கொரோனாவுக்கு பின்னரான சமூக மாற்றம்

 

மனித வர்க்கம் ஒருபோதும் எதிர்பார்த்திராத கொரோனா என்ற கொள்ளை நோய் திடீரென வந்து, இன்றுவரை சுமார் 170,000இற்கும் அதிகமான உயிர்களை காவுகொண்டுள்ளது. வீட்டில் என்ன நடக்கின்றது என்றே தெரியாதவர்கள்கூட இன்று வீட்டு வேலைகளை இழுத்து போட்டு செய்ய வைத்தது. வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என அடிக்கடி அறிவுரை வழங்கப்படுகின்றது. இந்த நிலை உலகில் பொதுவாக எல்லா மூலையிலும் இன்று ஏற்பட்டுள்ளது.  அதனால் எல்லோரும் வீட்டிற்குள் சிக்கிக்கொண்டார்கள். இப்படியான எல்லா வெறுப்புடனும், நம் அனைவரின் வாழ்க்கையிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த மாற்றங்கள் எமது வாழ்க்கையில் தொடர்ந்தும் நீடிக்கலாம். நல்ல மாற்றங்கள் தொடர்ச்சியாக இருப்பது நல்லதுதானே?

 

ன்லைன் ஷொப்பிங்

ஊரடங்குச் சட்டம் காரணமாக பல இடங்களில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கும் மக்கள் தெருவில் இறங்குவதற்குக்கூட வழியில்லாமல் இருக்கின்றனர். இதற்கு தீர்வாக ஒன்லைனில் ஓர்டர் செய்து அல்லது தொலைபேசியில் பேசி இந்த பொருட்களை வாங்கி வீட்டிற்குக் கொண்டு வரலாம். அதற்கு ​​நீங்கள் டெலிவரி கட்டணத்தை செலுத்த வேண்டும். நாங்கள் போக்குவரத்து நெரிசலில் வீதியில் செலவழிக்கும் நேரம் மற்றும் பெற்றோல் செலவை பார்த்தால் இந்த டெலிவரி செலவு ஒன்றும் பெரிதல்ல. மறுபுறம் விற்பனையாளர்களின் நிலையை பார்த்தால், காட்சியறைகள் மற்றும் கடைகளில் பொருட்களை வைத்து விற்கும் போது, வாடகை, மின்சாரம் போன்ற கூடுதல் செலவுகளைக் குறைத்துக்கொள்ளவும் முடியும்.

 

இணையம் மூலம் கட்டணம் செலுத்துதல் (Online Payment)

மொபைல், மின்சாரம் மற்றும் நீர்க் கட்டணங்கள் போன்றவற்றை செலுத்த இணையம் முழுவதிலும் எளிதாக வசதிகள் இருந்தும் மக்கள் இதுவரை காலமும் அதிகமாக பயன்படுத்தவில்லை. ஆனால் இப்போதைய நிலையில் மக்கள் ஒன்லைன் முறையை நன்கு அறிந்திருக்கிறார்கள். மேலும் அதன் வசதியை பிற்காலத்திலும் அனுபவிப்பார்கள். மேலும் மொபைல் மூலம் வங்கி அட்டையைக் கொண்டு ரீலோடுகளை, மின்சார கட்டணங்களை, குடிநீர் கட்டணங்களை செலுத்த இலகுவான PAYMASTER எனும் அப்ளிகேஷன் ஒன்றும் உள்ளது. விரும்பினால் டவுன்லோட் செய்து பயனடையலாம்.  https://paymaster.app.link/mntjdiXnz5

 

ஒன்லைன் மருத்துவம் (E-CHANNELING)

கடந்த காலத்தில், நாங்கள் சிறிய தலைவலிக்குக்கூட மருத்துவரிடம் செல்ல வேண்டியிருந்தது. அப்படி இல்லாவிட்டால் ஒரு மருத்துவ மையத்திற்குச் சென்று மருந்து பெற வேண்டியிருந்தது. பெரும்பாலான நோய்கள் எங்கோ இருந்து சிகிச்சையளிப்பதில் சாத்தியம் அற்றதுதான். ஏனெனில் இது மனித வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டது. ஆனால் சாதாரணமான பல் வலி அல்லது தலைவலி போன்ற பொதுவான வியாதிகளுக்கு ஒன்லைன் தொலைபேசி மற்றும் வீடியோ அழைப்பு மூலம் தீர்வு காணலாம். ஏனெனில் இந்த நாட்களில் மருத்துவமனைகளுக்குச் செல்வது அவ்வளவு நல்லதல்ல. ஆகவே பலர் மொபைல் மூலம் மருத்துவ ஆலோசனைகளை பெறுகிறார்கள்.

