ஆண்கள் எவ்வாறான பெண்களை எதிர்பார்க்கின்றனர் தெரியுமா?

 

வாழ்க்கையில் எல்லோருக்கும் ஏதோவொரு எதிர்பார்ப்பு இருக்கும். பொதுவாக தமது காதலன் அல்லது காதலி தொடர்பான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே காணப்படும். தமது வாழ்க்கையில் துணையாக வரப்போகின்றவர் இவ்வாறுதான் இருக்கவேண்டும் என்ற மனக்கோட்டையை கட்டியிருப்பார்கள். குறிப்பாக எவ்வாறான பெண்களை ஆண்கள் எதிர்பார்க்கின்றனர் என்ற விடயங்களை இன்று பார்ப்போம்.

 

இயற்கை அழகு

தங்க நகைக்கடை போஸ்டர் போல நகை ஒன்றும் இல்லாமல், இயற்கையான அழகை கொண்ட பெண்ணாக இருக்க வேண்டுமென்றே ஆண்கள் எதிர்பார்க்கின்றனர். மேக்கப் என்றாலே என்ன என்றுகூட தெரியாத இயற்கை சுபாவம் கொண்ட பெண்ணை அதிகம் விரும்புவார்கள். ஆனால் சோகம் என்னவென்றால் தற்காலத்துப் பெண்கள் உண்ண இல்லாவிட்டாலும் தனது அலங்காரத்திற்கு அதிக நேரத்தை செலவிடுகின்றார்கள். அதையும் தாண்டி ஒரு பெண் கிடைத்தால் அந்த ஆண் கொடுத்துவைத்தவன்தான்.

 

குறைந்தளவு ஆண் நண்பர்கள்

தாம் விரும்பும் பெண் இன்னொரு ஆணுடன் கதைத்தால் கோபப்படும், எரிச்சலடையும் ஆண்கள் உள்ளனர். தற்காலத்தில் ஆண்களும் பெண்களும் சரிசமமாக பேசிப் பழகும், வேலைசெய்யும் காலம் வந்துவிட்டது. பெண்களை ஊக்குவிக்க ஆண்களும் பழகிவிட்டனர். அந்த ஆண் எவ்வளவுதான் முற்போக்கானவராக இருந்தாலும் தனக்கு துணைவியாக வரப்போகும் பெண் இன்னொரு ஆணுடன் நெருங்கிப்பழகுவதை விரும்பாதவர்களாகவே உள்ளனர்.

 

அம்மாவைப் போன்ற பெண்

ஒரு குழந்தையை தாயொருவர் பாசத்துடன், பரிவுடன் நடத்துவதைப் போல தன் காதலியும் தன்னை பார்த்துக்கொள்ள வேண்டுமென்பது பெரும்பாலான ஆண்களின் எதிர்பார்ப்பு. திருமணம் முடித்த காலத்தில் இவ்வாறான ஒரு உறவை பொதுவாக காணலாம். எனினும், காலப்போக்கில் இருவரிடமும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதைத் தவிர்த்து ஆரம்ப அன்பை கடைசிவரை கொண்டுசெல்ல வேண்டும் என்பதே எமது ஆலோசனை.

 

நீளமான கூந்தல்

பண்டைய காலத்தில் பெண்களின் கூந்தலை வைத்தே அவர்களை இனங்கண்டார்கள். இன்று யார் பெண் யார் என தெரியாத அளவிற்கு காலம் மாறிவிட்டது. அநேகமான பெண்கள் நாகரீகம் என்ற பெயரில் கூந்தலை வகைவகையாக வெட்டிக்கொள்கின்றனர். ஆனால் நீளமான கூந்தல் கொண்ட பெண்களையே ஆண்கள் விரும்புகின்றனர். அதுமட்டுமல்ல, அதிகளவான கூந்தல் பெண்களுக்கு என்றுமே அழகு.

 

தாயுடன் பாசம்

திருமணத்திற்கு முன்னர் ஆண்கள் தத்தமது தாயுடன் வாழ்கின்றனர். அதனால் தாய்ப்பாசம் அதிகமாகவே இருக்கும். அதேபோல தனக்கு வரும் மனைவியும் தன் தாயுடன் பாசமாகவே இருக்க வேண்டுமென ஆண்கள் விரும்புகின்றனர். தற்காலத்தில் இந்த நிலை தலைகீழாக மாறிவிட்டதையும் நாம் அவதானிக்கலாம். திருமணம் முடித்த பின்னர், தனது பெற்றோரை தனியாக விட்டுவிட்டு துணைவியுடன் தனிவாழ்க்கை நடத்தும் ஆண்களையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.