சிறிய வீட்டிலிருந்து உலகின் விலையுயர்ந்த வீட்டைக் கட்டியவர் பற்றி தெரியுமா?

 

பல மதங்களை உலகிற்கு கொண்டு வந்த இந்தியாவில், முகேஷ் அம்பானியையும் கடவுளை போலவே பார்க்கின்றனர். இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கும் இவரை மக்கள் அவ்வாறுதான் பார்க்கின்றனர். கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்களை போல மக்களால் நேசிக்கப்படும் ஒருவரே முகேஷ் அம்பானி. கோர்பரேட் கோடீஸ்வரர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்திலும் பல முடிவுகளை எடுப்பார்கள். அவர்களின் முடிவுகளால் அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைவார்கள். அப்படி வளர்ந்து வந்தவரே முகேஷ் அம்பானி. அவரைப் பற்றிய தொகுப்பாக இன்றைய கட்டுரை அமைகின்றது.

 

யார் இந்த அம்பானி?

வேதியியல் பொறியியலில் மும்பை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவரே முகேஷ் அம்பானி. அதற்கு மேலதிகமாக அவர் முதுகலை பட்டத்திற்காக அமெரிக்க ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றார். ஆனால் கடைசியில் தனது தந்தையின் தொழிலில் ஈடுபட்டார். அம்பானி 1977 இலிருந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் இயக்குநராக இருந்து வருகிறார். ஜாம்நகரில் உள்ள குஜராத்தி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகும். இந்த சுத்திகரிப்பு நிலையம் ஒரு நாளைக்கு 660,000 பீப்பாய்கள் பெற்றோலிய திரவங்களை உற்பத்தியாக்குகிறது. அம்பானியின் முதன்மை வணிகம் பெற்றோலியமாகும். சமீபத்தில்  அவர் மின்சாரம், எரிசக்தி, தொலைத்தொடர்பு மற்றும் நெடுஞ்சாலைகளிலும் முதலீடு செய்துள்ளார்.

 

கோடீஸ்வரர்களின் பட்டியலில் இவர்

ரிலையன்ஸ் நிறுவனங்களில் 42% வைத்திருக்கும் முகேஷ் அம்பானி, சைனா டெய்லி பில்லியனர்கள் குறியீட்டில் 9 வது இடத்தில் உள்ளார். அண்மையில் கொரோனா பரவியதன் விளைவாக கனிய எண்ணெய் வர்க்கங்களின் விலைகள் கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் அம்பானியின் வணிகம் ஒவ்வொரு நாளும் பில்லியன் கணக்கான இழப்புகளை சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 67 பில்லியன் டொலருக்கு அருகில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணி அம்பானியின் செலவில்தான் இயங்குகிறது. அம்பானி அதற்காக சுமார் 400 மில்லியன் டொலர் செலவிடுகிறார். இந்தியாவின் அரசியலுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அம்பானி, இந்திய திரைப்பட நடிகர்களையும் கிரிக்கெட் நட்சத்திரங்களையும் தங்கள் குடும்ப நிகழ்வுகளுக்காக அழைத்து வருகிறார். ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் அம்பானிக்கு மத்தியில் அலிபாபாவின் உரிமையாளர் ஜாக் மா முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

அம்பானியின் தந்தை

அம்பானியின் தந்தை யேமனுக்கான இந்திய தூதுவராக செயற்பட்டார். அவர் யேமனில் இருந்தபோது, ​​துணி வர்த்தகத்தை தொடங்கினார். ஆரம்பத்தில், அவர் ஜவுளி வர்த்தகத்தை ரிலையன்ஸ் எனும்  பெயரில்தான் இந்தியாவுக்குள் விரிவுபடுத்தினார். அம்பானியின் தந்தையும் எரிசக்தியின் பக்கம் தனது பார்வையை செலுத்தியிருந்தார். இதன் பின்னர் முகேஷ் அம்பானி 1979இல் இந்த குழுவில் சேர்ந்தார். அந்த நேரத்தில் இரசாயன பொறியியலாளரான முகேஷ் அம்பானி தனது தந்தையின் பொலியஸ்டர் துணி உற்பத்தி ஆலையை கையாண்டார். 2002ஆம் ஆண்டில், திருபாய் அம்பானி ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக காலமானார். அதன்பிறகு, மகன்களான அனில் மற்றும் முகேஷிடம் தந்தையின் தொழில் குறித்து ஒரு பிரச்சினையும் ஏற்பட்டது. இதன் பின்னர் முகேஷ் பெற்றோலியத்துறையில் ஆதிக்கம் செலுத்தினார்.

