முன்பெல்லாம் தொடர்ந்து வேலை செய்துவிட்டு மாதம் ஒருமுறை அல்லது வாரம் ஒரு முறையாவது திரையரங்குகளுக்குச் சென்று பொழுதுபோக்கிற்கு படம் பார்த்து விட்டு வருவோம். இப்போது கொரோனா வந்தவுடன் எந்த ஒரு திரையரங்குகளுக்கும் செல்ல முடியாதவாறு போயுள்ளது. அதனால் வீட்டில் இருந்து பார்க்க சில சேனல்களில் பழைய படங்களையும் முடிந்து போன அலுப்பை தரும் டிவி தொடர்களையும் போடுகிறார்கள். அதனால் நெட்ஃபிக்ஸ் இல் பார்க்க சிறந்த 8 பொழுதுபோக்கு மற்றும் சிறந்த தகுதி வாய்ந்த தொடர் / திரைப்படங்களின் பட்டியலை உங்களுக்கு வழங்குகிறோம்.
Stranger Things
இந்த அறிவியல் புனைகதைத் தொடர் ஒவ்வொரு வகை பார்வையாளர்களையும் ஈர்க்கிறது. கொஞ்சம் காதல், சில குடும்ப நட்பு, நகைச்சுவை மற்றும் அசுரனை எதிர்த்து சண்டை போடும் காட்சிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இரவு முழுதும் விழித்திருந்து பார்த்தாலும் அலுப்பை தராது. இந்தத் தொடர் மொத்தம் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகமான எபிசோடுகள் இல்லை. எனவே அதையெல்லாம் பார்ப்பதற்கு அதிக நேரம் எடுக்காது. இந்தத் தொடர் 12 வயது நிரம்பிய நான்கு சிறுவர்கள் ஒரு அரக்கனை எதிர்த்துப் போராடி அழிக்க முயற்சிப்பதை சித்தரிக்கின்றது. முக்கிய நடிகர்களாக குழந்தைகள் இருந்தாலும், இந்தத் தொடர் எல்லா வயதினருக்கும் பொருந்தும்.
House Of Cards
இந்த தொடரில் கெவின் ஸ்பேஸி மற்றும் ரொபின் ரைட் ஆகியோர் கணவன்-மனைவியாக, வெள்ளை மாளிகையை அடைய சதி செய்கிறார்கள். இரக்கமற்ற தன்மை, தம்மை தவிர ஏனைய விடயங்களை புறக்கணிப்பது மற்றும் ஜனாதிபதி பதவிக்கு ஆபத்தான பாதையில் அவர்களை இட்டு செல்வதாக காட்டியுள்ளனர். கொலை, துரோகம் மற்றும் உளவுத்துறை ஆகியவை இந்தத் தொடரின் முக்கிய கருப்பொருள்கள். இந்த தொடர் 6 சீசன்களைக் கொண்டுள்ளது. மற்றும் இது 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரை இலக்கு பார்வையாளர்களாக கொண்டுள்ளது. இது ஒரு அரசியல் ரீதியான தொடர் என்றும் கூறலாம்.
The Good Wife
உங்களுக்கு சட்டம் சம்பந்தமான ஏதாவது தொடர்களை பார்க்க விருப்பமென்றால் இது உங்களுக்கான தொடராகும். இந்த தொடர் நாடகம், காதல் மற்றும் சிறந்த நீதிமன்ற அறை காட்சிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த தொடர் புத்திசாலித்தனமான வழக்கறிஞர் அலிசியா ஃப்ளோரிக் வாழ்க்கையை மையமாக கொண்டது. அவரது கணவர் சிறைக்கு அனுப்பப்பட்ட பிறகு, தனது உயர்நிலைப் பள்ளி காதலன் பணிபுரியும் ஒரு சட்ட நிறுவனத்தில் வேலை செய்கிறார். அதன் பிறகு அவரின் வாழ்வில் வரும் விடயங்களை ஒரு புதிரான கதை மூலம் தொடங்குகின்றனர். இந்தத் தொடரும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களை இலக்கு பார்வையாளர்களாக வைத்து தயாரிக்கப்பட்டதாகும்.
