தேநீர் வேளையில் சாப்பிட சுவையான ஸ்னாக்ஸ் ரெசிப்பீஸ்

 

தற்போதைய விடுமுறை காலத்தில் அனைவரும்  வீட்டில் இருக்கின்றோம். பெரும்பாலானவர்கள் மாலை தேநீருடன் ஏதாவது சாப்பிடுவார்கள். பொதுவாக கேக், சாண்ட்விச்கள் மற்றும் கட்லெட்டுகளை தான் சாப்பிட்டிருப்போம். லைபீ தமிழ் இன்று நமது வாசகர்களுக்கு ஒரு மாற்றத்தை உருவாக்க முயற்சிக்கவுள்ளது. முன்பு எமது அம்மா, பாட்டி தேநீர் நேரத்திற்கு தயாரித்து தந்த ஏழு சுவையான உணவுகளை இன்று உங்களுக்கு கொண்டுவந்துள்ளோம்.

 

பலாக்கொட்டை உருண்டை

தேவையான பொருட்கள்

 • வறுத்த பலாக்கொட்டை – இரண்டு கப்
 • தேவையானளவு சர்க்கரை
 • உப்பு
 • மிளகு தூள்
 • துருவிய தேங்காய்

 

 • வறுத்த பலாக்கொட்டைகளை நன்கு உரலில் போட்டு இடிக்கவும். அதில் துருவிய தேங்காய் சேர்க்கவும்.
 • உரலில் இருந்து எடுத்து, தேவையானளவு சர்க்கரை, உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து பிசைந்து, உருண்டைகளாக செய்து சாப்பிடவும்.

 

அவல்

தேவையான பொருட்கள்

 • அவல் – 2 கப்
 • துருவிய தேங்காய் – 1 கப்
 • சர்க்கரை – 3/4 கப்
 • கருப்பட்டி வெல்லம் – அரை கப்
 • உப்பு – 1/4 டீஸ்பூன்

 

 • முதலில் அவலைக் கழுவி தண்ணீரை வடிகட்டவும்.
 • பின்னர் எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்து உருண்டை செய்து சாப்பிடவும்.

 

பொரித்த ஈரப்பலா சீவல்

தேவையான பொருட்கள்

 • ஈரப்பலா – ஒரு காய்
 • சர்க்கரை – 1 1/2 கப்
 • வறுக்க தேவையான எண்ணெய்
 • நீர் – 1 கப்

 

 • ஈரப்பலா தோலை சீவி மெல்லியதாக வெட்டுங்கள். பின்னர் கழுவி அவற்றை உலர விடவும். பின்னர் அதை நன்கு பொரித்து எடுத்து கொள்ளவும்.
 • சர்க்கரையும் நீரும் சேர்த்து குறைந்த சூட்டில் பாணி செய்யவும். பொரித்த ஈரப்பலாவை அதில் சேர்த்து கலக்கவும்.

 

சவ்வரிசி ரொட்டி

தேவையான பொருட்கள்

 • சவ்வரிசி – 100 கிராம்
 • துருவிய தேங்காய் – 100 கிராம்
 • பிஸ்கட் தூள் – 100 கிராம்
 • சர்க்கரை – 100 கிராம்
 • உப்பு
 • நீர்

 

 • ஒரு ரொட்டி கலவைக்கு கலப்பதை போல எல்லாவற்றையும் கலந்து, விரும்பிய வடிவங்களில் ரொட்டியை சுட்டு எடுங்கள்.

 

இலப்பை

தேவையான பொருட்கள்

 • சர்க்கரை – 100 கிராம்
 • நீர் – 100 மில்லிலீற்றர்
 • குரக்கன் மா – 100 கிராம்
 • அரிசி மா – 100 கிராம்
 • துருவிய தேங்காய் – 100 கிராம்
 • சுடு நீர்

 

 • முதலில் சர்க்கரை மற்றும் நீர் சேர்க்கவும். அது சிறிது சூடாக இருக்கும்போது, ​​தேங்காய் சேர்த்து நன்கு கலக்கவும். அதில் ஒரு இனிப்பு தேங்காய் கலவையை உருவாக்கவும்.
 • அதில் குரக்கன் மா மற்றும் அரிசி மா சேர்த்து நன்கு கலக்கவும். சிறிது சூடான நீரை சேர்த்து மீண்டும் கிளறவும். பின்னர் சிறு உருண்டைகளாக கையால் செய்து இலைகளின் நடுவில் வைத்து குறைந்தது 15 நிமிடங்கள் அவித்து எடுங்கள்.

 

பாணி பப்படம்

தேவையான பொருட்கள்

 • கோதுமை மா – 200 கிராம்
 • வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
 • தேவைக்கேற்ப உப்பு
 • பேக்கிங் பவுடர் – 1/4 தேக்கரண்டி
 • சர்க்கரை – 150 கிராம்
 • நீர் – 1/2 கப்

 

 • ரொட்டி கலவையின் தன்மை வரும் வரை அனைத்தையும் நன்றாகக் கிளறவும்.
 • அரை மணி நேரம் வைத்து விட்டு பின்னர் மாவை மெல்லியதாக உருட்டி எடுங்கள். பின்னர் அதில் எண்ணெயை தடவி அதன் மேல் சிறிது மா தூவி உருட்டவும்.
 • பின்னர் விரும்பியவாறு பப்படம் போல அல்லது வேறு நீள்வட்டமாக வெட்டி அதை இளஞ்சூட்டு கொதி எண்ணையில் பொரித்து எடுத்து கொள்ளுங்கள்.
 • சர்க்கரை, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து சீனிப்பாணி கலவையை செய்து கொள்ளுங்கள். பிறகு பொரித்த பப்படத்தை பாணியில் போட்டு சாப்பிடுங்கள்.

 

அரிசி அக்கலை உருண்டை

தேவையான பொருட்கள்

 • உலர்ந்த அரிசி – 1 கப்
 • பாதி துருவிய தேங்காய்
 • போதுமான அளவு சர்க்கரை
 • போதுமான அளவு உப்பு

 

 • உலர்ந்த அரிசியை வறுத்து எடுக்கவும். பின்னர் ப்ளெண்டரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
 • பின்னர் அதில் மற்ற பொருட்கள் எல்லாவற்றையும் சேர்த்து உருண்டை செய்து சாப்பிடுங்கள்.
 • அப்படி உருண்டையாக தயாரிப்பது கடினமாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.