 

முகேஷின் குடும்பம்

முகேஷ் அம்பானிக்கு இரண்டு இரட்டையர்களும் மகனும் உள்ளனர். இவரது மனைவி நிதா அம்பானி. சமீபத்தில், அம்பானி ரிலையன்ஸ் வணிகத்தை அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பகிர்ந்து கொண்டார். அந்த பங்குகளில் முகேஷ் அம்பானி 72 லட்சம் பங்குகளையும் அவரது மனைவி நிதா அம்பானிக்கு 75 லட்சம் பங்குகளையும் கொடுத்துள்ளார். அவரின் இரட்டை குழந்தைகளான ஆகாஷ் மற்றும் ஈஷாவிற்கு தலா 62.7 லட்சம் பங்குகளைக் கொடுத்துள்ளார். மேலும் இளையவரான குழந்தைக்கு 2 லட்சம் மட்டுமே கொடுத்துள்ளார். அம்பானி ஒரு கோடீஸ்வரர்தான். ஆனால் கஞ்சத்தனம் கோதாவரி அல்ல. உதாரணமாக பிறந்தநாள் பரிசாக அவரது மனைவிக்கு விமானம் ஒன்றை பரிசாக வழங்கினார். ஈஷாவின் கல்யாணத்திற்குக்கூட அமெரிக்காவில் இருந்து பிரபல பாடகை பாடகிகளை அழைத்திருந்தார்.

 

அம்பானியின் வீடு

அம்பானியின் வீடு இந்தியாவில் ஒரு பிரசித்தி பெற்ற இல்லமாகும்.  அம்பானியின் வீடு 21 மாடிகளும் மூன்று ஹெலிகொப்டர் பேட்களையும் கொண்டது. இதை உருவாக்க 1 பில்லியன் முதல் 2 பில்லியன் டொலர் வரை செலவாகியுள்ளது. அம்பானியின் வீடு உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளில் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளது. சாதாரண நேரத்தில் இது ஒரு பொதுவான அடுக்குமாடி கட்டிடம் போல் தெரிகிறது. ஆனால் அதன் இரவு நேர தோற்றமும் வசதிகளும் உலகில் எந்தவொரு வீட்டிற்கும் இரண்டாவதாக இல்லை. இதன் மொத்த பரப்பளவு நானூறாயிரம் சதுர அடி. அம்பானியின் வீட்டைக் கட்டுவதற்கான பணத்தில், 2001 ல் இடிந்து விழுந்த உலக வர்த்தக மையத்தை போல 7 கட்டிடங்களை கட்ட முடியும். அம்பானி ஒரு சிறந்த திரைப்பட இரசிகர். அவரது ஒவ்வொரு நிமிடமும் மிகவும் மதிப்புமிக்கதாக இருந்தாலும், அவர் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் திரைப்படங்களைப் பார்க்கிறார். வணிக விழாக்களுக்காக ஐரோப்பிய பாணியில் உடையணிந்த அம்பானி, பொதுவாக வீட்டில் காற்சட்டையும் சாதாரண மேற்சட்டையும் அணியும் சாதாரண இந்தியராகவே இருப்பார்.

 

கொரோனாவினால் அம்பானிக்கு என்ன நடந்தது?

கொரோனாவின் செல்வாக்கு மக்களை மட்டுமல்ல, பெரிய வணிக வலையமைப்புகளையும் முடக்கியுள்ளது. சீனா தனது உற்பத்தி நிறுவனங்களையும் மூடியது. இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒருவரான ரிலையன்ஸ் குழுமமும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் மிகப்பெரிய இலாபம் ஈட்டும் துறைதான். எண்ணெய் சுத்திகரிப்பு தொழில், எண்ணெய் விலை குறைவடைந்ததை தொடர்ந்து அதிலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ரிலையன்ஸ் நெட்வொர்க் ஒரு நாளைக்கு 2 பில்லியன் டொலர் இழப்பைப் சந்திப்பதாக கூறப்பட்டது. அப்படி இருந்தும் தனது நாட்டிற்காக  500 கோடி இந்திய ரூபாய் வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் நோயாளர்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள விசேட மருத்துவமனைக்கு இந்த நிதி செலவுசெய்யப்படவுள்ளது. அதுமட்டுமன்றி தினமும் ஒரு இலட்சம் வரை முகக் கவசங்களை கொள்வனவு செய்து விநியோகிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முன்னர் மகாராஸ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநில அரசுகளுக்கு தலா 5 கோடி ரூபாய் படி அம்பானி நன்கொடை வழங்கியுள்ளார்.

 

எளிய மனிதர்

முகேஷ் அம்பானி மும்பையில் உள்ள இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் வளர்ந்தவர். இன்று அவர் மும்பையில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் மிகவும் விலையுயர்ந்த வீட்டை வைத்திருக்கிறார். ஆனால் அம்பானி சாதாரணமான மனோபாவம் கொண்டவர். மேலும், அம்பானி காய்கறிகளை மட்டுமே சாப்பிடும் நபர். ஆசியாவின் பணக்காரர்களில் ஒருவரான அம்பானி எப்போதும் இறைச்சி மற்றும் விஸ்கியில் இருந்து விலகியே வாழ்ந்து வருகிறார் என்பது வியக்க வைக்கின்றது. மேலும் அம்பானியின் மனைவியின் கூற்றுப்படி, அம்பானிக்கு எவ்வளவு இருந்தாலும், மும்பையின் பழைய பாணியிலான கடைகளில் சப்பாத்தி, அரிசி, பருப்பு மற்றும் கறி ஆகியவற்றை சாப்பிடுவது இன்னும் பிடிக்கும் என்று கூறுகிறார். முகேஷ் அம்பானி ஒரு சிறந்த வணிக மனிதர் என்றாலும் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.