பேய் ரயில் நிலையங்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

 

ரயில் நிலையங்கள் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மனிதர்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு ஏற்றிச்செல்லக்கூடிய ஒரு போக்குவரத்து முறை. நம் நாட்டில்கூட பெரும்பாலானோர் ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த உலகில் சில நாடுகளில் ரயில் சேவைகள்கூட இல்லை. ஏனென்றால் இடப்பற்றாக்குறை மற்றும் அதற்கான வசதியில்லை. சில நாடுகளில் மயான விடுதிகளுக்கு மத்தியிலும் ரயில் பாதைகளை அமைத்துள்ளார்கள். அவ்வாறான பயங்கரமான 7 ரயில் பாதைகள் பற்றி இன்று பேசவுள்ளோம்.

 

பெகுன்கோடர் ரயில் நிலையம்இந்தியா

மேற்கு வங்காள மாநில தலைநகரான கொல்கத்தாவிலிருந்து 161 மைல் தொலைவில் உள்ள ஒரு சிறிய கிராமம் பெகுன்கோடர். ரயில்வே தொழிலாளியொருவர் அந்த ஊர் ரயில் நிலையத்தில் ஒரு பேயைக் கண்டதோடு, சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். இந்த ரயில் நிலையம் சுமார் 42 ஆண்டுகளாக கைவிடப்பட்டதால் உள்ளூர்வாசிகள் அந்த இடத்திலிருந்து எங்கும் பயணிக்க சிரமப்பட்டனர். அந்த ரயில் நிலையத்திலுள்ள வெள்ளை புடைவை அணிந்த பேயானது அந்த ரயில் நிலையத்தில் இறந்த ஒரு பெண்ணின் ஆவி என்று கருதப்பட்டது. பிளாட்போர்மில் நடனமாடுவது அல்லது தடங்களில் அலைந்து திரிவது போன்ற அந்த பேயின் செயல்களால் சக ஊழியர்கள் பயந்துவிட்டனர். இதனால் அந்த ரயில் நிலையம் கைவிடப்பட்டது. இருப்பினும், 2009 ஆம் ஆண்டில் பெகுன்கோடர் ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது.

 

கோபாவோ சாலை சுரங்கப்பாதை நிலையம்சீனா

ஷாங்காய் சுரங்கப்பாதை அமைப்பின் லைன் 1 இல் உள்ள கியாபாவ் வீதியின் அண்டர்கிரவுண்ட் ஸ்டேஷன் மிகவும் பயங்கரமான பெயரைக் கொண்டுள்ளது. இங்கு மர்மமான முறையில் ஒன்பது மரணங்கள் நடந்ததும், ரயில்கள் விபரிக்க முடியாதபடி உடைந்து போவதும், விசித்திர உருவங்கள் காணப்பட்டதும்,  அப்பாவி பயணிகள் மர்மமான கையால் பிளாட்போர்மில் இருந்து இழுக்கப்படுவதுமாக இருந்தன. சிவப்பு நிற ஆடையில் இருந்த ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டு சில நாட்களுக்கு பின் ஒரு பிளாட்போர்ம் இருக்கையில் அமர்ந்துள்ளார். ரயில் தடங்களின் இருளில் ஒரு பெண்ணின் குரல் ஆக்ரோஷமாக சிரிப்பது போலவும் கேட்டுள்ளது. மேலும் இங்கு நடந்த ஒரு மரணத்தை கண்ட சிலர், பிளாட்போர்மில் இருந்த மனிதரை திடீரென்று ஒருவர் தள்ளிவிடப்பட்டது போல தண்டவாளத்தில் விழுந்ததாக கூறியுள்ளனர். இந்த ரயில் நிலையம் பெரும்பாலும் பேய் நிலையம் என்றுதான் அழைக்கப்படுகிறது. ஏனென்றால் ரயில் நிலையத்தில் பக்கத்தில் மயானம் ஒன்றும் உள்ளது.

 

அடிஸ்கோம்பே ரயில் நிலையம்இங்கிலாந்து

இங்கிலாந்தின் லண்டன், க்ரோய்டன் மாவட்டத்தில் இருந்த அடிஸ்கோம்பே ரயில் நிலையத்தை சுற்றியுள்ள பகுதி, 2001 ஆம் ஆண்டில் இடிக்கப்படுவதற்கு முன்பு பேய்களால் பீடிக்கப்பட்டிருந்தது. 1900 களின் முற்பகுதியில் ரயில் ஓட்டுநர் ஒருவர் கொல்லப்பட்டார். அவரை அந்த ரயில் பாதைகளின் சாம்பல் நிற மங்கலான உருவத்தில் அதிகமானோர் கண்டுள்ளனர். குறிப்பாக தண்ணீர் கொதிகலன் வெடித்து பல உயிர்களை காவுவாங்கிய இடத்திற்கருகில் உள்ளாராம். இரவு நேரங்களில் ரயில்கள் தானாக முன் நகர்வதை பலர் கண்டுள்ளனர்.