 

வீட்டிலேயே செய்யப்படும் சாப்பாடு

கடை உணவில் இருந்து சாப்பிடுவதைப் பழக்கமாகக் கொண்ட பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே சமைத்து சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். பேஸ்புக்கில் சென்று பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். கடையுணவிற்கு பழகிய அதிகமான ஆண்கள் மற்றும் பெண்கள் இன்று வீட்டில் அதுவும் விதம் விதமாக சமைத்து சாப்பிடுகிறார்கள். தம்மிடமுள்ள திறமைகள் வெளிப்படும் நேரம் இது.  இந்த பழக்கவழக்கங்கள் வேலை மற்றும் வாழ்க்கையில் பிஸியாக இருப்பது போன்ற பிற காரணிகளால் முன்பு பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த தொற்றுநோயின் முடிவில், சிலவேளைகளில் வீட்டில் இருந்து ஒரு மாஸ்டர் செஃப்கூட உருவாகலாம். உணவகங்களை தேடி ஓடிய கால்கள் இனி வீட்டையே சுற்றிவரும் என்பதில் ஐயமில்லை.

 

வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கை

அரசாங்கத்தின் ஆலோசனையின் பிரகாரம் பலர் இன்று தம்மால் முடிந்தளவு வீட்டுத்தோட்டத்தை வளர்க்க ஆரம்பித்துவிட்டனர். அதனை ஆசையாக படமெடுத்து சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். இது மிகவும் சிறந்த விடயம். சிலருக்கு இதன் மூலம் போதிய உணவையும் பெற்றுக்கொள்ள முடியும். வறுமையாவது ஒரளவு குறையலாம். சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது. எமது உணவுத்தேவை அனைத்திற்கும் அடுத்தவரை நாடும் நிலை இனி குறையும்.

 

சொந்த தயாரிப்புக்கள்

இதுவரை காலமும் இறக்குமதி செய்யப்பட்ட தானியங்கள் போன்ற உணவு வகைகளையும் எமது நாட்டில் உற்பத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உண்மையில் சில அரசியல்வாதிகள் தரகுப் பணத்தை வாங்கிக்கொள்வதால் இலங்கை இறக்குமதியை நம்பியிருக்க வேண்டியுள்ளது. இனி இறக்குமதி குறைவடைந்து இறக்குமதி பொருட்கள் அனைத்தையும் எமது நாட்டில் உற்பத்தி செய்யும் நிலை ஏற்படலாம். ICU படுக்கைகள்,  ரோபோக்கள் போன்றவை எமது நாட்டில் தயாரிக்கப்படும் என யாராவது நினைத்தோமா? இன்று அவற்றையும் எமது நாட்டில் அதுவும் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதைப் பார்த்தால் எம்மவர்களுக்கு முடியாத வேலையென எதுவும் இல்லை. எனவே இனி உணவு முதல் சகல விடயங்களையும் எமது நாட்டிலேயே தயாரித்து பணத்தை சேமிக்க பழகிக்கொள்வோம்.

 

WORK FROM HOME

 

இதுவும் ஒரு முக்கியமான விஷயம்தான். ஊரடங்கு சட்ட உத்தரவுடன் அலுவலகத்தில் இருந்து பணிபுரிய அலுவலர்களால் முடியாததால் பல பணியிடங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் விதத்திற்கு ஏற்றவாறு நிறைய நிறுவனங்களின் வேலைகள் அமைந்துள்ளன. ஆனாலும் இலங்கையிலுள்ள பெரும்பாலான அனைத்து வேலைகளையும் வீட்டிலேயே இருந்து செய்ய முடியாது. உதாரணமாக, உற்பத்திகள், மீன்பிடி, வாகனம் செலுத்துதல் போன்ற பல வேலைகளை வீட்டிலிருந்து செய்ய முடியாது. ஆனால் பல முதலாளிகள் ஒவ்வொரு வேலையும் வீட்டிலேயே இருந்து சாத்தியமாக்குவதில் பிற்காலத்தில் அக்கறை காட்டுவார்கள். காரணம் அது செலவைக் குறைக்கலாம். ஆகவே இனி இவ்வாறான அபாய சூழ்நிலைகள் ஏற்பட்டால் எவ்வாறு வீட்டிலிருந்து வேலை செய்வது என்று நிறுவனங்கள் இனிவரும் காலத்தில் சிந்தித்து அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யலாம்.