அவிசாவளையில் பார்த்து அனுபவிக்க வேண்டிய ஏழு இடங்கள்

 

இலங்கையில் அனைவரும் அறிந்த பல இடங்கள் உள்ளன. உதாரணமாக கண்டி, காலி, அநுராதபுரம், யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு ஆகிய இடங்களை குறிப்பிடலாம். ஆனால் இதனை விட அழகான, பலருக்கு தெரியாத பல இடங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் அவிசாவளை. அங்கு பார்த்து இரசிக்க பல விடயங்கள் உள்ளன. அதிக பணம் வீண்விரயமின்றி, சூழலுக்கும் பாதிப்பின்றி அழகாக சுற்றிப்பார்த்துவிட்டு வரலாம்.

 

சீதாவக்கை ஈரமண்டல பூங்கா

2014 இல் பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட இந்த பூங்கா 43 ஹெக்டேயர் பரப்பளவுடன் சிங்கராஜ வனப்பகுதியில் அரிதான மற்றும் ஆபத்தான உயிரினங்களை பாதுகாப்பதின் பொருட்டு உருவானதாகும். ஏற்றுமதிக்கான பூக்களை வளர்ப்பதும், ஈரமான தாழ்நில தாவரங்களின் பாதுகாப்பிற்கும் மற்றும் மூங்கில் வளர்ப்பையும் கொண்டுள்ளது.

இந்த பூங்கா காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். அழகான பூங்கா என்பதால் அதிகமானவர்கள் இங்கு புகைப்படங்களுக்காகவே வருவார்கள். இந்த பூங்காவின் வாசலில் சிறு கட்டணமும் அறவிடப்படும். மேலும் இங்கு உணவை எடுத்துப் போகவும் முடியும். அதேபோல இங்கு உணவு வாங்கவும் முடியும். நுழைவாயிலில் வாகனங்களை எடுத்துச் செல்ல அனுமதி அளிப்பதில்லை என்பதால் அதிகமானோர் மின்சார கோல்ஃப் வண்டியில் செல்கின்றனர். அது மட்டுமில்லாமல் இங்கு வரும் நபர்கள் படகுச் சவாரியை செய்யவும் மறப்பதில்லை.

புவக்பிட்டி புகையிரத நிலையத்தில் இருந்து வலதுபுறம் திரும்பி புவக்பிட்டி சென்று தும்மோதரா வீதிக்கு திரும்பி 3 கி.மீட்டர் தூரத்தில் இந்த பூங்காவை அடையலாம்.


 

குமாரி எல்ல நீர்வீழ்ச்சி

அவிசாவளை புவக்பிட்டியில் அமைந்துள்ள குமாரி எல்ல, மன்னர் சீதாவக ராஜசிங்கவின் மகள் இதில் விழுந்து உயிரிழந்ததால் மகளின் பெயரால் பெயரிடப்பட்டதாக புராணம் கூறுகிறது. சுமார் 4 மீ்ற்றர் உயரத்துடன் 4 வெவ்வேறு நீரோடைகளைக் கொண்ட இந்த நீர்வீழ்ச்சி, இறுதியில் களனி கங்கையுடன் சந்திக்கிறது. நீர்வீழ்ச்சியில் ஆழமான பள்ளம் இருப்பதால் இங்கு நீச்சல் மிகவும் ஆபத்தானது.

இந்த நீர்வீழ்ச்சியை அடைய, தும்மோடர-புவக்பிட்டி சாலையில் இருந்து ஹேமஹின்ன சாலையை அடைய 2 கி.மீ செல்ல வேண்டும். அங்கிருந்து திரும்பி ஒரு கிலோமீற்றர் செல்லவேண்டும். அங்கிருந்து 50 மீற்றர் தொலைவில் உள்ள ஒரு சிறிய பள்ளதோடு கீழே வந்தால் குமாரி எல்லவை காணலாம்.


 

எல்ல உட எல்ல (கஹன நீர்வீழ்ச்சி)

4 மீற்றர் உயரம் கொண்ட இந்த நீர்வீழ்ச்சி சீதாவக தாவரவியல் பூங்காவிற்கு மிக அருகில் உள்ளது. இந்த நீர் கொடிகந்த மலையில் இருந்து விழுகின்றதென  கூறப்படுகிறது. இது ஒரு அழகான இடம், ஆனால் துரதிஷ்டவசமாக இந்த இடம் ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை நச்சுகளால் மாசுபட்டுள்ளது. இதற்குச் செல்ல ஹங்வெல்ல வீதியில் வலதுபுறம் திரும்பி, தும்மோதர பழைய பாலத்தின் குறுக்கே திரும்பலாம். சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் இது காணப்படுகின்றது.


