பேக்கிங் சோடாவின் ஏழு பயன்கள்

 

பேக்கிங் சோடாவானது மா கலந்து பேக் செய்யும் உணவுகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது. பேக்கிங் சோடா இல்லாவிட்டால் அனைத்து கேக் வகைகள் மற்றும் குக்கீகள் தட்டையான செங்கற்களாக இருக்கும். எந்தவொரு செய்முறையிலும் உங்களுக்கு அதிகம் பேக்கிங் சோடா தேவையில்லை. பேக் செய்யாமலே பல விடயங்களை பேக்கிங் சோடா மூலம் செய்யலாம். ஆனால் அதைவிட ஆச்சரியமானதே பேக்கிங் சோடா. ஆம், தலைமுடி, தோல் உள்ளிட்ட பல விடயங்களுக்கு இந்த பேக்கிங் சோடா உதவுகின்றது. இன்று அது தொடர்பாக பார்ப்போம்.

 

நெஞ்செரிச்சல் மருந்து

நெஞ்செரிச்சல் என்பது உங்கள் மார்பு வெடிக்கப் போகிறது என்று நீங்கள் உணரும் அளவுக்கு பாதிப்பில்லாத நிலைமைகளில் ஒன்றாகும். அசிட் ரிஃப்ளக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. அமிலம் உங்கள் வயிற்றில் இருந்து வெளியேறி தொண்டையில் நுழையும் போது நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. நாட்பட்ட நெஞ்செரிச்சல் உணவுக்குழாய்க்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும். தொடர்ந்தும் காரமான உணவை அதிகமாக உட்கொண்டால் உங்களுக்கு இந்த வலி மேலும் அதிகரிக்கும். பேக்கிங் சோடா இந்த நிலைமையை சீர்படுத்தி வயிற்று அமிலத்தை சமநிலைப்படுத்தி விரைவாக நெஞ்செரிச்சலை கட்டுப்படுத்துகிறது. இதை ஒரு டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கரைத்து கலவையை மெதுவாக குடிக்கவும்.

 

புத்துணர்ச்சி மற்றும் வெண்மையான பற்கள்

பேக்கிங் சோடா வாய் பராமரிப்புக்கும் ஒரு சிறந்த கருவியாகும். பேக்கிங் சோடாவைக் கொண்ட பற்பசை, அது இல்லாத பற்பசையை விட வெள்ளை நிற பற்களாக மாற்ற சிறந்தது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால் இதனை செய்து பார்க்க நீங்கள் பற்பசையை வாங்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் பேக்கிங் சோடா மற்றும் தண்ணீருடன் ஒரு சிறிய அளவு பேஸ்டினை தயாரிக்கலாம். பின்னர் துலக்குவதற்கு முன்பு உங்கள் டூத்ப்ரஷை அதில் தொட்டு எடுத்து துலக்கலாம். பேக்கிங் சோடாவில் வலுவான பக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் கொண்டது. இது ஒரு சிறந்த மவுத்வொஷ் ஆகும். அரை கிளாஸ் தண்ணீரில் ½ டீஸ்பூன் பேக்கிங் சோடா போதும். அதை உங்கள் வாயில் ஊற்றிக் கொண்டு, வேறு எந்த மவுத்வோஷையும் போலவே அதை வெளியே துப்பவும். துலக்குகையில் தவறவிடக்கூடிய பற்களுக்கு இடையில் மற்றும் சுற்றியுள்ள பிளவுகளை அடைய இந்த மௌத்வோஷ் சிறந்தது.

 

வாய்ப்புண்ணிற்கு மருந்து

வாய்ப்புண்கள் சிரியதானதாக இருந்தாலும் நிறைய வலிகளை ஏற்படுத்துகின்றன. அவை வெறுமனே சிறிய வட்ட புண்கள் ஆகும். அவை கார உணவை அதிகமாக உட்கொண்ட காலத்திற்குப் பிறகு அடிக்கடி நிகழ்கின்றன. வாய்புண்கள் பொதுவாக தாமாகவே குணமாகின்றன. ஆனால் அது நடைபெறும்வரை மிகவும் வலியாகவே இருக்கும். நீங்கள் ஒரு வாய்ப்புண்ணால் வலியை உணர்ந்தால் மேலே கூறியது போல ஒரு மௌத்வோஷினை செய்து வோஷ் செய்தால் போதும்.

