நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 7 உணவுகள்

 

கொரோனா வைரஸ் தாக்கமே இன்றைய நாட்களில் ஒட்டுமொத்த உலகினதும் பேசுபொருளாக உள்ளது. இந்த வைரஸ் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களையே அதிகம் தாக்குகின்றதென அண்மைய மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே நோயெதிர்ப்பு சக்தி அதிகம் காணப்படும் உணவுகளை உண்பதால் கொரோனா தொற்றின் தாக்கத்திலிருந்து ஓரளவு பாதுகாப்பை பெற்றுக்கொள்ளலாம். நம் நாட்டில் நோயெதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளுக்கு பஞ்சமில்லை. அதன்படி நமது மூத்தோர்கள் அதிகம் உபயோகித்து வந்த நோயெதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளில் சிலவற்றை பார்ப்போம். எதிர்காலத்திலும் இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் ஆரோக்கியத்தை அதிகரித்துக்கொள்ளலாம்.

 

கொத்தமல்லி

காய்ச்சல், தடிமனுக்கு பெரும்பாலும் கொத்தமல்லியை குடித்தாலும், தினமும் கொத்தமல்லி குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் 1000 இல் ஒருவர் தான் என்ற அளவில் குறைவாகவே உள்ளன. கொழும்பு பல்கலைக்கழகத்துடன் (ஐ.டி.ஐ) நடத்தப்பட்ட ஆய்வில் கொத்தமல்லியின் ஆக்ஸிஜனேற் பண்புகள் உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கு பெரும் உதவி அளிக்கின்றதென தெரியவந்தது. எனவே கொத்தமல்லி ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அல்லது இரண்டு முறையாவது குடிக்க வேண்டும்.

 

பாவட்டா

ஆயுர்வேதத்தின் மூலிகைகளில் பாவட்டாவும் மிகவும் மேலானதாகும். நோயெதிர்ப்பு சக்தி முதல் புற்றுநோய் எதிர்ப்பு மருந்து வரை இதில் உள்ளது. இதற்கு பாவட்டா இலைகள் மற்றும் பாவட்டா வேர்கள் என்பன பயன்படுத்தப்படுகின்றன. இது கசப்பாக இருப்பதால் கொத்தமல்லி மற்றும் பூண்டு சேர்த்து கலந்து குடிக்கலாம். சர்க்கரையுடன் குடிப்பதைவிட தேன் அல்லது கருப்பட்டி வெல்லத்துடன் குடிப்பது நல்லது.

 

பலாமூசு

பலாவின் பிஞ்சை மூசு என அழைப்பர். இந்த பலாமூசை சாப்பிட்டு இராட்சதர்கள்கூட சக்தி பெற்றதாக புராணக்கதைகள் கூறுகின்றன. பலாமூசில் காணப்படும் புளிப்பு இரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆனால் அது புளிப்பாக இருக்க வேண்டும்.

 

வற்றாளைக்கிழங்கு

இனிப்பான வற்றாளைக்கிழங்கை சாப்பிடுவதால் ஆயிரக்கணக்கான பிற சத்தான விளைவுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்திக்கு பங்களிக்கின்றன. ஆக்ஸிஜனேற்களுக்கு கூடுதலாக, இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

 

வெள்ளைப்பூண்டு

வெள்ளைப்பூண்டினை கறி அல்லது கஞ்சியாக செய்து சாப்பிடுவதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அல்லிசின், ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற் மற்றும் வைரஸ் தடுப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

 

வெனிவல்

கொரோனாவின் பரவலுடன் மீண்டும் விவாதிக்கப்பட்ட மற்றொரு முக்கிய விடயமாக வெனிவல் காணப்படுகின்றது. நீங்கள் இதனை இளஞ்சூடான தண்ணீரில் சேர்த்து குடிக்க முடியாவிட்டால், தேநீரில் கலந்து குடிக்கலாம்.

 

எழுமிச்சை இலைகள்

எழுமிச்சை இலைகளை எடுத்து ஒரு கப் சூடான நீரில் ஊற்றி கொதிக்க விடவும். அதை தேநீருக்கு பதிலாக தினமும் குடிக்கவும். எழுமிச்சை இலைகளைக் தேடுவது கடினமாயின் நீங்கள் ஏதாவது புளிப்பான செடியின் இலைகளையும் பயன்படுத்தலாம்.