வீட்டிலேயே செய்யக்கூடிய சுவையான கப் கேக் ரெசிப்பீஸ்

 

புதிய சுவைகளை நாடுவதில் மனிதர்கள் என்றும் தனித்துவமானவர்கள். கப் கேக் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். சுவை சற்று வித்தியாசமாக இருக்கும். அந்த சுவைகளையும் விட வித்தியாசமான சுவையுடைய சில கப் கேக் வகைகள் பற்றிய செய்முறைகளை இன்று கொண்டுவந்துள்ளோம். இப்போது விடுமுறையில் இருக்கின்றீர்கள் தானே? முடிந்தால் செய்துபாருங்கள். அவற்றை சாப்பிட்டுவிட்டு எமது முகப்புத்தகத்தில் கருத்துப் பகிர மறக்காதீர்கள்.

 

மோக்கா கப்கேக்

தேவையான பொருட்கள்

  • முட்டை – 2
  • வெணிலா அசன்ஸ் – 1 தேக்கரண்டி
  • பால் – 1 கப்
  • கோதுமை மா – 1 1/2 கப்
  • பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
  • உப்பு – 1/2 தேக்கரண்டி
  • கோகோ தூள் – 1 மேசைக்கரண்டி
  • கோப்பி தூள் – 1 மேசைக்கரண்டி (நெஸ்கோஃபியாக இருப்பது சிறந்தது)
  • சர்க்கரை – 1 கப் மற்றும் 3 மேசைக்கரண்டி
  • வெண்ணெய் – 1 கப்
  • புளிப்பு கிரீம் – 4 மேசைக்கரண்டி
  • சொக்கலேட் சிப்ஸ் – 1/4 கப்

 

  • கோதுமை மாவில் பேக்கிங் பவுடர், கோகோ பவுடர் மற்றும் உப்பு சேர்த்து மூன்று முறை அரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பாலில் நெஸ்கொஃபி பவுடர் சேர்த்து கிளறவும்.
  • வெண்ணெய் மற்றும் 1 கப் சர்க்கரை சேர்த்து நன்றாக அடித்து எடுக்கவும். அதில் வெணிலா சேர்க்கவும்.
  • இரண்டு முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளுங்கள். இப்போது புளிப்பு கிரீம் சேர்க்கவும். இப்போது கிளறிக்கொண்டே, கொஃபி சேர்த்த பாலை சேர்த்து கலக்கி கிளறவும். இப்போது அரித்த மாவையும் சேர்த்து ஒன்றாக கிளறவும்.
  • இந்த கேக் கலவைக்கு சொக்கலேட் சிப்ஸ் சேர்க்கவும். முட்டையின் வெள்ளைக் கருவை தனியாக அடித்து வைத்து கொள்ளவும். அதில் 3 மேசைக்கரண்டி சர்க்கரை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும்.
  • இப்போது இந்த வெள்ளை கருக்கலவையை கேக் கலவையில் சேர்த்து ஒரு பாத்திரத்தில் பிரட்டிக் கொள்ளுங்கள்.
  • கப்கேக் லைனர்கள் உள்ள ஒரு மஃபின் தட்டில் வைத்து, 180 ° C வரை சூடான ஹவனில் 20 நிமிடங்கள் பேக் செய்ய வேண்டும்.

 

வாழைப்பழ கப்கேக்

தேவையான பொருட்கள்

  • சர்க்கரை – 1 கப்
  • மா – 1 கப்
  • பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
  • உப்பு – 1/2 தேக்கரண்டி
  • இலவங்கப்பட்டை தூள் (விரும்பினால்) – 1/2 தேக்கரண்டி
  • 2 முட்டை
  • மரக்கறி எண்ணெய் – 2/3 கப்
  • வெணிலா அசன்ஸ் – 2 தேக்கரண்டி
  • புளிப்பு வாழைப்பழங்கள் – 2
  • உலர்ந்த அனைத்து பொருட்களையும் முதலில் சேர்த்து கலக்கவும். அதன்பிறகு அதில் முட்டை மற்றும் மரக்கறி எண்ணெயைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • கடைசியாக வாழைப்பழத்தை சேர்த்து நன்கு கிளறவும். லைனர்கள் கொண்ட ஒரு மஃபின் தட்டில் வைத்து 180C ° ஹவனில் 20 நிமிடங்கள் பேக் செய்ய வேண்டும்.

 

லெமன் கப் கேக்

தேவையான பொருட்கள்

  • வெண்ணெய் – 1/2 கப்
  • சர்க்கரை – 1/2 கப்
  • முட்டை – 2
  • கிரேப் செய்த ஆரஞ்சு தோல் – 1/2 கப்
  • எலுமிச்சை சாறு – 4 மேசைக்கரண்டி
  • பால் – 1/2 கப்
  • கோதுமை மா – 1 கப்
  • பேக்கிங் பவுடர் – 3/4 தேக்கரண்டி
  • உப்பு – ஒரு சிட்டிகை

 

  • வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து பீட் செய்து கொள்ளவும். அதில் முட்டைகளை ஒவ்வொன்றாக சேர்த்து பீட் செய்யவும். இப்போது அரைத்த ஆரஞ்சு தோலையும் சேர்க்கவும். எலுமிச்சை சாறையும் அதோடு சேர்க்கவும். தொடர்ந்து கிளறும்போது பாலையும் சேர்க்கவும்.
  • ஒரு தனி பாத்திரத்தில், மா, உப்பு மற்றும் பேக்கிங் பவுடரை ஒன்றாக சேர்த்து அரித்து எடுக்கவும். இப்போது முட்டை கலவையில் அரித்த மாவு சேர்த்து கிளறவும். மஃபின் தட்டுக்கள் ஊற்றி 180 செல்ஷியஸில் 20 நிமிடங்கள் பேக் செய்துகொள்ளுங்கள்.

