இலங்கை ஒரு நடுத்தர காலநிலையைக் கொண்ட நாடு என்பது நம்மில் சிறு பிள்ளைகளுக்குக்கூட தெரியும். ஆனாலும் அவற்றை பற்றி நாம் மீண்டும் அறிந்து கொள்வது அவசியம். ஏனென்றால் கடந்த காலத்தில் இடம்பெற்ற இயற்கை அழிவுகளின் பாதிப்பு இலங்கையின் காலநிலையிலும் ஓரளவு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மிதமான காலநிலை மாறிவிட்டது. இயற்கை பேரழிவுகள் இல்லாத நாடு என்று சொல்ல முடியாத இயற்கை பேரழிவுகளையும் நாங்கள் எதிர்கொள்கிறோம். உதாரணமாக, வருடத்திற்கு ஒரு முறை வறட்சியையும், ஆண்டில் மற்ற நாட்களில் வெள்ளத்தையும் எதிர்பார்த்து இருக்க வேண்டும். சில இடங்களில் நிலச்சரிவுகள்கூட நிகழ்கின்றன. ஆனால் இவை உலகின் மற்றைய சில நாடுகளைப் போல கடுமையானதாக இருக்காதென்பது அதிஷ்டமாகும். எதுவாக இருந்தாலும், உலகின் பிற பகுதிகளில் நாம் காணக்கூடிய அளவுக்கு எளிதில் பார்க்க முடியாத இயற்கை பேரழிவுகள் உள்ளன. அவை தொடர்பாக இன்று பார்ப்போம்.
டொர்னடோ சூறாவளி
டொர்னடோ என்பது மிகவும் பயங்கரமான ஒரு இயற்கை சீற்றம். குறிப்பாக சில திரைப்படங்களில், காட்டும்படி மேகங்களிலிருந்து தரை வரை சுழன்றுதான் செல்லும். வழியில் உள்ள எல்லாவற்றையும் சிதறடிக்கக்கூடியவை. இந்த டொர்னடோ சூறாவளி உருவாகி நீண்ட நேரம் இருக்கவிட்டாலும், மணிக்கு 300–400 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசி, அதன் கண்ணில் பட்டவர்களுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்து செல்ல கூடியது. உதாரணமாக, 1989 ல் பங்களாதேஷில் ஏற்பட்ட டொர்னடோ சூறாவளியில் 1,300 பேர் உயிரிழந்தனர். சில சந்தர்ப்பங்களில் ஒரு சூறாவளி மட்டுமல்லாமல் பல சூறாவளிகளும் ஒரே தடவையில் வர வாய்ப்புக்கள் உள்ளன.
பூகம்பங்கள்
இலங்கையில் பூகம்பங்கள் எமக்கு பழகிய ஒன்றாக இல்லாவிட்டாலும், பூகம்பம் ஏற்படுவது சில உலக நாடுகளில் மிகவும் சாதாரணமான ஒரு இயற்கை நிகழ்வாக மாறிவிட்டது. எப்படியாயினும் இந்த அனர்த்தத்தின் போது ஏராளமான உயிர்களையும் சொத்து சேதங்களையும் ஏற்படுத்துகிறது. இருந்தாலும், இதுவரை நாம் ஒரு பெரிய பூகம்பத்தால் பாதிக்கப்படவில்லை என்றாலும், சிறிதளவு அதிர்வலைகளை நாங்கள் உணர்ந்தோம் என்பது பொய் அல்ல. 2004 சுனாமியும் ஒரு பூகம்பத்தின் அறிகுறியின் பின்னரே வந்தது. பூகம்பங்கள், டெக்டோனிக் தகடுகள் நகரும் போது அல்லது பூமியின் உட்புறத்தில் ஏற்படும் மாற்றங்களுடன் ஒன்றுக்கொன்று மோதுவதால் இவை ஏற்படுகின்றன. இலங்கையில் பூகம்பம் என்பது மிகவும் குறைவாகவே இடம்பெறுகின்றது. ஆனால் இப்போது இலங்கையிலும் நடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதென ஆராய்ச்சியாளர்கள் அறிவிக்கின்றனர்.