Mad Men
இந்த தொடர் 60 களில் எடுக்கப்பட்ட ஒரு தொடராக சித்தரிக்கப்பட்டுள்ளது. இது விளம்பர நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு இளைஞனை மையமாகக் கொண்டுள்ளது. கடந்த காலங்களில் ஆண்களும் பெண்களும் எவ்வாறு வாழ்ந்தனர் என்பதை இந்த தொடர் காட்டுகிறது. மேலும் இன்று நாங்கள் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளோம் என்பதையும் தெளிவுபடுத்துகிறது. முக்கிய கதாபாத்திரமான டான் டிரபர், திருமணமான கவர்ச்சியான இளம் வாலிபர். அவர் பல பெண்களுடன் தொடர்பை வைத்துள்ளதாக கதையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. 7 பகுதிகளைக் கொண்ட இந்தத் தொடர் முற்றிலம் வயது வந்தவர்களுக்கானது.
13 Reasons Why
ஹன்னா பேக்கர் என்ற உயர்நிலைப் பாடசாலை பெண்ணை மையமாகக் கொண்ட இந்தத் தொடர் மிகவும் தனித்துவமானது. ஹன்னா தற்கொலை செய்துகொள்கிறார். பின்னர் சுவாரஸ்யமாக தனது 13 நண்பர்களுக்கு டேப்களை விட்டுச்செல்கிறார். ஒவ்வொரு நண்பரும் தனது தற்கொலைக்கு எப்படி காரணமாக மாறுகின்றனர் என்பதே ஒவ்வொரு டேப்பிலும் உள்ளது. எனவே தான் தொடரின் பெயரும் 13 REASONS WHY என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் இதுவரை 3 சீசன்களுக்குச் சென்றுள்ளது. மேலும் ஒவ்வொரு சீஸனும் மிகவும் விறுவிறுப்பை உண்டாக்கும். விடுமுறை நாட்களில் கண்டுகளிக்க ஒரு சிறந்த படைப்பு என்றும் சொல்லலாம்.
Gossip Girl
காதல் கதையை மையமாகக் கொண்டு இந்தத் தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரானது பிளேக் லைவ்லி மற்றும் 2007-2012 இல் அவளது பாடசாலை வாழ்க்கையை மையமாகக் கொண்டது. இந்த தொடர் உங்கள் வழக்கமான பாடசாலை பருவம் மற்றும் வாழ்க்கையுடன் தொடர்புபட்டது போல தெரியும். இந்த தொடருக்கு பலரும் அடிமையாகலாம். காதல் நிறைந்த ஒரு நல்ல நாடக தொடரை விரும்புபவராக நீங்கள் இருந்தால், இந்த விடுமுறையில் நீங்கள் பார்ப்பதற்கான தொடர் இதுவாகும்.
Friends
இந்தத் தொடர் நியூயோர்க் நண்பர்கள் 6 பேரின் வாழ்க்கையை சித்தரிக்கும் ஒரு தொடராகும். கடந்த காலத்தில் நீங்கள் எத்தனை முறை இந்த தொடரைப் பார்த்திருந்தாலும், தொடக்கத்திலிருந்து இறுதி வரை இதை மீண்டும் மீண்டும் பார்க்கலாம். அவ்வளவு சிறந்த ஒரு தொடர்தான் இது. மொத்தம் 236 எபிசோடுகளை கொண்டிருந்தாலும் சளைக்காமல் பார்க்கக்கூடிய ஒரு தொடர்தான் இது.
Elite
மற்றொரு டீனேஜர்ஸ் நாடகம் என்று இதனைக் கூறலாம். இந்த மர்ம த்ரில்லர் தொடர் ஒரு மேல்நிலை பாடசாலை மாணவர்களை பற்றியது. மாணவன் ஒருவர் கொல்லப்படும்போது, அனைவரும் சந்தேக நபர்களாக மாறுகிறார்கள். மாணவர்களும் காவல்துறையினரும் கொலையாளியைக் கண்டுபிடிக்கும்போது, தொடர்ந்து வரும் சம்பவங்கள் உங்களை உங்கள் இருக்கையின் விளிம்பில் வைத்து அடுத்து என்ன என்று எதிர்பார்க்க வைக்கும். இது ஒரு ஸ்பானிஷ் மொழி தொடராக இருந்தாலும், ஆங்கிலம் மற்றும் அரபு உப தலைப்புகளில் உள்ளன. திரில்லர் தொடர்களை விரும்பினால் இதனை பார்க்கலாம். வெறும் 3 சீசன்களை மட்டுமே கொண்டுள்ளன.