 

சொக்கோ கோஃபி கப் கேக்

தேவையான பொருட்கள்

  • இன்ஸ்டன்ட் கோஃபி தூள் – 1 மேசைக்கரண்டி
  • கோகோ பவுடர் – 1 தேக்கரண்டி
  • உப்பு – 1 தேக்கரண்டி
  • வெணிலா – 1 1/2 தேக்கரண்டி
  • பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
  • பால் – 1 கப்
  • முட்டையின் மஞ்சள் கரு – 2
  • புளிப்பு கிரீம் (SOUR CREAM) – 4 தேக்கரண்டி
  • வெண்ணெய் – 1 கப்
  • சர்க்கரை – 3 மேசைக்கரண்டி
  • கோதுமை மா – 1 1/2 கப்

 

  • கோதுமை மாவில் பேக்கிங் பவுடர், உப்பு மற்றும் கொக்கோ பவுடர் சேர்த்து அரிக்கவும்.
  • பாலில் கோஃபி தூள் சேர்த்து கரைக்கவும். வெண்ணெயில் வெணிலா அசன்ஸை சேர்த்து கலக்கவும்.
  • அதில் கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரை சேர்க்கவும். இதில் புளிப்பு கிரீம் சேர்க்கவும். கிளறும்போதே இரண்டு முட்டையின் மஞ்சள் கருக்களை சேர்க்கவும். இப்போது இதில் பால் கலவையை சேர்த்து தொடர்ந்து கிளறவும்.
  • இந்த கலவையில் மா சேர்த்து கிளறவும். கப் கேக் மஃபின் தட்டில் வைத்து 180 செல்ஷியஸிற்கு சூடான ஒவனில் 20 நிமிடங்கள் பேக் செய்ய வேண்டும்.

 

கோஃபி பேஸ்டுக்கு தேவையான பொருட்கள்

  • இன்ஸ்டன்ட் கோஃபி தூள் – 1 தேக்கரண்டி
  • கோகோ பவுடர் – 1 தேக்கரண்டி
  • நீர் – 1 தேக்கரண்டி

 

  • இதையெல்லாம் ஒன்றாக சேர்த்து கலக்கவும்.

 

ஐசிங்கிற்கு

  • ஐசிங் சர்க்கரை – 3 கப்
  • வெணிலா – 1 தேக்கரண்டி
  • வெண்ணெய் – 1/2 கப்
  • மஸ்கார்போன் சீஸ் – 200 கிராம்

 

  • மஸ்கார்போன் சீஸ் மற்றும் வெண்ணெய் சேர்த்து ஒன்றாக கிளறவும். அதில் ஐசிங் சர்க்கரை சேர்க்கவும். இப்போது இந்த ஐசிங் கலவையில் சிறிது எடுத்து கோஃபி பேஸ்டுடன் கலக்கவும்.
  • இப்போது பேக் செய்த கப் கேக் நடுவில் ஒரு துளையிட்டு அதில் ஐசிங் காபி நிரப்பவும். இப்போது இதற்கு மேல் ஐசிங் கலவையை போட்டுக்கொள்ளவும். அதன் மீது சிறிது துருவிய சொக்கலேட்டையும் தூவிக்கொள்ளவும்.

 

ஆப்பிள் கப் கேக்

தேவையான பொருட்கள்

  • பெரிய ஆப்பிள் – 1
  • தூளாக்கிய சர்க்கரை – 125 கிராம்
  • கோதுமை மா – 125 கிராம்
  • மரக்கறி எண்ணெய் – 125 மில்லி
  • முட்டை – 2
  • பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
  • வெணிலா – 1 தேக்கரண்டி
  • பால் – 1/2 கப்

ஆப்பிள் கலவைக்கு

  • சர்க்கரை – 4 மேசைக்கரண்டி
  • நொறுக்கப்பட்ட ஏலக்காய், கராம்பு
  • இலவங்கப்பட்டை பட்டை – ஒரு துண்டு

 

  • ஆப்பிளின் தோலை அகற்றி துண்டுகளாக வெட்டவும். மஞ்சள் நிறமாவதை நிறுத்த எலுமிச்சை சாறு கலந்த நீர் கரைசலில் ஆப்பிள்களை போட்டு வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் 4 மேசைக்கரண்டி சர்க்கரையை போட்டு 4 மேசைக்கரண்டி நீரும் சேர்த்து அடுப்பில் வைக்கவும். அதில் சில ஏலக்காய் மற்றும் கராம்புகளை நறுக்கி போடவும். விரும்பினால், இலவங்கப்பட்டை ஒரு தூண்டும் போடவும். இதை நன்கு வடிகட்டிய பின், நீரில் இருந்து சர்க்கரை பாகை நீக்கி ஈரமான ஆப்பிள்களில் வைக்கவும்.
  • அரைத்த சர்க்கரையை மரக்கறி எண்ணெயில் சேர்த்து கிளறவும். அதில் 2 முட்டைகள் சேர்க்கவும். இப்போது பேக்கிங் பவுடர் சேர்த்து அரித்து எடுத்த மாவையும் போட்டு கிளறவும். அத்துடன் சிறிது சிறிதாக பால் சேர்க்கவும்.
  • இப்போது ஒரு மஃபின் தட்டில் வைத்து ஆப்பிள் துண்டுகளை கீழே போட்டு கேக் கலவையை மேலே ஊற்றவும். 20 நிமிடங்கள் சூடான ஒவனில் 180° C வரை பேக் செய்ய வேண்டும்.