காலையில் செய்யவேண்டிய விடயங்கள்

 

உலகில் ஒவ்வொரு விடியற்காலை பொழுதும் சரியாக அமையாவிட்டால் எவருக்கும் இந்த உலகில் நிம்மதி என்ற ஒன்றே இருக்காது. அதனால் இன்று லைஃபீ தமிழ் உங்களுக்கு காலை பொழுதை சிறந்த பொழுதாக மாற்றிக்கொள்வதற்கு காலையில் எழுந்தவுடன் செய்யவேண்டிய விடயங்களை பற்றி சொல்லித்தரவுள்ளது.

 

நீர்

காலையில் எழுந்து ஒரு கிளாஸ் நீர் அருந்துவது நிறைய நன்மைகளை தரும். முக்கிய விடயம் என்னவென்றால், எழுந்து சில மணிநேரங்களுக்குப் பிறகு நீர் அருந்துவதால் அது வயிற்றை நிரப்பக்கூடியது. இதற்கு கூடுதலாக, காலை உணவில் இருக்கும் கலோரி மற்றும் நச்சுப்பதார்த்தங்களை சரியாக குறைத்து குறிப்பாக வளர்சிதை மாற்றத்தைக் குறைக்க இது ஒரு சிறந்த வழியாகும்.

 

திட்டமிடல்

ஒரு நாளில் என்ன என்ன செய்ய போகிறோம் என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனால் என்ன செய்யவேண்டும் என்று முறைப்படி எழுதி வைத்துக்கொள்ளமுடியும் தானே. அதனால் அதற்கு முதல் நாளிலேயே எல்லாவற்றையும் முறையாக எழுதி வைத்து அல்லது மொபைலில் நோட் செய்து வைப்பது நல்லது.

 

தியானம்

அவசர உலகில் யாருக்கும் பொறுமையில்லை என்பது அனைவரும் அறிந்த விடயம். அனால் அந்த அவசரத்தை காலை எழுந்ததும் காட்டுவதில் எந்த பயனும் இல்லை. அதாவது கண் விழித்ததும் அவசரமாக படுக்கையில் இருந்து எழுந்து ஓடக்கூடாது. அந்த இடத்திலேயே சற்று அமர்ந்து ஒரு சில நிமிடம் தியானம் செய்யுங்கள். அதற்காக சில நிமிடங்களை ஒதுக்குங்கள். மனதுக்கும் உடலுக்கும் ஆறுதலாகவும் அமைதியாகவும் இருக்கும்.

 

பாடல் அல்லது இசை

அதிகாலையில் உங்களுக்கு விருப்பமான ஒரு பாடலை அல்லது இசையை கேட்டு எழுந்திருப்பதும் ஒருவகையான நல்ல உணர்வுகளை உண்டாக்கவல்லது என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. மேலும் உடலை அதிகாலையிலிருந்தே புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.

 

உடற்பயிற்சி

காலையில் உடற்பயிற்சி செய்வதானது பாரிய நன்மைகளை தரும். உடற்பயிற்சியானது, உடலுக்கு மட்டுமன்றி மனதுக்கும் மூளைக்கும் புத்துணர்ச்சியை தரும். அன்றைய நாள் சுறுசுறுப்பாக இருக்கும். இதன் நன்மைகளை அறிந்தே மேற்கத்தேய நாடுகளில் தினமும் தவறாது உடற்பயிற்சி செய்கின்றனர்.

 

மனதிற்கு பிடித்தவர்கள்

காலையிலேயே இதமான உணர்வுகளை பெறுவது இலகுவான விடயமல்ல. அதனால் கண்விழித்ததும் உங்கள் காதலியை அல்லது காதலனை பற்றி யோசியுங்கள். யாரும் இல்லாத சந்நியாசியாக இருந்தால் வேறு யாராவது உங்களுக்கு பிடித்தவர்களை நினையுங்கள். அல்லது பிடித்த விடயங்களை நினைத்துக்கொள்ளுங்கள்.

 

காலை சாப்பாடு

காலைப்பொழுதை சாப்பாடு இல்லாமல் ஆரம்பிக்க வேண்டாம். காலை சாப்பாடு இல்லாத நாள் ஒரு பட்டினியான நாள் என்று பெரியோர்கள் கூறுவார்கள். மேலும் காலை சாப்பாடு இல்லாவிட்டால் அன்றைய நாளில் எந்த வேலையும் சரியாக நடக்காது. தேவையில்லாத நோய்களையும் பெற்றுக்கொள்வீர்கள்.