 

டியோடரண்டாக பயன்படுத்தவும்

பேக்கிங் சோடாவினால் செய்யக்கூடிய இன்னொரு பொருள்தான் இந்த டியோட்ரண்ட். ஏனென்றால் இதில் நாற்றத்தை உறிஞ்சக்கூடிய ஒரு பண்பும் உள்ளது. மனித வியர்வை உண்மையில் நாற்றமுடையது அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? நமது சருமத்தில் உள்ள பாக்டீரியாக்கள் அதை அமிலக் கழிவுப் பொருட்களாக மாற்றத் தொடங்கும் போதுதான் துர்நாற்றம் வரத் தொடங்குகிறது. பேக்கிங் சோடா இந்த செயன்முறையை முழுவதுமாக நிறுத்தாது. ஆனால் உங்கள் அக்குளில் சிறிதளவில் இதனை தடவினால் துர்நாற்றம் வருவது சற்று குறையும்.

 

உடற்பயிற்சிகளின் போது சோர்வைக் குறைக்க

பேக்கிங் சோடா உண்மையில் விளையாட்டு வீரர்களிடையே மிகவும் பிரபலமானது. சில ஆய்வுகள் பேக்கிங் சோடா நீண்ட காலத்திற்கு, குறிப்பாக அதிக தீவிரம் கொண்ட பயிற்சியின் போது உங்கள் முழுத்திறனையும் வெளிக்காட்ட உதவுகிறது என்பதைக் காட்டுகிறது. கடின உடற்பயிற்சியின் போது, ​​உங்கள் தசை செல்கள் லொக்டிக் அமிலம் எனப்படும் ஒன்றை உருவாக்குகின்றன. லொக்டிக் அமிலம் நீங்கள் கடினமாக உடற்பயிற்சி செய்யும் போது தசைகளில் சோர்வு ஏற்படுகிறது. இந்த தன்மையை பேக்கிங் சோடாவில் அதிக pH உள்ளது என்பதால் லொக்டிக் அமிலத்திற்கு ஓரளவு ஈடுசெய்ய முடியும். பேக்கிங் சோடாவை உட்கொண்டவர்கள், உட்கொள்ளாதவர்களை விட 4.5 நிமிடங்கள் நீண்ட நேரம் உற்சாகமாக இருக்கமுடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

 

அரிப்பு தோல் மற்றும் வியர்க்குரு ஆகியவற்றை நீக்கும்

பேக்கிங் சோடா அனைத்து வகையான தோல் வியாதிகளுக்கும் ஒரு நல்ல சிகிச்சையாகும். பூச்சி கடிப்பு, அரிப்பு மற்றும் எரிச்சலை அகற்றுவதில் மிகவும் பயனுள்ளது. இதற்காக, பேக்கிங் சோடா மற்றும் தண்ணீரில் ஒரு கெட்டியான பேஸ்டை உருவாக்கி எரிச்சலான பகுதிகளுக்கு தடவவும். உங்கள் தோல் வெயிலின் விளைவாக அரிப்புக்குள்ளாகி இருந்தால், பேக்கிங் சோடா கலந்த நீரில் குளியுங்கள்.

 

கடினமான தோலினை மென்மையாக்கலாம்

தோளில் தொடர்ந்து ஒரு இடத்தில் உரசல் இடம்பெறும் போது  அந்த இடத்தில் தடிமனான கடின திட்டுகள் போன்று உருவாகின்றன. உதாரணமாக தையல்காரர்கள்  தொடர்ந்து கத்தரிக்கோலை பிடித்து இருப்பதால் அவர்களின் கட்டைவிரலிற்கு பின்புறத்தில் இது காணப்படும். பெரும்பாலும் நம் அனைவருக்கும் இந்த கனமான தோல் நமது பாதங்களில் இருக்கின்றது. ஏனென்றால் அந்த பகுதியில்தான் அதிகமான எடை தாங்கப்படுகிறது. இது ஆபத்தானதாக இல்லாவிட்டாலும் சிலருக்கு இதனால் சற்று அசௌகரிய நிலை ஏற்பட வாய்ப்புண்டு. பொதுவாக பெண்கள் பேக்கிங் சோடாவை நீரில் கலந்து அதில் கால் பாதங்களை வைத்திருந்தால் மிகவும் மென்மையான தோலினை பெறலாம்.