குறைந்த உள்ளீடுகளுடன் தயாரிக்கக்கூடிய ஏழு உணவுகள்

 

தற்போதைய நாட்டு நிலைமையின் அடிப்படையில் வீட்டிலுள்ள உணவுப்பொருட்கள் அனைத்தையும் பயன்படுத்தி உணவுகளை தயாரிப்பது அவ்வளவு நல்லதல்ல. அதேபோல சமைப்பதற்கு தேவையான சகல பொருட்களையும் வாங்குவது இக்காலகட்டத்தில் மிகவும் சிரமமான விடயம். இந்த சூழ்நிலையில் வீட்டிலுள்ள எல்லா பொருட்களையும் போட்டு சமைத்து சாப்பிடக்கூடாது. குறைவான உள்ளீடுகளை பயன்படுத்தி நிறைவாக சாப்பிடுங்கள். அவ்வாறான சில தயாரிப்பு வழிகளை இன்று உங்களுக்கு கொண்டுவந்துள்ளோம்.

 

டெரியாகி சிக்கன்

தேவையான பொருட்கள்

  • கோழி இறைச்சி – 500 கிராம்
  • சோயா சோஸ் – 1 கப்
  • நீர் – 1/2 கப்
  • சிவப்பு சர்க்கரை – 1/2 கப்

 

  • முதலில் கோழி இறைச்சியை பொரித்துக்கொள்ளுங்கள்
  • இதில் நீர், சோயாபீன் மற்றும் சிவப்பு சர்க்கரை சேர்க்கவும்.
  • அதை நன்கு கலந்து குறைந்த வெப்பத்தில் மூடி வைத்து விடவும். அடிக்கடி கிளறவும்.
  • சோயா சோஸ் மற்றும் கோழியுடன் சர்க்கரை நன்கு கலந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

சொக்கலேட் பிரவுனீஸ்

தேவையான பொருட்கள்

  • டபிள் பொய்ல் செய்த சொக்கலேட் – 1 கப்
  • முட்டை – 2
  • கோதுமை மா – 1

 

  • இதையெல்லாம் நன்றாகக் கலந்து ஒரு டிரேயில் வைத்து 180 செல்ஷியஸிற்கு 20 நிமிடங்கள் பேக் செய்ய வேண்டும்.

 

ஈஸி சொக்லேட் கேக்

தேவையான பொருட்கள்

  • சொக்கலேட் சிப்ஸ் – 1 கப்
  • முட்டை – 3

 

  • சொக்கலேட் சிப்ஸ்களை டபிள் பொய்ல் செய்து கொள்ளவும்.
  • முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை தனித்தனியாக பிரிக்கவும்.
  • வெள்ளைக்கருவை வேறாக எடுத்து கலந்துகொள்ளவும்.
  • இப்போது டபிள் பொய்ல் செய்த சொக்கலேட்டில் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து கிளறவும்.
  • அடுத்து வெள்ளைக்கருவை சேர்த்து கிளறவும்.
  • வெண்ணெய் தட்டில் வைத்து 180 ° க்கு சூடேற்றப்பட்ட அடுப்பில் 20 நிமிடங்கள் சுடவேண்டும்.

 

ஏக் புடின்

கேரமல் தயாரிக்க தேவையான பொருட்கள்

  • சர்க்கரை – 4 மேசைக்கரண்டி
  • நீர் – 3 மேசைக்கரண்டி

 

முட்டை கலவைக்கு தேவையான பொருட்கள்

  • தூய்மையான பால் – 2 கப்
  • சர்க்கரை – 3/4 கப்
  • முட்டைகள் – 4

 

  • ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் நீரை சேர்த்து கேரமல் செய்யவும்.
  • இப்போது இதை புடிங் தட்டில் ஊற்றவும்.
  • ஒரு தனி பாத்திரத்தில், தூய பால் மற்றும் சர்க்கரையை கலந்து கரையும் வரை சூடாக்கிக்கொள்ளுங்கள். தொடர்ச்சியாக கிளறுங்கள்.
  • பிளெண்டரில் அடித்த முட்டைகளை சர்க்கரை மற்றும் சூடான பாலுடன் கலக்கவும்.
  • இப்போது இதை கேரமல் தட்டில் ஊற்றி 30-40 நிமிடங்கள் ஸ்டீம் செய்யவும்.

 

பனானா பேன் கேக்

தேவையான பொருட்கள்

  • நன்கு பழுத்த வாழைப்பழம் – 1
  • முட்டை – 1
  • பால் மா அல்லது தூய பால் – 2 மேசைக்கரண்டி

 

  • வாழைப்பழம், பால் மற்றும் முட்டையை நன்கு கலக்கவும்.
  • இப்போது இந்த திக் மிக்சரை ஒரு நொன்ஸ்டிக் கடாயில் போட்டு கேக்கை தயாரிக்கவும்.

 

சோக்கோ குக்கீஸ்

தேவையான பொருட்கள்

  • பட்டர் – 3/4 கப்
  • சர்க்கரை (நன்கு அரைத்தது) – 1/3 கப்
  • கோதுமை மா – 2 1/4 கப்

 

  • பட்டர் மற்றும் சர்க்கரையை ஒன்றாக கலக்கவும். சர்க்கரை உருகும் வரை கலக்கி, மா சேர்த்து மீண்டும் கிளறவும்.
  • இப்போது இந்த கலவையை நன்றாக பிசைந்து நீண்ட ரோலாக மாற்றவும்.
  • இப்போது சிறிதளவு சர்க்கரையை ஒரு தட்டில் வைத்து, எல்லா இடங்களிலும் சர்க்கரை படுமாறு அந்தத் ரோலை பிரட்டிக்கொள்ளுங்கள்.
  • அதை ஒரு லஞ்ச் ஷீட்டில் கவனமாக உருட்டி 30 நிமிடங்கள் ப்ரீஸரில் வைக்கவும்.
  • பிறகு அதனை ஒரு குக்கீ வடிவில் வெட்டி இந்த துண்டுகளை ஒரு பேக்கிங் தட்டில் வைக்கவும். 180 செல்ஷியஸிற்கு சூடேற்றப்பட்ட அடுப்பில் 20 நிமிடங்கள் சுடவும்.