டார்க் சொக்கலேட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

 

பெரும்பாலும் சீனி நோயாளர்கள் சாப்பிடக்கூடாத உணவாக இனிப்பு வகைகள் காணப்படுகின்றன. எல்லா இனிப்புகளும் அப்ப்படியல்ல. குறிப்பாக சர்க்கரையின் கடலாக சொக்கலேட்டைப் பார்ப்பவர்கள் இந்த கட்டுரையை கட்டாயம் படிக்க வேண்டும். ஏனெனில் சொக்கலேட் அவர்கள் நினைப்பது போல் அவ்வளவு பாதகமான ஒன்றல்ல என்பதை உணர்த்தவுள்ளோம். பல வகையான சொக்கலேட்டுகள் உள்ளன. டார்க் சொக்கலேட் அதில் மிகவும் விலை உயர்ந்தது. இனிப்புச்சுவை பெரும்பாலும் அதில் இருக்காது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?  மற்றைய சொக்கலேட்களை விட டார்க் சொக்கலேட்டினால் என்ன நன்மைகள் உள்ளன என்பது பற்றிய பதிவே இது.

 

இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சுழற்சியை பராமரிக்கும்

டார்க் சொக்கலேட் அதிகளவு ஒக்ஸிஜனேற்றத்தைக் கொண்டுள்ளது. இந்த ஒக்ஸிஜனேற்றிகள் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் இருதய அமைப்புக்கு உதவுகின்றன. இதற்கு முக்கிய காரணம் இதில் உள்ள 70% கோகோ. இது தன்னிச்சையாக அதிகளவு சாப்பிடுவது போல் இல்லை. ஒரு மருத்துவ பரிசோதனையின் பின்னர் வாரத்திற்கு 30 கலோரிகள் வீதம் சாப்பிடலாம்.

 

மன அழுத்தத்தைக் குறைத்தல்

கார்டிசோல் என்பது நமது உடலில் உள்ள மன அழுத்த ஹோர்மோன் ஆகும். டார்க் சொக்கலேட்டில் உள்ள பல்வேறு பொருட்கள் கார்டிசோலுடன் போராட காரணமாகின்றன. மன அழுத்தமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே டார்க் சொக்கலேட் குறைந்த கொலாஜன் முறிவுடன் நிலைமையை சமன் செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இது மன அழுத்த பிரச்சினையை குறைக்க உதவும்.

 

சூரியனில் இருந்து பிரச்சினைகளை தடுக்கும்

இப்பொழுதெல்லாம் வெளியே இறங்குவதுகூட மிகவும் சிரமமாக உள்ளது. வெயிலின் தாக்கம் மிகவும் கோரமாக உள்ளது. சூரியனும் வெப்பமும் சேர்ந்து நம் தோலை பாழாக்கிவிடுகின்றன. எனவே டார்க் சொக்கலேட் இந்த நேரத்தில் சன்ஸ்கிரீன் லோஷன் போல செயற்படக்கூடியது. சூரியனில் இருந்து வரும் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்களுடன் இதுபோன்ற டார்க் சொக்கலேட்கள் நமது உடலுக்கு பாதுகாப்பை அளிக்கின்றது. டார்க் சொக்கலேட்டில் உள்ள ஃபிளாவனோல் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள்தான் இதற்குக் காரணம்.

 

பற்களைப் பாதுகாக்கும்

அதெப்படி சாத்தியமாகுமென நீங்கள் யோசிப்பீர்கள். ஆனால் மருத்துவ ரீதியாக இது சாத்தியமானது. டார்க் சொக்கலேட்டில் பற்பசை உள்ளது. மற்றும் இது பல் சிதைவைத் தடுக்கிறது. டார்க் சொக்கலேட்டில் உள்ள கொக்கோ சாறு வழக்கமான சொக்கலேட்டிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அதனால் இனிமே வாங்கும் சொக்கலேட்டில் 70% கொக்கோ உள்ளதா என்று பாருங்கள்.

 

மூளை வளர்ச்சி

ஆரம்பத்தில் இது இரத்த ஓட்டத்திற்கு பங்களிப்பதாக கூறப்பட்டது. அதேபோல இதயத்திற்கு சிறந்த இரத்த பரிமாற்றத்தையும் கொடுக்கக்கூடியது. அதே நேரத்தில், சொக்கலேட்டில் அடங்கியுள்ள PEA எனப்படும் பொருளானது மூளைக்கு மகிழ்ச்சியான எண்டோர்பின்களை வெளியிட தூண்டுகிறது. இதன் மூலம் மகிழ்ச்சியான உணர்வுகள் பிறக்கின்றது.

 

எடை குறைப்பு

டார்க் சொக்கலேட் உடல் எடையை குறைக்கின்றது என்றால் நம்புவீர்களா? உணவுக்கு முன் அல்லது பின் சாப்பிட்டால் டார்க் சொக்கலேட் உங்களை முழுதாக சாப்பிட்ட உணர்வை உணர வைக்கும். இது உங்கள் பசியை நேரடியாக பாதிக்கிறது. இதுபோன்ற உணவு உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.

 

கொலஸ்ட்ரோல் கட்டுப்பாடு

நம் உடலில் இரண்டு வகையான கொழுப்புக்கள் உள்ளன. இது நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு என்று கூறப்படுகின்றது. எனவே டார்க் சொக்கலேட் சாப்பிடுவதால் நீங்கள் நல்ல கொழுப்பை அதிகரிக்கலாம். மேலும் இதில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே ஒரு டார்க் சொக்கலேட்டை வாங்கி பிரிட்ஜில் வைத்திருப்பது நல்லது.