 

கோனோலி நிலையம்அயர்லாந்து

டப்ளினின் பிரதான ரயில் நிலையமும் அயர்லாந்தின் மிகப்பெரிய ரயில் நிலையமுமான கொன்னோலி நிலையம், இரண்டாம் உலகப் போரின்போது அருகிலுள்ள நோர்த் ஸ்ட்ராண்ட் சாலையில், 1941 இல் நடந்த தாக்குதலில் வெடிகுண்டு சேதத்தை சந்தித்தது. அப்போதிருந்து இந்த கட்டிடங்களில் இறந்த இராணுவ வீரர்களின் ஆவிகள் நடமாடுவதாக கூறப்படுகின்றது. பாதுகாப்பு கடமையில் இருந்த ஒருவர் கேமராவில் இராணுவ உருவத்தில் இரண்டு மர்ம ஆவிகளை கண்டுள்ளார். அதனை உறுதிப்படுத்த வெளியில் சென்றபோது அவர்களை காணவில்லை. இவ்வாறான பல சம்பவங்கள் இந்த ரயில் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

 

வோட்டர்ஃபிரண்ட் நிலையம் – கனடா

காஸ்டவுனில் உள்ள வாட்டர்ஃபிரண்ட் நிலையம், 1915 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ரயில் நிலையமாகும். மேலும் இது நகரத்தின் மிகவும் பயங்கரமான பேய் கட்டிடங்களில் ஒன்றாகும். பாதுகாப்பு காவலர் ஒருவர் ஒருவர் இரவில் வலம்வருகையில், 1920 களின் அழகான உடையணிந்து அக்கால இசைக்கு நடனமாடியுள்ளார். அவர் அந்தப் பெண்ணை அணுகும்போது அவள் மறைந்துவிட்டாள். இசையும் அதோடு நின்றுள்ளது. மற்றொரு காவலர் ஒரு வயதான பெண்ணின் பிரகாசிக்கும் வெள்ளை பேயை நேருக்கு நேர் சந்தித்துள்ளார். பயத்தில், காவலர் அறையிலிருந்தே ஓடியுள்ளார்.

 

க்ளென் ஈடன் ரயில் நிலையம் – நியூசிலாந்து

க்ளென் ஈடன் ரயில் நிலையம் நியூசிலாந்தின் மேற்கு ஒக்லாந்தில் அமைந்துள்ளது. இது ஒரு கல்லறைக்கு இணைப்பு உள்ள மற்றொரு நிலையம். வைகுமேட் கல்லறைக்கு சேவை செய்வதற்காக கட்டப்பட்ட இந்த ரயில் நிலையத்தின் ஊடாக, இறந்தவர்களையும் அவர்களுடன் பயணித்தவர்களையும் ஒரு ஞாயிற்றுக்கிழமை அருகிலுள்ள மயானத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். 2001 ஆம் ஆண்டில் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக ரயில் நிலைய கட்டிடத்தில் ஒரு புதிய கபே திறக்கப்பட்டது. அங்குள்ள தொழிலாளர்கள் பேய் உருவத்தை பல தடவைகள் கண்டுள்ளனர். அலெக் மக்ஃபார்லேன் என்ற ரயில்வே தொழிலாளி ஒருவர், ஜனவரி 11, 1924 அன்று பிற்பகல் 3 மணியளவில் அவ்வழியால் கடந்து சென்ற ரயிலில் காணப்பட்ட மெயில் பேக் கொக்கி கொக்கி கண்களை தாக்கியதில் உயிரிழந்தார். அவர்தான் அங்கு நடமாடுவதாக நம்புகின்றனர். அவரை ஒத்த உருவங்கள் மற்றும் பயங்கரமான முகங்களை அவ்வப்போது கண்டுள்ளனர்.

 

பிஷன் மார்ட் நிலையம் – சிங்கப்பூர்

ஏராளமான சிங்கப்பூர் MRT (MASS RAPID TRANSPORT) நிலையங்கள் பேய்களின் கதைகளை தாங்கி வருகின்றன என்று கூறப்படுகின்றது. ஆனால் மத்திய சிங்கப்பூரில் உள்ள பிஷன் MRT அதில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். முன்னாள் பி ஷான் டெங் கல்லறையின் தளத்தில் கட்டப்பட்ட பின்னர், 1987 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டவுடன் பேய்களின் கதைகள் பரவத் தொடங்கின. அங்கிருந்து வெகு தொலைவில் இல்லாத மற்றொரு நிலையமான நோவெனாவும் சுடுகாட்டின் மீதுதான் கட்டப்பட்டது. 1990 களின் முற்பகுதியில் ஒரு நாள் ரயிலில் இருந்து வெளியேறும் பெண்ணொருவர் மயக்கமுற்றபோது ஒரு பயமுறுத்தும் சம்பவம் நிகழ்ந்தது. மேலும் ரயிலில் இருந்து வெளியேறும்போது கண்ணுக்குத் தெரியாத கைகளால் அவர் இழுக்கப்பட்டதாக அறிவித்தார். பராமரிப்புத் தொழிலாளர்கள் சவப்பெட்டியைத் தாங்குபவர்கள் ரயில் பாதையில் நடப்பதைக் கண்டிருக்கிறார்கள். தலையில்லாத உருவங்கள் நடப்பதையும் பயணிகள் கண்டுள்ளனர். இதற்கும் மேலதிகமாக நகரும் ரயில் வண்டியின் கூரையில் யாரோ நடப்பது போல சத்தத்தை பயணிகள் அனைவரும் கேட்டுள்ளனர்.