உலகின் அழகான மற்றும் பெரிய தீவுகளில் ஒன்றான கியூபா நாட்டை பற்றி நம்மில் பலரும் அறிந்திடாத தகவல்களை இன்று லைபீ தமிழ் உங்களுடன் பகிர்ந்துகொள்ளவுள்ளது. அவற்றை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
முதலை போன்ற நாடு
கியூபாவை சுற்றி சுமார் 4000 தீவுகள் வரை உள்ளன. அதுவும் இந்த தீவை வானில் இருந்து பார்த்தால் ஏதோ ஒரு முதலை படுத்திருப்பது போல தெரியும். உலகின் மிகப்பெரிய கடற்கரைக்கு சொந்தக்காரரான கியூபாவின் கடற்கரை 5700 கிலோமீற்றர் நீளம் கொண்டது. இதன் பெரிய நகரமான ஹவானா இதன் தலைநகரமாகும்.
தும்முவதற்கு அனுமதி இல்லை
பொதுவாக மனிதர்களுக்கு தும்மல் வருவது சகஜமாகும். ஆனால் அந்த தும்மல் கியூபாவில் வந்துவிட்டால் தவறுதான். ஏனென்றால் இங்கு பொது இடங்களில் தும்முவது முற்றிலும் குற்றமாகும். அப்படி தும்முவதாயின் முற்றிலும் தனிப்பட்ட இடத்தில்தான் தும்ம முடியும். மேலும் பொது இடங்களில் சளியை சிந்துவதும் இதை நாட்டில் தவறான விடயம். இப்படிப்பட்ட தடையை இந்த நாடு விதித்தமைக்கு காரணம் உண்டு. தொற்றுள்ள ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுவதை தடுக்கும் வகையில் அங்கு இந்த நடைமுறை உண்டு. அதைப்பற்றி மக்கள் கூடுதல் கவனம் செலுத்துவதால் பலர் அங்கு ஆரோக்கியமாக வாழ்கின்றனர்.
கொகா கோலா இல்லை
உலக நாடுகளிலேயே கொகா கோலாவை விற்பனை செய்ய தடைசெய்யப்பட்ட இரண்டு நாடுகளில் கியூபாவும் ஒன்று. இந்த நாட்டில் சட்டபூர்வமாக கொகா கோலாவை விற்பனை செய்ய அனுமதி கிடைக்காவிட்டாலும் சட்டவிரோதமாக அரசாங்க அனுமதியின்றி சில சுற்றுலாத்தளங்களில் இதனை விற்பனை செய்கின்றனர்.
VINTAGE கார்களில் பயணம் செய்பவர்கள்
உலகிலேயே அதிகமான பொது மக்கள் VINTAGE கார்களை பயன்படுத்தும், அதாவது 1940 களில் அமெரிக்காவில் பயன்படுத்தியது போன்ற கார்களை இன்றும் பயன்படுத்தும் நாடு கியூபாவாகும். ஆனால் பார்க்க கவர்ச்சியாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் இதனை வெளிநாட்டவர்கள் வாங்க முடியாது. கியூபா நாட்டின் பிரஜாவுரிமை பெற்றவர்களுக்கும் அந்த நாட்டில் பிறந்து பிறநாட்டில் வசிப்போர்களுக்கும் மட்டுமே இந்த கார்களை வாங்க முடியும்.
கல்வியறிவில் 99.7 சதவீதம்
இந்த நாட்டில் 1959 வரை 60 தொடக்கம் 75 சதவீதம் வரை கல்வியறிவு விகிதம் இருந்தது. ஆனால் இன்று 99.7 சதவீத மக்கள் படிப்பறிவோடு இருக்கின்றனர். முன்பு மக்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவதில்லை என அறிந்துகொண்ட பிடல் காஸ்ட்ரோ எனும் கியூப கம்யூனிஸ்ட் புரட்சிகர அரசியல்வாதி எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் இன்று அந்த நாடு கல்வியில் மேலோங்கி காணப்படுகின்றது. அன்று முதல் 6 வயது முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் எனவும் அதற்கு மாறாக செயற்பட்டால் தண்டனை என்றும் அறிவிக்கப்பட்டது. அதன் பெறுபேறாக இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல நாடுகளுக்கு கியூபா தனது வைத்தியர்களை அனுப்பி உலகையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளமை சிறப்பம்சமாகும்.
அரசாங்கத்தின் கட்டுப்பாடு
இந்த உலகின் கடைசி கம்யூனிச நாடும் தொடர்ந்தும் கம்யூனிச நாடாக இருக்கப்போவதும் கியூபாவாகும். ஏனென்றால் அவ்வாறு இருப்பது உண்மையில் மிகவும் பலனளிக்க கூடியதாகும். அந்த நாட்டில் தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் மருத்துவம் என்பவை இல்லை. கல்வியையும் மருத்துவத்தையும் முற்றிலும் இலவசமாக கொடுக்கும் நாடாக கியூபா பெருமிதம் கொள்கிறது. கியூபாவில் டிவி, ரேடியோ, செய்தித்தாள்கள் அனைத்துமே அரசாங்கத்தின் கீழ் செயற்படுகின்றது.