ஊரடங்குச் சட்ட நாட்களில் வீட்டில் இருப்பது சோர்வாக உள்ளதா? இவற்றை செய்யுங்கள்!

 

நாட்டில் தற்போது கொவிட் – 19 வைரஸ் பரவி வரும் நிலையில், அதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நாம் அனைவரும் முடிந்தவரை ஆரோக்கியமான சுகாதாரமான பழக்கங்களுடன் வீட்டுக்குள் தங்குவதே இதன் நோக்கம். ஆனால் உங்களில் பலருக்கு சுற்றி ஓடி, வெளியில் வேலை செய்வது வீட்டில் இருப்பதைவிட இலகுவாக இருக்கும். இந்த நிலைமையைத் தணிக்க மக்கள் வீட்டில் செய்யக்கூடிய சில விடயங்களை இங்கே தந்துளோம்.

 

திரைப்படங்கள்

 

திரைப்படங்களை பிடிக்காதவர்கள் இருக்க மாட்டீர்கள். ஆனால் ஒவ்வொருவருடைய இரசனையும் மாறுபடும். நீங்கள் நிறைய படங்களைப் பார்ப்பீர்கள் என்றால், ஹொலிவுட் மற்றும் பிற மொழி திரைப்படங்கள் போன்ற உன்னதமான படங்களை நீங்கள் பார்க்கலாம். நீங்கள் எப்போதாவது படம் பார்த்தால், உங்களுக்கு பிடித்த படப் பட்டியலைப் வைத்து, சில நல்ல படங்களை பார்க்கவும் முடியும். “லோர்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்”, “பேக் டு தி ஃபியூச்சர்”, “மேட் மேக்ஸ்”, “ஹரி பொட்டர்” போன்ற இரண்டு அல்லது மூன்று சிறந்த படங்கள் உள்ளன. பார்க்க நல்ல திரைப்படங்கள்தான் இவை. இதற்கு கூடுதலாக, கொமிக்ஸ் மற்றும் கொமிக்ஸின் பெரிய இரசிகர் அல்லாத எவராலும் செய்யக்கூடிய நிறைய விடயங்கள் உள்ளன. மார்வெல் திரைப்படங்களை பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நபர் அவர்களை நினைவில் வைத்திருக்க வேண்டிய காலம் இது.

 

டீவி சீரிஸ்

வேலை முடித்து வீட்டிற்கு வந்த பின் மாலையில்  டிவி தொடர்களைப் பார்த்திருப்பீர்கள். ஒரு பாகத்தைத்தானே பார்க்க முடியும்? இக்காலத்தில் மிகுதியை பாருங்கள். அதாவது NETFLIX YOUTUBE இல் பிரபல டிவி சீரிஸ்களை பார்க்க முடியும். எனவே நீங்கள் விரும்பும் டிவி தொடரை டவ்ன்லோட் செய்ய வேண்டும். இந்த நேரத்தில் அதிகமான டேட்டாவை செலவிட முடியாதுதானே? ஆகவே சிறந்த கதைகளை மாத்திரம் தெரிவுசெய்யுங்கள். பொழுதுபோகாவிட்டால் விஜய் டிவியில் ஒளிபரப்பான BIGGBOSS போன்றவை அல்லது கொஞ்சம் மன அழுத்தத்தை நீக்கும் நகைச்சுவைத் தொடர்களை பார்க்கலாம்.

 

பியூட்டி டிப்ஸ்

இந்த நாட்களில் கணவன்மார் வீட்டிலே இருப்பதால், சில பெண்களுக்கு பொழுதுபோவது பெரிதாக தெரியாது. ஆனால் சிலர் எப்பொழுது விடியும் என்று பார்த்த வண்ணம் இருப்பார்கள். மற்றைய வேலைகளில் நேரம் கடந்து செல்வது போல உணரவில்லை என்றால், வீட்டில் இருக்கும் ஆண் பெண் பேதமின்றி இருவரும் பியூட்டி பக்கத்தில் சற்று நேரம் செலவு செய்யலாம். அதாவது சத்தமில்லாமல் ஃபேஸ் பேக்குகளைக்கூட போட்டுகொண்டு வீட்டில் இருக்கலாம். ஏனென்றால் இந்த நேரத்தில் யாரும் வீட்டிற்கும் வரப்போவதில்லை. நீங்களும் யாருடைய வீட்டிற்கும் போகப்போவதில்லை.

