கைகளில் உரோமங்கள் இருப்பது நல்லதுதான். ஆனால் எல்லோருக்கும் இது சரியாக அமைவதில்லை. சிலர் அளவுக்கதிகமான உரோமங்களால் அவஸ்தைப்படுகிறார்கள். அதற்காக சலூனுக்குச் சென்று அகற்றிக்கொள்வார்கள். சலூனில் வலி ஏற்படாதவாறு வாக்ஸிங் செய்து அகற்றுகிறார்கள். அவற்றை இந்த காலக்கட்டத்தில் வீட்டில் இருந்தபடியே உங்களாலும் செய்யமுடியும். முயற்சித்துப் பாருங்கள்.
சீனி
வீட்டில் இருந்தபடியே வாக்ஸிங் செய்வதற்கு, சீனி ஒரு கோப்பையும் எலுமிச்சை சாறு 4 மேசைக் கரண்டிகளும் நீர் 4 மேசைக் கரண்டிகளும் சேர்த்து பேஸ்ட் ஒன்றை செய்து கொள்ளுங்கள். அதை உரோமங்கள் இருக்கும் இடங்களில் தேய்த்து சிறிது நேரத்தில் வாக்ஸினை கழட்டுவது போல அகற்றிக்கொள்ளவும்.
சோயாபீன்ஸ்
சோயா அவரைகள் மூலமும் வாக்ஸிங் செய்யப்படுகின்றது. சோயா பொருட்களின் பயன்பாடு சருமத்தை மெல்லியதாக ஆக்குகிறது. காலப்போக்கில், இந்த மெல்லிய தன்மையினால் தேவையற்ற உரோமங்களை வளரவிடாமல் செய்துவிடும்.
பப்பாளி மற்றும் மஞ்சள்
இதைச் சரியாக செய்வதன் மூலம், நீங்கள் முழுமையாக அதிக உரோம அவஸ்தையில் இருந்து விடுபட முடியும். நன்கு பழுத்த பப்பாளி 2 மேசைக்கரண்டி மற்றும் அரை மேசைக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் தயாரிக்கவும். கைகளிலிருந்து அகற்ற முன் 15 நிமிடங்கள் வரை உலரவிடவும். வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்யுங்கள்.
தயிர் மற்றும் கோதுமை மா
ஒரு டீஸ்பூன் கோதுமை மா தயாரிக்க, இரண்டு மேசைக்கரண்டி தயிர் சேர்க்கவும். இதை பப்பாளி – மஞ்சள் கலவையை செய்தது போல 15 நிமிடங்களின் பின்னரே கழுவ வேண்டும். தயிர் உண்மையில் டெஸ்டோஸ்டிரோன் கட்டுப்பாடு கொண்டது. இது சருமத்தில் அதிக உரோம வளர்ச்சியை குறைக்கின்றது. சோயாபீன் போன்று இதுவும் சருமத்தை மென்மையாக்குகிறது.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறுடன் செய்யும் இந்த தயாரிப்பு தொடர்பாக அவதானமாக இருங்கள். அத்தோடு, அன்றைய நாள் முழுவதும் வீட்டில் இருங்கள். சூரிய வெயில் சருமத்தில் படக்கூடாது. ஏனெனில் அது சருமத்திற்கு பிரச்சினையாக மாறவும் கூடும். எலுமிச்சை சாற்றை எடுத்து, உங்கள் கைகளில் தேய்த்து பின்னர் இருபது நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
யோகட்
யோகட்டில் உள்ள லாக்டிக் அமிலத்தின் மூலம் உரோமங்கள் மெல்லியதாக மாற வழிவகுக்கும். இதனை நீண்ட காலம் பயன்படுத்துவதால் எதிர்பார்த்த பலனை பெறலாம். இதனை கைகளில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து கழுவிக்கொள்ளுங்கள்.