 

சீதாவக்கை ராஜா மாளிகை

சீதாவக்கையில் நீண்ட வரலாறு இருப்பதால் அவிசாவளை செல்லும் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று என நாங்கள் கருதுகிறோம். கோட்டையின் எஞ்சிய பகுதிதான் இன்று உள்ளது. நீங்கள் இப்பகுதிக்குச் செல்லும்போது தொல்பொருள் துறை மற்றும் பாதுகாக்கப்பட்ட கட்டிடங்களையும் பார்வையிடலாம். இதற்கு கொழும்பு – கடுவல – ஹன்வெல்ல வழியாக (53 கி.மீ) செல்லலாம்.


 

ரண்முது நீர்வீழ்ச்சி

ரன்முது நீர்வீழ்ச்சி என்பது தும்மோதரயில் சுமார் 15 மீற்றர் உயரத்தில் உள்ள களனி ஆற்றின் கிளை நதியில் இணையும் அழகான நீர்வீழ்ச்சியாகும்.  பெரும்பாலான மக்கள் வார இறுதியில் இங்கு செல்ல விரும்புவார்கள். தும்மோதரயில் உள்ள நீர்வீழ்ச்சி என்றாலும் சரியானதுதான். அங்கு செல்ல இரண்டு பாதைகள் உள்ளன.

பாதை 1 – கொழும்பு-அவிசாவளை வீதியில் உள்ள தம்பகோடா பாலத்தைக் கடந்து தம்பரவை அடையுங்கள்.

பாதை 2 – கொழும்பிலிருந்து ஹன்வெல்ல நோக்கி 48 கி.மீ சென்றாலும் அந்த இடத்திற்குச் செல்ல முடியும்.


 

கலதுவாவ காடு

கொழும்பு மாவட்டத்தின் பாதுக்கவில் அமைந்துள்ள உடகம மலை இந்த மாவட்டத்தின் மிக உயரமான மலை மற்றும் 1492 அடி உயரத்தில் உள்ளது. இந்த மலையின் அருகே அமைந்துள்ள லபுகம கலதுவாவ நீர்த்தேக்கம் கொழும்பு பகுதியில் உள்ள ஒரே நீர் ஆதாரம் என்பதையும் நாம் அறிய வேண்டும். இதன் விளைவாக, உதகம மலை மற்றும் கலடுவாவ ஒரு நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் ஈரமான மண்டலம் கொண்ட பசுமையான மழைக்காடாகும். இந்த காடு 2,150 ஹெக்டேயர் பரப்பளவில் உள்ளது. இது கொழும்பு மாவட்டத்தின் மிகப்பெரிய வனப்பகுதியாகும்.

இந்த வனப்பகுதிக்குச் சொந்தமான பறவைகளின் மிகப்பெரிய தொகுப்பு உள்ளது. க்ரீன் பில்ட் கூகல், சாம்பல் ஹார்ன்பில், சிலோன் ஸ்பர் கோழி, சிலோன் ட்ரோகன் மற்றும் அரியவகை இந்திய ஸ்கிமிட்டர் பேப்லர், இந்திய மூன்று வால் கிங்பிஷர், பிரவுன்-கயூட் பிக்மி மரங்கொத்தி மற்றும் டிக்கலஸ் ப்ளூ ப்லெய் கேட்சர் போன்ற பறவையினங்களும் இங்கு காணப்படுகின்றன. அதனால் இது பறவையின் சொர்க்காபுரியாகும்.

கொழும்பு – மஹரகம – களுஅக்கல அங்கிருந்து இடதுபுறம் சென்றால் ஏராளமான வீதிகளின் மூலம் வனப்பகுதிக்குள் செல்ல முடியும்.


 

கொரகா நீர்வீழ்ச்சி

பல பாறைகளில் இருந்து கீழே விழும் கொரகா நீர்வீழ்ச்சி, தல்துவா – மீவிடிகம்மன வீதியில் உள்ள பிரதான சாலையிலிருந்து சுமார் 600 மீ தொலைவில் உள்ளது. உங்கள் வாகனத்தை சாலையில் நிறுத்திவிட்டுத்தான் நீர்வீழ்ச்சிக்கு செல்ல வேண்டும். செல்லும் வழியோ ஒரு அழகான நெல் வயல்களை ரசித்து செல்லக்கூடிய ஒற்றையடிப்பாதை. கொரகா நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில், பாறையில் உள்ள இயற்கை குளத்தை பார்க்கவும் அதில் குளிக்கவும் மறக்க வேண்டாம்.

கொழும்பு / கம்பஹா  ஊடாக கிரிந்திவல, வெக்கே  மற்றும் அமிதிரிகல ஊடாக செல்லவேண்டும்.