இப்போதெல்லாம் பொதுவாக அனைவரும் (குறிப்பாக பெண்கள்) மேக்கப் இல்லாமல் வெளியே இறங்க மாட்டார்கள். இறந்தவர்களின் வீட்டிற்கு செல்லவும் மேக்கப் தேவைப்படுகின்றது. பொதுவாக பெண்கள் என்றாலே அழகுதான். அதற்கு மேலும் அழகூட்டவே இவ்வாறு செய்கின்றனர். பெண்கள் மட்டுமா மேக்கப் போடுகிறார்கள்? இப்போது ஆண்களும் சில அழகுசாதன முறைகளை பின்பற்றுகிறார்கள். சரி, இன்று நாங்கள் கொண்டுவந்துள்ள அழகுக்குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும். செய்துபார்த்து கூறுங்கள்.
சருமத்திற்கு மொய்ஸ்டரைசர் பாவனை
மனிதனின் தோல்பகுதி வெளியில் இருப்பதால் சூரிய ஒளியும் தூசியும் உடலில் படுவதற்கான வாய்ப்பு அதிகமுண்டு. இதனால் தோல் விரைவில் வறண்டு போகிறது. இந்த நாட்களில் அது மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமாகவே இருக்கின்றது. எனவே தோல் வல்லுநர்கள்கூட சருமம் எதுவாக இருந்தாலும் மொய்ஸ்டரைசரை உபயோகிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். உங்களுக்கு அது பிடிக்கவில்லை என்றால், கொஞ்சம் லைட் லோஷன் சரி தடவிக்கொள்ள வேண்டும். இந்த காலகட்டத்தில் கொரோனா காரணமாக மக்கள் வெளியே செல்ல தடையாக ஊரடங்கும் சட்டம் போட்டு வீட்டில் இருப்பதால் அதிகமானோர் வீட்டிலிருந்த படியே சருமத்தை பாதுகாப்பார்கள்.
புருவத்தில் கவனம்
சரியான நேரத்தில் புருவங்களை கத்தரித்து பராமரிப்பதை ஒரு பழக்கமாக்குங்கள். இது நாம் நினைப்பதை விட அதிக அழகை கொடுக்கும். தொடர்ந்து வளர விடும்போதும் கருமையான நிறத்தில் அழகாக தடிமனான தோற்றத்தில் லட்சணமாகத்தான் இருக்கும். ஆனால் அதனை மாதத்திற்கு ஒருமுறையாவது அழகாக கத்தரிப்பதனால் முகம் வெண்மையாக தோற்றமளிக்கின்றது என்று பெரும்பாலான பெண்கள் கூறியுள்ளனர்.
எலுமிச்சை கலந்த தண்ணீர்
நீங்கள் காலையில் எழுந்ததும், இரண்டு எலுமிச்சை பாதிகளை ஒரு கப் சூடான நீரில் போட்டு குடிக்கவும். சருமத்தில் வைட்டமின் சி நிறைய இருப்பது முகத்தில் சுருக்கங்கள் மற்றும் கருவளையங்கள் போன்றவையை நீக்குகின்றது. மேலும் வைட்டமின் சி நிறைந்த பழங்களை உண்ணும் பழக்கத்தை நீங்கள் உண்டாக்கிக்கொண்டால் சருமம் பளபளவென ஜொலிக்கும்.
சில்க் துணியில் தலையணை உறை
பலரது வீட்டிலுள்ள தலையணை உறை கொட்டன் துணியினால் தைக்கப்பட்டதாகும். அது உடம்புக்கு சுகமென நினைக்கின்றோம். ஆனால், நாம் அறிந்திடாத உண்மையொன்று உள்ளது. அதாவதுக எமது சருமத்தில் உள்ள அவசியமான எண்ணெய் தன்மையை கொட்டன் தலையணை உறை உறிஞ்சும் தன்மை கொண்டது. சில்க் துணியில் உறை தைத்து போட்டால் உடலுக்கு இதமாகவும் நல்ல தூக்கமும் கிடைக்கும். முயற்சித்துப் பாருங்கள்.
அழகாக்கும் உடற்பயிற்சி
வழக்கமான அடிப்படையில் உடற்பயிற்சி செய்வதால் இரத்த ஓட்டம் மிகவும் சீராக இருக்கும். இது உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆனால் இதனை அநேகமானோர் கடைப்பிடிப்பதில்லை. தொடர்ந்தும் செய்யப்படும் உடற்பயிற்சி மூலம் உடல் பொலிவானதாகவும் மாறும். அதனால் மேக்கப் தேவைப்படாது.
போதியளவு நீர்
மேலே கூறியது போல தினமும் எலுமிச்சை கலந்த நீரை குடிக்க முடிவதில்லை. ஆனால் தினமும் சுத்தமான நீரை அருந்தலாமே? மரமாக இருந்தாலும் தண்ணீர் இல்லாவிட்டால் இறந்துவிடும். அதனால் மரமாக வாழாவிட்டாலும் திடமான மனிதனாக வாழ்வதற்காக நீரை அடிக்கடி குடியுங்கள். ஆணாக இருந்தால் தினமும் 3.7 லீட்டரும் பெண்ணாக இருந்தால் 2.7 லீட்டர் தண்ணீரும் குடிக்க வேண்டும்.
தடையில்லாத தூக்கம்
உங்களுக்கு போதுமான தூக்கம் (7 மணி நேரம்) கிடைக்கவில்லை என்றால் ஆபத்திலேயே முடியும். நீண்ட தூக்கத்தின் மூலம், இறந்த செல்களுக்கு பதிலாக புதிய செல்கள் உருவாகின்றன. எனவே இந்த புதிய செல்களை பிறப்பிக்கும் நேரத்தில் லேப்டப்பை தூக்கி மடியில் வைத்துக்கொண்டும் காதலியுடன் கதைத்துக்கொண்டும் மொபைலில் கேம் விளையாடிக்கொண்டும் இருந்தால் தூக்கத்தின் தொழில் தடைபடும். அப்படி செய்தால் இறந்த செல்களுடனேயே வாழ்க்கையை கழிக்க வேண்டும். முகத்தில் பொலிவும் இருக்காது.