இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாயகமாக அமைந்த சீனாவைப் பற்றி நம்மில் பலரும் அறிந்திடாத பல உண்மைகள் உள்ளன. உலகின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றான சீனாவைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளை எண்ணிக்கொண்டே போகலாம். அதிர்ச்சியூட்டும் இயல்புகள் முதல் வித்தியாசமான பழக்கவழக்கங்கள் வரை இங்கு நாங்கள் உள்ளடக்கியுள்ளோம். உங்கள் நண்பர்களைவிட உங்களை புத்திசாலியாக்கும் மிக அற்புதமான உண்மைகளைக் கண்டறிய தொடர்ந்து படிக்கவும்.
கழிவறை பயிற்சி
சீனாவைப் பற்றிய இந்த உண்மை உண்மையில் வித்தியாசமானது. கழிவறை பயிற்சி சீனாவில் மிக ஆரம்பத்திலேயே தொடங்குகிறது. டயாபர்கள் சீனாவில் பிரபலமில்லை. பல குழந்தைகள் கீழே பெரிய துளை உள்ள ஒரு சிறப்பு பேன்ட் ஒன்றையே அணிகின்றனர். மலம் அல்லது சிறுநீர் கழிக்க வேண்டும் என்று அவர்கள் உணரும்போது, எங்கு வேண்டுமானாலும் மலசலம் கழிக்க அவர்களை அனுமதிக்கின்றனர்.
வித்தியாசமான பழக்கவழக்கங்கள்
சீனாவைப் பற்றிய மற்றொரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், உலகின் பெரும்பாலான நாடுகளில் முரட்டுத்தனமாகக் கருதப்படும் நடத்தைகள் சீனாவில் முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை. பொதுவாக நாங்கள் சாப்பிடும் போது ஏப்பம் விடுவதானாலும் சற்று மெதுவாக யாருக்கும் இடையூறு விளைவிக்காதவாறு அதனை செய்வோம். ஆனால் சீனர்களுக்கு சாப்பாட்டை உறிஞ்சி குடித்தல், துப்புதல், அலறல், முணுமுணுப்பு மற்றும் ஏப்பம் விடுதலும் பொதுவான எந்த இடத்திலும் செய்யக்கூடிய ஒரு நடத்தை. அந்த நடத்தை முற்றிலும் இயல்பானது மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. அந்த நாட்டிற்குப் போன பிறகு இதனை அதிகமானோர் அறிந்துகொண்டனர்.
உலக பண்டாக்களின் தாயகம்
உலகில் உள்ள அனைத்து பண்டாக்களினதும் உண்மையான உரிமையாளர் சீனாவாகும். அனைத்து சீன பண்டாக்களும் சிச்சுவான் தலைநகரான செங்டூவில் வாழ்கின்றன. நீங்கள் மற்ற நாடுகளில் ஒரு பாண்டாவைக் கண்டால், அது சீனக் குடியரசிலிருந்து கடனாக வழங்கப்பட்டது என்று அர்த்தம். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஒரு குழந்தை பண்டா பிறக்கும்போது, அது மரபணுக் குலத்தை விரிவாக்க சீனாவிற்கு அனுப்பப்படுகிறது.
மீண்டும் கன்னித்தன்மை பெறலாம்
கன்னித்தன்மையை மீட்டெடுப்பது சீனாவில் சாத்தியமானது மற்றும் மிகவும் பிரபலமானது. இந்த சிகிச்சைக்கு ஹைமெனோராஃபி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை என்று ஒரு மருத்துவ பெயர்கூட உள்ளது. சீன பெண்கள் திருமண நாள் இரவுக்கு முன்பு தங்கள் கன்னித்தன்மையை புனரமைக்க நிறைய பணம் செலவு செய்கிறார்கள். அவர்கள் கன்னிகள் அல்ல என்பதை தங்கள் வருங்கால கணவர்மார் கண்டுபிடிப்பதை அவர்களும் விரும்புவதில்லை போலும்.
மிகவும் ஆக்கபூர்வமான வழியில் போக்குவரத்து நெரிசலைக் கையாள்வது
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. அவர்களுக்கு போக்குவரத்து நெரிசல் பிரச்சினைகள் இருப்பதில் ஆச்சரியமில்லை. அந்த நாட்டில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளும் அலுவலக உத்தியோகத்தர்கள் என்ன செய்வது? அதற்கென்று இருவர் இருக்கின்றனர். இரண்டு பையன்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து அவரை கூட்டிச்செல்வார்கள். மற்றவர் நெரிசலில் சிக்கிய உங்களது வாகனத்தை எடுத்துக் கொண்டுவந்து உங்கள் அலுவலகத்தில் சேர்த்துவிடுவார். கொழும்பில் இப்படியொரு திட்டம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
சீனாவில் ஒரே ஒரு நேர மண்டலம்
சீனா ஒரே ஒரு நேர மண்டலத்தைக் கொண்ட மிகப்பெரிய நாடு என்பதாகும். அதாவது இலங்கையிலே இரண்டு நேர மண்டலங்கள் உள்ளன. கிழக்கு நேர மண்டலத்துக்கும் கொழும்பு நேர மண்டலத்திற்கும் இடையில் 4 நிமிட வித்தியாசமுண்டு. ஆனால் உலகின் மிகப்பெரிய நான்காவது நாடான சீனாவில் ஒரே நேர மண்டலத்தில் நேரம் கணிக்கப்படுகிறது. அதனால்தான் சில இடங்களில் காலை 10 மணிக்குக்கூட சூரியன் உதிக்கிறது. ஆனால் கடந்த காலத்தில், சீனாவில் 5 வெவ்வேறு நேர மண்டலங்கள் இருந்தன. ஆனால் 1949 இல் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் முழு நாட்டிற்கும் ஒரு நேரத்தை நிர்ணயிக்க முடிவு செய்தனர். அப்போதிருந்து, எல்லோரும் அதிகாரப்பூர்வ பீஜிங்கின் நேரத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
சீன புத்தாண்டு
சீன புத்தாண்டு என்பது சீனாவில் மிகப்பெரிய விடுமுறை. இது ஜனவரி அல்லது பெப்ரவரியில் கொண்டாடப்படுகிறது. இது அனைவருக்கும் உண்மையான விடுமுறையாகும். ஏனென்றால் பெரும்பாலானோர் அங்கு வேலை செய்வதில்லை. எல்லோரும் தங்கள் குடும்பங்களுடன் இந்த மகிழ்ச்சியான நேரத்தைக் கொண்டாட வீடு திரும்புகிறார்கள். சீன புத்தாண்டு கொண்டாட்டம் 15 நாட்கள் நீடிக்கும். இதை வேறு எந்த நாடுகளுடனும் விடுமுறைகளுடனும் ஒப்பிட முடியாது. முழு நாடும் இவ்வளவு காலமாக விடுமுறை பெறுவது மிகவும் அசாதாரணமானதும்கூட. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், சீனப் புத்தாண்டு உலகின் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. சீனாவின் மிகப்பெரிய மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, சீன புத்தாண்டு கிறிஸ்மஸை விட பிரபலமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். மேலும் இந்த கொரோனா வைரஸ் பிற நாடுகளுக்கு அதிகமாக பரவக் காரணமும் இந்த புத்தாண்டுதான். இந்த சீன விடுமுறை நாட்களில் பிற நாடுகளில் இருந்து வந்த மக்களினாலேயே கொரோனா பரவியதாகவும் கூறப்படுகின்றது.