உண்மையான பெயரை மிஞ்சிய தயாரிப்பு பொருட்கள்

சந்தையில் எந்தவொரு பொருளையும் சந்தைப்படுத்த, அந்த தயாரிப்பை உருவாக்கும் நிறுவனத்திடமிருந்து ஒரு பெயரைத் தெரிவு செய்வார்கள். ஆங்கிலத்தில் Brand Name என்று கூறுவார்கள். நிறுவனத்தின் பெயர் மற்றும் அந்த பொருளிலுள்ள விசேட அம்சங்கள் போன்றவற்றை வைத்து ஒரு பெயரை தெரிவுசெய்கிறார்கள். ஆனால் அது அந்த தயாரிப்பின் உண்மையான பெயரல்ல. அதைபோல அந்த பொருளின் உண்மையான பெயரையும் தாண்டி பெயர் பெற்ற சில தயாரிப்புகளை இன்று பார்க்கவுள்ளோம்.

 

னடோல் எனப்படும் பரஸிடமோல்

பனடோல் என்ற பெயரை குழந்தைகள் முதல் பெரியோர்வரை நன்கு அறிந்துவைத்துள்ளார்கள். பனடோல் எனும் அந்த மாத்திரையின் உண்மையான பெயர் பரஸிடமோல் என்பது சிலருக்குத்தான் தெரியும். பெனடோல் என்பது SmithKline Beecham (GlaxoSmithKline) நிறுவனத்திடமிருந்து பரஸிடமோல் தயாரிக்கும் நிறுவனத்தின் BRAND NAME ஆகும். காய்ச்சல் வந்து அவதிப்படும் போதெல்லாம், எல்லோரும் பனடோலைத்தான் தேடுவார்கள். பனடோல் எவ்வளவு பிரபலமானது என்றால் இது 2018 Brand Finance’s Ranking இல் “Most Loved Brand” பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

 

சிக்னல் எனப்படும் டூத்பேஸ்ட்

நாம் பல் துலக்கும் சிக்னலும் தயாரிப்பு பெயர் மாத்திரமே. ஆனால் சந்தையில் சிக்னலுடன் மேலதிகமாக க்ளோகார்ட் மற்றும் க்ளோசப் போன்ற பல பற்பசை பிராண்டுகள் இருந்தாலும் பலரும் கடைக்குச்சென்று ஒரு டூத்பேஸ்ட் தாருங்கள் என கேட்கமாட்டார்கள். சிக்னல் ஒன்று தாருங்கள் என்றுதான் கேட்பார்கள். அந்தளவுக்கு சிக்னல் பிரசித்தியடைந்துள்ளது.

 

பாட்டா எனப்படும் செருப்பு நிறுவனம்

பாட்டா என்பது ரப்பர் செருப்புகளை உருவாக்கும் நிறுவனம். பாட்டா என்ற பெயரை நிறுவனத்தின் நிறுவுனரான “தோமஸ் பாட்டா“ என்பவர் வைத்தார். ஆனால் இன்றும் நாம் ரப்பர் செருப்புகளை வாங்கும்போது பாட்டா என்று கேட்கின்றோம். பாட்டா என்ற சொல்லையே பயன்படுத்துகின்றோம். செருப்பு வாங்க போகின்றோம் என்று சொல்வதில்லை தானே? அந்தளவுக்கு பாட்டா என்ற பெயர் பிரபலமாகிவிட்டது.

 

ரின்சோ எனப்படும் டிடர்ஜண்ட் பவுடர்

ரின்சோ போட்டு துணி துவைக்கதோர் நம்மில் இல்லை. ரின்சோ ஒரு துணி கழுவும் சலவை தூள் அதாவது DETERGENT POWDER. ஆனாலும் ரின்சோ என்ற வார்த்தையை பலரும் சலவைத்தூள் என்ற வார்த்தைக்கு பதிலாகவே பாவிப்பார்கள். ரின்சோ என்ற வார்த்தையை சொல்லாமல் டிடர்ஜண்ட் பவுடர் என்று சொன்னால்தான் ஆச்சரியம்.

 

பம்பர்ஸ் என்ற டயப்பர்

பம்பர்ஸ் என்றே நாங்கள் டயப்பர்களைக் குறிக்கின்றோம். இது சிறு குழந்தைகளுக்கு அவர்களின் சிறுநீர் மற்றும் மலத்தை உறிஞ்சும் உள்ளாடையாக இருக்கிறது. பம்பர்ஸ் என்பது அமெரிக்காவில் ப்ராக்டர் & கிராம்பிள் தயாரித்த டயபர் பிராண்ட் ஆகும். ஆனால் டயப்பர்களின் உண்மையான பெயரைத் தாண்டி, இந்த பெயர் பலரிடையே, குறிப்பாக இலங்கை தாய்மார்களிடையே பிரபலமாக உள்ளது.

 

கீல்ஸ் என்ற சொசேஜஸ்

கீல்ஸ் என்பது மிகப் பெரிய கூட்டு நிறுவனமாகும். அதுதான் JOHN KEELLS குழு. ஆனால் சொசேஜஸ் மூலமாகவே இந்த கம்பனி பெயர்பற்றியது. இது ஒரு தயாரிப்பு பெயர் மட்டுமே என்றாலும், கீல்ஸ் என்பது சோசேஜஸ் கீல்ஸ் என நன்கு அறியப்பட்ட பெயர். பலர் இன்னும் சொசேஜஸிற்கு பதிலாக கீல்ஸ் என்ற பெயரையே பயன்படுத்துகின்றனர்.