தேசிய கிரிக்கெட் அணிகளுக்காக விளையாடிய இலங்கை வீரர்கள்

 

நமது நாட்டு கிரிக்கெட் அணியில் விளையாடுவதையே பலர் கனவாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அப்படியிருக்கையில், இலங்கையில் பிறந்து, கல்வி கற்று, கிரிக்கெட் பயிற்சிகளை பெற்று பிற நாடுகளுக்காக அவர்களது அணியில் விளையாடிய இலங்கையர்களும் உள்ளனர். அவர்களை பற்றிய சிறுதொகுப்பை இன்று லைஃபீ தமிழ் உங்களுக்காக கொண்டுவருகின்றது.

 

மகாதேவன் சதாசிவம்

உலகப் புகழ்பெற்ற கேரி சோபர்ஸ் கருத்துப்படி, மகாதேவன் சதாசிவம், இலங்கைக்கு டெஸ்ட் போட்டி வருவதற்கு முன்பு துடுப்பாட்ட வீரராக செயற்பட்டவர்.. சிலோன் என அழைக்கப்பட்ட முன்னைய இலங்கை அணியின் தலைவராக இருந்த உலகத் தரம் வாய்ந்த வீரர் சதாசிவம். ஆனால் துரதிஷ்டவசமாக சதாசிவம் தனது மனைவியைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, சதாசிவம் நாட்டை விட்டு சிங்கப்பூர் சென்று அந்த நாட்டு தேசிய அணியை வழிநடத்தினார். தனது கடைசி நாட்களில் மலேசிய தேசிய அணிக்காகவும் விளையாடியுள்ளார். இதுவரை எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத ஒரு சாதனையாக மூன்று நாடுகளின் அணிகளுக்கு தலைவராக செயற்பட்டுள்ளார்.

 

ஃபிளேவியன் அப்போன்சோ

இலங்கை அணிக்கு 1996 இல் கிடைத்த உலகக் கோப்பை மறக்கமுடியாத வெற்றியாகும். இந்த போட்டியில் நெதர்லாந்து அணிக்காக விளையாடிய வீரர்களில் ஒருவரான அசங்க குருசிங்கவை சற்று நினைவூட்டுவோம். அதேபோல இன்னொரு வீரர்தான் ஃபிளேவியன் அப்போன்சோ. 1983 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்காவின் தடைசெய்யப்பட்ட சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டதால், ஃபிளேவியன் வாழ்நாளில் இலங்கையில் கிரிக்கெட் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அப்போதுதான் அவர் நெதர்லாந்துக்காக விளையாடினார். அவர் ஐந்து ஒருநாள் போட்டிகளில் நெதர்லாந்து அணிக்காக விளையாடியுள்ளார்.

 

மஞ்சுல குருகே

அம்பலாங்கொடயைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான மஞ்சுள குருகே, லயன்ஸ் கிளப்பிற்காக கிரிக்கெட் விளையாடினார். இடதுபுறத்தில் இருந்து நடுத்தர வேகப்பந்து வீசுவதே மஞ்சுலவின் சிறப்பு. பின்னர், அவர் அபுதாபிக்கு குடிபெயர்கிறார். அதன்பிறகு, குடிவரவு விதிகளின் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக மஞ்சுல கிரிக்கெட்டுக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. மஞ்சுல 2014 இல் 7 ஒருநாள் மற்றும் ஐந்து T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

 

ருவிந்து குணசேகர

2018 ல் இலங்கையில் நடைபெற்ற வரையறுக்கப்பட்ட இருபதுக்கு -20 போட்டியில் சிறந்த பேட்ஸ்மேனாக கனடா அணிக்காக விளையாடிய இலங்கை வீரர் ஒருவர் இருந்தார். அவர்தான் ருவிந்து குணசேகர. ருவிந்து 1991 இல் இலங்கையில் பிறந்து, 2006 இல் கனடாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு படிக்கும் போது கிரிக்கெட்டில் ஈடுபாடு அதிகமாகி, நாட்டின் மிகச்சிறந்த இளம் வீரர்களில் ஒருவராக வளம்வந்து, 2008 ஆம் ஆண்டில் தனது 16 வயதில் கனடாவை பிரதிநிதித்துவப்படுத்த முடிந்தது. அவர் 19 ஒருநாள் மற்றும் எட்டு இருபதுக்கு -20 போட்டிகளில் கனடாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

 

ரோய் சில்வா

ரோய் சில்வா கொழும்பு நாலந்தா கல்லூரி மாணவர்.  இலங்கையில் பல முதல் வகுப்பு அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். பின்னர், அவர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து அந்த நாட்டிற்காக கிரிக்கெட் விளையாட தகுதி பெற்றார். ரோய் 2019 ஆம் ஆண்டு அறிமுகமாகி அமெரிக்காவுக்காக விளையாடி 7 பந்துகளில் 25 ஓட்டங்களை எடுத்தார்.

 

ஜோஹன் சமரசேகர

1980 களில் கொழும்பு கிரிக்கெட் கிளப்பிற்காக முதல் வகுப்பு கிரிக்கெட்டில் விளையாடிய ஜோஹன் சமரசேகர, பின்னர் ஐக்கிய அரபு இராச்சியத்தை பிரதிநிதித்துவப்படுத்த UAE சென்றார். 1994 இல் சார்ஜாவில் நடைபெற்ற பெப்சி கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். அதில் ஒரு விக்கெட்டையும் எடுத்தார். இருப்பினும், பந்து அல்லது பேட் மூலம் சிறப்பாக செயற்பட முடியாமல் போனதால், பல போட்டிகளில் விளையாடிய பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை விட்டு வெளியேறினார்.

 

புத்திக மெண்டிஸ்

1999 இல் முதல் வகுப்பு கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய புத்திக மெண்டிஸ், ப்ளூம்ஃபீல்ட் அணிக்காக விளையாடுகிறார். புத்திக ஒரு துடுப்பாட்ட வீரர் மட்டுமல்ல.நல்லதொரு பந்து வீச்சாளரும்கூட. 2000 இன் முற்பகுதியில் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த புத்திக, அங்கிருந்த அந்நாட்டு அணியில் இணைந்து 2002 இல் மலேசியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார்.