 

எழுதுவதற்கு ஆரம்பிப்போம்

எழுதுவதில் விருப்பம் உள்ளவர் என்றால் உங்களுக்கான நாட்கள்தான் இது என்பது சொல்லத்தேவையில்லை. ஆனாலும் அதிகமானோர் அப்படி எழுதும் பழக்கத்தில் இருக்க மாட்டார்கள். இதற்கு எங்களுக்கு என்று பெரிய அளவு இலக்கிய அறிவும் தேவையில்லை. உங்கள் எண்ணங்களை பேஸ்புக் ஸ்டேட்டஸிலும் எழுத முடியும். இதை இன்னும் விஸ்திரப்படுத்த இன்னும் தீவிரமாக செல்ல வேண்டுமென்றால் இந்த நாட்கள் மிகவும் ஏற்ற காலம்தான். இந்த தனிமையான நேரத்தை நீங்கள் ஒரு சிறுகதை, புதிய கதை, அல்லது ஒரு குறும்பட ஸ்கிரிப்ட்கூட எழுதத் தொடங்கலாம். சிலருக்கு இது வராவிட்டாலும் ஒன்றும் பிரச்சினை இல்லை. தனது காதலியை அல்லது எதிர்பார்த்து இருக்கும் காதலியை நினைத்து இரண்டு கவிதைகளை  எழுதலாம்.

 

வீட்டில் சேர்ந்து சமைப்போம்

இந்த நாட்களில் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்றாக டிவி முன் அமர்ந்து இருப்பதை விட, சமையலறைக்குச் சென்று சேர்ந்து சமைப்பது போன்ற வேலைகளில் ஈடுபடலாம். அதுவும் எந்த நாளும் வீட்டில் பெண்கள்தான் வீட்டில் சமைப்பார்கள் என்றால், இன்று நீங்கள் சமையல் கட்டிற்குச் சென்று சமைத்துக் கொடுங்கள். அந்த சாப்பாடு ருசியாக இருக்காவிட்டாலும் அது ஒரு சந்தோஷத்தை தரக்கூடியது. அப்படி சமைக்க தெரியாவிட்டாலும் பரவாயில்லை, சேர்ந்து சமைக்கும் பொருட்டு வெங்காயம் நறுக்கி கொடுப்பது, பாத்திரங்களை கழுவி கொடுப்பது, அதனோடு சேர்த்து சேமிக்கவும் பழகிக்கொள்ள முடியும். ஆனாலும் இந்த சந்தர்ப்பத்தில் அவசர நிலையினால் வாங்கி வந்த பொருட்களை விரைவாக முடித்துவிடக்கூடாது.

 

கொஞ்சம் வாசிப்போமே

இன்றைக்கு அதிகமானோர் வீட்டிலேயே புத்தகசாலையை வைத்திருப்பார்கள். ஆனாலும் சிலர் பாடசாலை செல்லும் காலத்தில் லைப்ரரி பாடவேளையில் மட்டும்தான் புத்தகத்தை எடுத்து வாசித்திருப்பார்கள். அதன்பின்னர் இதுவரை புத்தகங்களை வாசித்திருக்கமாட்டார்கள். சிலர் இதனை பொழுதுபோக்காக வைத்திருந்து பின்னர் அவற்றை மறந்து போய் இருப்பார்கள். அப்படி இருப்போருக்கு இந்த காலம் மிகவும் பயனாகவும் இலகுவாகவும் இருக்கும்.

இப்போது மேலும் படிக்க, புத்தகங்கள் மட்டுமல்ல, இணையமும் இருக்கிறது. இதன் மூலம் நீங்கள் மிக முக்கியமான விடயங்களைப் படிக்கலாம். அப்படி இணையத்தில் ஏதாவது படிக்க ஆசைப்பட்டால் எமது லைபீ தமிழ் கட்டுரைத்தொகுப்புக்களும் இருக்கின்றது. அதனையும் படித்து பயன்பெற முடியும்.

 

கேமிங் டைம்

வேலை காரணமாக இப்பொழுதெல்லாம் வீடியோ கேம் விளையாட நேரம் இல்லாமல் போய் விட்டது. ஆனாலும் சிலர் வேலைக்கே போகாமல் விளையாடிக்கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு இதைப் பற்றி சொல்லத்தேவையில்லை. அது மட்டுமில்லாமல் வீட்டில் ஒரு play station வைத்திருப்பவர்களுக்கு இது போன்ற சந்தர்ப்பம் ஒரு வரப்பிரசாதமாகும். ஆனால் உங்களிடம் ஒரு நல்ல கேமிங் PC அல்லது லேப்டொப் இருந்தால், ஒரு நல்ல விளையாட்டை விளையாடுவதற்கு அது போதுமானது. நண்பர்களுடன் செல்போனில் விளையாடக்கூடிய மல்டிபிளேயர் கேம்களை விளையாடுவதற்கும் இது ஒரு சிறந்த நேரம்.