எரிமலை வெடிப்பு
எரிமலை என்பது அழிவை ஏற்படுத்தக்கூடிய ஒரு நிகழ்வு என்று சொல்லத் தேவையில்லை. வெடிக்கும் நிலையில் உள்ள பல எரிமலைகளுக்கு பூமியின் நடுப்பகுதியில் உள்ள லாவா குழம்புதான் காரணம். உலக நாடுகளில் பல நாடுகளில் எரிமலை வெடித்து பெரும்பாலான சேதங்கள் ஏற்பட்டு பல உயிர்களையும் காவுகொண்டதை நாம் கேள்விப்பட்டுள்ளோம். உலகில் 173 எரிமலைகள் உள்ள நாடாக அமெரிக்கா இருந்தாலும், இந்தோனேசியாவே உலகில் மிகவும் பயங்கரமான இயக்கத்தில் எந்த நேரமும் வெடிக்க காத்திருக்கும் 76 எரிமலைகளைக் கொண்டுள்ளது. 1815 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவில் நிகழ்ந்ததாகக் கருதப்படும் தம்போரா எரிமலை வெடிப்பு 71,000 க்கும் அதிகமான இறப்புகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
சூறாவளி காற்று
சூறாவளி என்பது குறைந்த அழுத்த மையம், வலுவான இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று ஆகியவற்றைக் கொண்டது. சூறாவளி உண்மையில் அதிவேக காற்றின் மூலம் மற்றும் சுழற்சியின் மூலம் வருவதாலேயே இப்படி பெயரிடப்பட்டது. இவை பூமியின் வெப்பமண்டல பிரதேசங்களில் ஏற்படுவதால் அவை “வெப்பமண்டல சூறாவளிகள்” என்று அழைக்கப்படுகின்றன. இவை எவ்வளவு ஆபத்தானவை என்பதைப் பற்றிய ஒரு யோசனையைப் பெற, 1970 களில் தோன்றியதைப் போல சூறாவளியைப் பார்க்க வேண்டும். இப்போது பங்களாதேஷின் நிலங்களை பேரழிவிற்குள்ளாக்கியுள்ள கத்ரீனா சூறாவளி 500,000 க்கும் மேற்பட்ட உயிர்களை காவுகொண்டது. 2008 ஆம் ஆண்டில், நார்கீஸ் சூறாவளி மியான்மாரைத் தாக்கி 130,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
ஹீட்வேவ்
ஹீட்வேவ் என்பது அதிக வெப்பநிலையால் ஏற்படும் காலநிலை மாற்றமாகும். ஆனால் இந்த வெப்ப அலை இலங்கையில் நாம் சில நாட்களுக்கு முன் அனுபவித்த வெப்பநிலை போன்றதல்ல. அதையும் விட மிக அதிக வெப்பநிலையாகும். இந்த வெப்ப அலை தாழ்வெப்பநிலையா ஏற்படக்கூடும். மேலும் மக்களை நோய்வாய்ப்படச் செய்வது மட்டுமல்லாமல், பயிர்களை காவுகொள்ளும். 2003 ஆம் ஆண்டில், ஐரோப்பா முழுவதும் ஐரோப்பிய வெப்ப அலைகளால் சுமார் 70,000 பேர் இறந்தனர். 2015 ஆம் ஆண்டில் ஹீட்வேவினால் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் சுமார் 2500 பேர் இறந்தனர்.
காட்டுத் தீ
காட்டுத் தீ என்பது உண்மையில் கட்டுப்படுத்த முடியாத தீ என்றும் சொல்லலாம். காட்டுத்தீயில் பல வகைகள் உள்ளன. இலங்கையில்கூட காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. உலகின் பிற பகுதிகளில், குறிப்பாக அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயை, இலங்கையில் ஏற்படக்கூடிய காட்டுத் தீயிற்கு ஒப்பிட முடியாது. பொதுவாக காட்டுத்தீ என்பது இயற்கை காரணங்கள் மட்டுமல்ல, மனித செயற்பாடுகளும் காட்டுத்தீக்கு காரணமாக அமைகின்றன. மனித செயல்களால் அரிய தாவரங்களும் வனவிலங்குகளும் அழிவதே இப்பேரழிவுகளின் விளைவாக உள்ளது.
பனி புயல்கள்
குளிரானது பனி புயல்கள் மிகக் குறைந்த வெப்பநிலை ஏற்படும் சந்தர்ப்பத்தில் ஏற்படுபவை. இந்த வகை புயல், பனியை உருவாக்குவது மட்டுமல்லாமல், புயல் போன்ற காற்றையும் ஏற்படுத்துகின்றது. பனி புயல்களில் மிக மோசமானது blizzard நிலைதான். பொதுவாக நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவு வரை இந்த புயல்களின் பாதிப்பு ஏற்படக்கூடும். இந்த கடுமையான புயல்கள், மக்கள் மற்றும் சொத்துக்களை அழிக்கக்கூடும். 1972 இல் ஈரானில் ஏற்பட்ட கடுமையான பனிப்புயல் 4,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்றது. பின்னர், 1719 இல் நோர்வேயில் ஏற்பட்ட பனிப் புயலில் 3,000 பேர் இறந்தனர்.
சுனாமி
நாங்கள் ஒரே ஒரு சுனாமியை மட்டுமே அனுபவித்துள்ளதால், அதையும் இந்த பட்டியலில் சேர்த்துள்ளோம். சுனாமி என்பது கடலில் உள்ள சீதோஷண நிலை என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் இவை கடலில் ஏற்படக்கூடிய கடல்சார் பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள், மனிதனால் உருவாக்கப்பட்ட பாதிப்புகள் போன்றவற்றால் ஏற்படலாம். எப்படியிருந்தாலும், பாரிய அலைகள் இந்த வழியில் உருவாகக்கூடிய பேரழிவு மிகப்பெரியது. இதற்கு சிறந்த உதாரணம் 2004 ல் இலங்கையைத் தாக்கிய பாரிய சுனாமி. இலங்கையில் மாத்திரம் சுமார் 31,000 பேர் இதில் உயிரிழந்தனர். உலகளவில் 227,898 பேர் உயிரிழந்தனர்.
இவற்றை பார்த்து விட்டு நமது நாடு மிகவும் அதிஷ்டசாலி என்று தெரிகிறது என்றாலும், ஆனால் இதுபோன்ற இயற்கை பேரழிவுகளை நாம் ஒருபோதும் சந்திக்க வாய்ப்பில்லை என்று கற்பனை செய்யாதீர்கள். எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.