இலகுவாக செல்ல முடியாத 8 கடினமான இடங்கள்

 

தற்போதைய கொரோனா சூழலில் பயணம் என்பது சாத்தியமில்லை. ஆனால் சில பயணங்கள் நீங்கள் நினைத்தவாறு இடம்பெறுவதில்லை. அதாவது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பஸ்ஸில் செல்வதை நாங்கள் சொல்லவில்லை. நாம் கூற வருவது உலகிலுள்ள ஆபத்தான இடங்கள். அந்த இடங்களுக்குச் செல்ல முயற்சிப்பதுகூட ஆபத்தானது. அவை பற்றி இன்று பார்ப்போம்.

 

பிட்கென் தீவுகள்

பிட்கேன் தீவு சுமார் ஐம்பது பேர் கொண்ட மிகவும் சிறிய தீவாகும். இதில் சிரமம் உள்ளதென நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கலாம். இதுதான் உண்மையில் உலகின் வசதிகள் குறைந்த ஒரு நிலமாகும். இந்த தீவில் விமானங்களை தரையிறக்க இடமில்லை. அருகிலுள்ள விமான நிலையம் ஐநூறு கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. அதாவது நீங்கள் விமானத்தில் வந்து இறங்கி மீண்டும் படகில் கடக்க வேண்டும். 500 கிலோமீட்டர் என்பது சிறிய தூரம் இல்லையே. ஆகவே இது கடினமான பயணமாகும்.

 

எவரெஸ்ட் சிகரம்

இந்த மலையில் ஏறுவதற்கு என்ன பிரச்சினை இருக்கின்றது, அதில் எத்தனையோ பேர் ஏறி இருக்கின்றார்களே என்று நீங்கள் கேட்கலாம். அப்படியானால், அதில் ஏறிப்பார்க்கும்படி மட்டுமே எங்களால் கூற முடியும். ஏனென்றால் எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய சுமார் 4,000 பேர் மட்டுமே உள்ளனர். அது மட்டுமல்லாமல், 300 க்கும் மேற்பட்டோர் அதை ஏற முயன்று உயிரையும் பறிகொடுத்துள்ளனர். அதில் மேலே ஏற ஏற அதிகரிக்கம் உறை பனியானது மூச்சுக்குழாயை உறையச் செய்துவிடும். முறையான பயிற்சி மற்றும் அனுபவம் இன்றி எவரெஸ்ட் மலையில் ஏறுவது மிகவும் ஆபத்தானது.

 

K2 மலை

இதுதான் உலகின் இரண்டாவது உயரமான மலை. இது சீன மற்றும் பாகிஸ்தான் எல்லைகளுக்கு இடையில் உள்ளது. எவரெஸ்ட்டை விட கே 2 மலை ஏறுவதற்கு கடினமானதென சிலர் கூறுகிறார்கள். இந்த மலையில் 375 பேர் மட்டுமே மேலே ஏறியுள்ளனர். 86 பேர் இறந்துவிட்டனர். அதாவது ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவர் இறந்துவிடுகிறார். அதவது பயிற்சி, அனுபவம் என்பவை மட்டும் இதில் ஏறுவதற்கு போதாது. கொஞ்சம் அதிர்ஷ்டமும் கைகொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆபத்திலேயே முடியும்.

 

பூட்டானின் பரோ கோயில் – பரோ தக்த்சங்

பூட்டான் ஒரு பௌத்த நாடு. எனவே நம் நாட்டை போலவே பல பழைய கோயில்கள் உள்ளன. இந்த இடமும் ஒரு பௌத்த கோயிலாகும். இது பூட்டானின் பரோ மாவட்டத்தின் பரோ பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்த கோயில் ஒரு மலையின் உச்சியில் உள்ளது. மேல் பகுதியிலுள்ள சாய்வில் கட்டப்பட்டுள்ளது. 3000 அடி உயரத்தில் உள்ள இந்த கோவிலுக்கு செல்லும் பயணம் மிகவும் ஆபத்தானது. இத்தகைய பயங்கர தன்மையினாலோ என்னவோ இதனை புலிக்கூண்டு என்றும் அழைக்கின்றனர்.

 

காணாமல் போன இராச்சியம் – FORBIDDEN KINGDOM

இது நேபாளத்தின் போகாரா நகருக்கு அருகில் அமைந்துள்ளது. மிகவும் குளிர்ந்த காலநிலையில் பதினொரு நாட்களாக ஏறிச்செல்ல வேண்டும். இது முதன்முதலில் 1990 களில்தான் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டது. இந்த பள்ளத்தாக்கில் ஒரு ராஜ்ஜியம் இருந்ததென நேபாள மக்கள் நம்புகிறார்கள். இப்போது அது காணாமல் போய்விட்டதென அவர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், மேலே செல்லும் வழியில், சிறிய நகரங்களையும் கிராமங்களையும் சந்திக்க முடியும். ஆனால் இதனை வாயால் கூறுவது போலல்லாமல் மிகவும் பயணம் கடினமாக இருக்கும்.

 

பாம்புகளின் தீவு

இந்த தீவு பிரேசிலில் அமைந்துள்ளது. இதன் வழியாக செல்வதென்பது சாவுடன் ஒரு பயணம் செல்வது போன்றது. இந்த தீவில் ஒரு சதுர மீற்றருக்கு ஐந்து பாம்புகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர். தீவின் கலங்கரை விளக்கினை பார்க்கும் நபரைக்கூட பாம்புகள் தாக்கியதால் அந்த நபர் இறந்த பிறகு, கலங்கரை விளக்கத்தை தானாக இயங்கும் விளக்காக மீண்டும் கட்ட பிரேசில் அரசாங்கம் முடிவு செய்தது. இந்த சம்பவமே இதில் உள்ள ஆபத்தை விளக்குகின்றது.

 

சவால்மிக்க ஆழம் – CHALLENGER DEEP

உலகின் மிக ஆழமான ஆளி மரியானா ஆளி என்பது அனைவருக்கும் தெரியும். மரியானா ஆழியின் ஆழமான ஒரு பகுதியும் உள்ளது. அதுதான் இந்த பகுதி. இதன் ஆழம் சுமார் 10,900 மீற்றர். அதாவது சுமார் 11 கிலோமீற்றராகும். இதில் இறங்கி மீண்டும் வருவதென்பது ஒரு கனவு போன்றது. வெளிச்சம் இல்லாததாலும், தண்ணீரின் தீவிர அழுத்தம் காரணமாகவும் அங்கு செல்வதை கடினமாக்கியுள்ளது.

 

வடக்கு சென்டினல் தீவு

இந்த தீவு இலகுவாக செல்ல முடியாத இடங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த தீவில் உள்ள பழங்குடியினரே இதற்குக் காரணம். இந்த தீவில் நீங்கள் என்ன செய்ய முயற்சித்தாலும், இந்த தீவில் உள்ள பழங்குடி மக்கள் உங்களைத் தாக்குவார்கள். இந்த தீவு அந்தமான் தீவுகளுக்கு அருகில் அமைந்துள்ளது. அளவில் பெரிய தீவாகவே காணப்படுகின்றது. இந்த தீவுவாசிகளின் நடத்தை காரணமாக, இந்த தீவு பற்றிய பல விடயங்கள் உலகிற்கு வெளிப்படுத்தப்படவில்லை.