நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், ஒரு பெண்ணிடம் உள்ளம் பறிபோவது சகஜமானது. ஒரு பெண்ணை பார்த்தவுடன் ”எனது உலகமே இவள் தான்” என்று நினைக்க வைத்த சந்தர்ப்பம் ஒரு ஆணின் வாழ்நாளில் ஒரு தடவையேனும் நடந்திருக்கலாம். அதேபோல அந்த காதலை அந்த பெண்ணிடம் சொல்லும்போதும் அவளிடம் இருந்து எந்தவொரு எதிர்வினையும் இல்லாமல் இருக்கும் சந்தர்ப்பமும் இருக்கக்கூடும். சிலவேளைகளில் முடியாது என்றும் கூறுவதுண்டு. இதற்கு காரணம் என்னவென்றால் காதலை சொல்ல ஆண்கள் முயல்வதைக்கூட பெண்கள் ஒரு கலையாக பார்ப்பதனால் ஆகும். இதனால் அந்த இடத்தில் நடக்கும் சில தவறுகளினால் பெண்களின் மனம் ஆண்களுக்கு வளைந்து கொடுப்பதும் இல்லை. அவ்வாறான சில தவறுகளை திருத்திக்கொண்டால் ஆண்களின் மனதிற்கும் உடலுக்கும் நல்லது.
நீங்கள் அவர்களுக்கு இன்னும் ஸ்பெஷல் இல்லை
ஒரு பெண்ணின் மனதில் இடம்பிடிக்க முன் அதாவது அவர்களுக்கு நீங்கள் ஸ்பெஷல் என்று தெரியவைக்க முன், நீங்கள் அவரிடம் அதிகமாக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆனால் அந்த பெண்ணுக்கு நீங்களும் மற்றைய ஆண்களைப் போலவேதான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதனால் பொறுமையாக இந்த தொடர்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் அவர்களுக்கு ஸ்பெஷல் என்பது அவர்களுக்கு தெரியவரும் வரை பொறுமையாக இருங்கள்.
மிகவும் நல்லவரென நடிக்காதீர்கள்
தான் ஒரு சிறந்த ஆண் என பெண்களிடம் காட்டிக்கொள்ள ஆண்கள் முயற்சிப்பது வழக்கம். அதுவே பெண்களுக்கு பிடிக்குமென நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறான எண்ணம். நீங்கள் எப்படிப்பட்டவராகவும் இருக்கலாம். உங்கள் உண்மையாக பண்புகளை தயவுசெய்து வெளிப்படுத்துங்கள். உண்மையை வெளிப்படுத்தும் ஆண்களையே பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
காதலியின் காதலை விமர்சிக்க செல்லவேண்டாம்
பெண்களின் மனதில் இடம்பிடிப்பதற்கு ஆண்கள் செய்யும் முட்டாள்தனமான விடயம் இதுவாகும். ஆண் ஆசை வைத்தாலும் பெண்ணுக்கு அது பிடிக்க வேண்டும். காரணம் அந்தப் பெண்ணிடம் நிறைய ஆண்கள் தனது விருப்பத்தை தெரிவித்திருக்கலாம். இது தெரிந்தால் அந்த பையனும் மனமுடைந்து போய்விடுவார். அதனால் பையன் பெண்ணிடம் நேரடியாக போய் “நீ என்னை விரும்புகிறாய்! ஆனால் அதை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறாய்” என்று கூறிவிடுவான். இது நூற்றிற்கு 10 சதவீதமே வாய்ப்பளிக்கும். ஆனால் பெரும்பாலும் அதற்கு எதிர்மறையாகத்தான் நடக்கும். அதனால் பெண்களிடம் எப்பொழுதும் அவர்களின் காதலை விளக்கப்படுத்தச் செல்ல வேண்டாம். சிலவேளை இதனால்கூட உங்கள் காதல் கைகூடாமல் போகலாம். கூடும்.
என்னிடம் என்ன குறை உள்ளது?
ஒரு பையன் ஒரு பெண் மீது ஆசை வைப்பது ஒன்றும் தவறான விடயம் அல்ல. அந்த பெண் இவன் மீது ஆசை வைக்காவிட்டாலும் அதுவும் தவறான விடயம் இல்லை. அது ஒவ்வொருவருக்கும் இடையிலான தனிப்பட்ட விடயம். இதனை தவறாக புரிந்து கொள்ளும் சில ஆண்கள் நேராக அந்த பெண்ணிடம் போய் என்னிடம் என்ன குறை இருக்கின்றது என்று கேட்பார்கள். இது ஒரு முட்டாள்தனமான காரணம்தான். பெண்கள் உண்மையில் ஒரு ஆணிடம் பெரும்பாலும் வசதிகளைவிட அன்பையே எதிர்பார்க்கின்றார்கள்.
அனுமதி கேட்கவேண்டிய அவசியமில்லை
இருவரும் காதலிக்கும்போதோ அல்லது காதலிக்க ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களிடம் ஆலோசனை கேட்டு அல்லது அனுமதி கேட்டு எதனையும் செய்யாதீர்கள். சில சந்தர்ப்பங்களில் அது பயன்பட்டாலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அது உங்களை கவிழ்த்துவிடக்கூடியது. உதாரணமாக நீங்களும் உங்கள் காதலியும் ஒரே இடத்தில் பணியாற்ற அல்லது படிக்கச் சென்றால் அவர்களுடன் இன்று இரவு போனில் கதைக்க ஆசைப்பட்டால் அவர்களிடம் பகலே அனுமதி வாங்கிவிட்டு இரவு கதைக்க வேண்டிய அவசியம் இல்லை. இது சில நேரங்களில் மாத்திரமே கைகொடுக்கும். அதற்கு பதிலாக நீங்கள் ஒரேடியாக இரவிலே அழைப்பை ஏற்படுத்தி பேசுங்கள். அவர்களுக்கு முடியுமென்றால் பேசுவார்கள். இல்லாவிட்டால் பொறுமையாக இருங்கள்.
பரிசுகளை கொடுத்து மனதை வெல்ல நினைக்க வேண்டாம்
உண்மையை சொல்லப் போனால் பெண்களுக்கு பரிசுகள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் அடிக்கடி பெண்களுக்கு பரிசுகளை கொடுத்து பெண்களை கவர முடியாது என்பதே உண்மை. பரிசுகளை வாங்கிக்கொண்டு பின்னர் உங்களை பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? ஆகவே நிதானமாக நடந்துகொள்ளுங்கள்.