஹின்ன – பலாங்கொடை ஆகிய இடங்களை கடந்து செல்வதானது மிகவும் ரம்மியமான காட்சியாகும். ஆமாம், இலங்கையின் பல அழகான இடங்களை நீங்கள் கடந்து செல்வீர்கள். ஹப்புத்தளையில் எல்லை வரை சில அழகான காட்சிகளை நீங்கள் காணலாம். பலாங்கொடை பகுதியிலும் அழகிய இயற்கை காட்சிகளை நீங்கள் கண்டுகளிக்கலாம்.

 

No 488 பலாங்கொடை – ஹட்டன்  வீதி

அழகான பேருந்து வழிகளை பற்றி பேசுவதற்காகவே கொழும்பின் வெளிப்புற வீதிகளைப் பற்றி கதைக்கின்றோம். 488 இலக்கம் கொண்ட பஸ், பொகவந்தலாவையை கடந்து செல்கிறது. குறிப்பாக இங்கு வழி முழுவதும் தேயிலை செடிகளை காணலாம். தேயிலைத் தோட்டங்களைத் தவிர, தேயிலை ஏற்றிய லொறியும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

 

No 31 மாத்தறை – பண்டாரவளை வீதி

மாத்தறை – பெலி அத்த – தங்காலை – அம்பலாந்தோட்டை – அம்பாந்தோட்டை – லுனுகம்வெஹெர பகுதிகளை கடந்து, நெல் வயல்களையும், தெற்கே வெற்று நிலங்களையும் காணலாம். இந்த பயணத்தில் எல்ல – வெல்லவாய பாதையே மிகவும் அழகு நிறைந்ததாகும். இது ஒரு வித்தியாசமான அனுபவம். இந்த இடத்தில் மழைக்காலங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுகின்றது. ராவணெல்ல நீர்வீழ்ச்சியையும் இந்த வீதியில் செல்லும்போது காணலாம். அந்த அற்புதமான சூழல் கும்பல்வெல்ல சந்திக்கு வெளியே உள்ளது.

 

No 87 தங்காலை – யாழ்ப்பாணம் வீதி

இலங்கையின் மிக நீண்ட பஸ் பயணம் இதுவாகும். சுமார் 600 கி.மீ. நீளமான இந்த பஸ் பயணத்தில் இலங்கையின் பாதி பகுதியை பார்த்துவிடலாம். இது 14 மணி நேர நீண்ட பயணமாகும். மாத்தறை – காலி பக்கத்தில் இருந்து அந்த நகரங்களைக் கடந்து காலி வீதியின் மூலம் கொழும்புக்கு வரவேண்டும். அதன்பின்னர் கொழும்பு – நீர்கொழும்பு – புத்தளம் – அனுராதபுரம் – மதவாச்சி – வவுனியா – கிளிநொச்சி – அலிமங்கடவல என்று ஒருமாதிரியாக யாழ்ப்பாணத்தில் முடிகிறது. பயண பாதை மிகவும் தூரமாக இருந்தாலும் வழியில் காணப்படும் விடயங்கள் யாவும் மிகவும் ரம்மியமானவை.

 

No 15 அநுராதபுரம் – கொழும்பு வீதி

கொழும்பிலிருந்து வரக்காபொல- பொல்கஹவெல – குருநாகல் – இப்பாகமுவ – மெல்சிரிபுர – கலேவௌ – தம்புல்ல – மடாதுகம – கெக்கிராவ – மரடங்கடவல – திரப்பனே – கல்குலம வழியாக அநுராதபுரம் அடையும் இந்த பாதையில் செல்லும்போது பயண சோர்வு சிறிதும் ஏற்படாது. சாலையின் இருபுறமும் உள்ள மரங்களின் வரிசை, அநுராதபுரத்தை பற்றி நம் மனதில் எண்ணியிருந்த அந்த கடுமையான வறட்சி, சுட்டெரிக்கும் வெயில் என இவை ஒவ்வொன்றும் புத்துணர்ச்சியைத் தருகிறது.

 

No 22 கண்டி – மஹியங்கனை வீதி

இந்த சாலையின் மிக முக்கியமான அம்சம் பதினெட்டு வளைவு ஆகும். இதனை அதிகமானோர் தஹஅட வங்குவ என்றும் அழைப்பதுண்டு. கண்டியில் இருந்து இறங்கி உடுதும்பர நோக்கி இந்த வீதி உள்ளது. வீதி புதிதாக புதுப்பிக்கப்பட்டுள்ளதால் கையை அகட்டி வளைவுகளை வெட்டி திருப்ப முடியும். ஆனாலும் பல விபத்துக்கள் நடந்துள்ளன.