வீதிக்கொரு டிவி என்ற காலம் மாறி வீட்டிற்கொரு டிவி என்றாகி இன்று வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் ஒரு டிவி என்ற நிலை வந்துவிட்டது. ஆரம்பத்தில் குடும்பமாக கூடியிருந்து டிவி பார்த்ததெல்லாம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் பெண்மணிகள் மாத்திரமே பெரும்பாலும் டிவி பார்க்கின்றனர். ஏனையோர் குறைத்துவிட்டனர் என்றுதான் கூறவேண்டும். அதற்கு காரணம் என்ன? இன்று அதுபற்றி பார்ப்போம்.
உள்ளடக்கம்
திரைப்படங்களுக்காக ஒரு சாரார், கதைகளுக்காக ஒரு சாரார், செய்திகளுக்காக மற்றொரு சாரார் என டிவி பார்ப்போரை பிரித்துப் பார்க்கலாம். சரி, திரைப்படங்கள், கதைகள் இரண்டுமே சகிக்க முடியாதவையாக இருந்தால் என்ன செய்வது? பொதுவாக திரைப்படங்களும் இந்திய தயாரிப்புகளாகவே இருக்கின்றன. எதுவாக இருந்தாலும் தரம் பிரித்து போடுவதையே மக்கள் விரும்புகின்றனர்.
குறைவான விளம்பரங்கள்
எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் பாதி விளம்பரத்தை போட்டு சாகடித்துவிடுவார்கள். 30 நிமிட நாடகத்தில் 10 நிமிடங்கள் விளம்பரங்கள். 2 மணித்தியால திரைப்படத்தில் அரை மணித்தியால விளம்பரங்கள். விளம்பரங்கள் இல்லாவிட்டால் எப்படி சம்பளம் கொடுப்பதென கேட்காதீர்கள். விளம்பரங்களை ஒளிபரப்புங்கள். சற்று குறைத்துக்கொள்ளுங்கள்.
விளையாட்டு
விளையாட்டு தொடர்பான விடயங்களை சற்று அதிகரித்துக்கொள்ளலாம். ஆண்கள் குறிப்பாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்போது டிவி பார்ப்பார்கள். குழந்தைகளுக்கும் விளையாட்டு பிடிக்கும். இப்போது பெண்கள்கூட விரும்ப ஆரம்பித்துவிட்டனர். காலத்தின் தேவை உணர்ந்து அதனை அதிகரிக்கலாமே!
நாட்டு நடப்பு